சென்னை எக்மோர் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள சங்கீதா ஹோட்டலில் வெளியூர் செல்லும் பயணிகள் எவ்வித உணவுப்பொருளும் பார்சல் வாங்கி செல்லாதீர்கள். வெளியூர் செல்லும் ரயில் பயணிகளுக்கு இவர்கள் பார்சல் கட்டி கொடுக்கும் வடை தோசை சட்னி சாம்பார் என அனைத்தும் ஊசிப்போன பண்டமாக இருக்கின்றன. இந்த மாதம் மட்டும் இரண்டுமுறை இப்படி ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. மாலை 6 30 க்கு பார்சல் வாங்கிய தோசை வடை சட்னி சாம்பார் அனைத்தும் 8 மணிக்கு ரயிலில் அமர்ந்து உண்ண பிரிக்கும் போது மொத்தமாக ஊசிப்போயிருந்தன. சரி எதோ ஒரு முறை இப்படி அகிவிட்டது என நினைத்து அடுத்த முறை ஊசிப்போன சமாச்சாரத்தை ஹோட்டல் காரர்களிடம் சொல்லி நல்லதாக கொடுங்கள் என்று கேட்டு வங்கி சென்ற அந்த முறையும் அதே பிரச்சனை. வங்கியவடை சம்பாருக்குள் நுரை தள்ளி இருந்ததென்றால் பாருங்கள். எப்படிப்படட ஊசிப்போன உணவுப்பாருளை இந்த சங்கீதா ஹோட்டல் காரர்கள் பார்சல் வாங்குபவர்கள் தலையில் கட்டுகிறார்கள். இத்தனைக்கும் எக்மோர் ரயில் நிலையம் முன்னேயே இருக்கும் அதிக மக்கள் அவசரத்திற்கு இரவு உணவை பார்சல் வங்கி செல்லும் ஹோட்டல் இது. 6 மணிக்கு வாங்கும் பண்டம் 8 மணிக்குள் கேட்டுப் போகும் என்றால் இவர்கள் மலையில் மக்களுக்கு பார்சல் கொடு்ப்பதெல்லாம் காலை சமைத்த உணவில் மீந்து போனவைகளா? பொது நலன் கருதி மீண்டும் சொல்கிறேன்..எக்மோர் ரயில் நிலையம் எதிரில் இருக்கும் சங்கீதா ஹோட்டலில் யாரும் ரயில் பயணத்திற்க்காக இரவு உணவு வாங்கதீர்கள். மக்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு புளித்து ஊசிப்பபோன பண்டத்தை பார்சலாக தருகிறார்கள். யாருக்கேனும் எக்மோர் ரயில் நிலையம் எதிரே உள்ள சங்கீதா ஹோட்டலில் ஊசிப்போன உணவு வாங்கி சாப்பிடாமல் குப்பையில் கொட்டி பசியுடன் இரவு பிராயணித்த அனுபம் உண்டா? பகிருங்கள் ப்ளீஸ்...!!!!😰
No comments:
Post a Comment