Tuesday, 28 February 2017

கிறிஸ்தவ நண்பர்களுக்கு 📿 சாம்பல்புதன் வாழ்த்துக்கள்

கிறிஸ்தவ நண்பர்களுக்கு 📿
சாம்பல்புதன் வாழ்த்துக்கள்...............☻☻☻

தவக்காலங்களில் கடைபிடிக்க ஒழுங்குகள் :

1. சாம்மல் புதன் (விபூதிப்புதன்) அன்றும், பெரிய வெள்ளி அன்றும் கட்டாய ஒருசந்தி, சுத்தபோசனம் கடைபிடிக்கப்பட வேண்டும்      குறிப்பு: சிறுவர்கள் தவிர (முடியாத நோயாளிகள் தவிர) ஒருசந்தி – காலை உணவு உண்ணாதிருத்தல், சுத்தபோசனம்- அசைவம் சாப்பிடாதிருத்தல்

2. எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் ஒருசந்தி, சுத்தபோசனம் கடைபிடித்தல் (சிலர் 40 நாட்களும் இருப்பார்கள்)

3. தவக்காலம் முழுவதும் மாமிசம் சாப்பிடாதிருத்தல்.

4. வெள்ளிக்கிழமைகளில் பெரிய சிலுவைப்பாதையிலும், அனுதினமும் சிறிய சிலுவைப்பாதையிலும் பங்கேற்றல்.

5. புனித வாரம் முழுவதும் சுத்த போசனம் கடைபிடித்தல் (கடைசி வாரம்)

6. நம்மாலான ஒறுத்தல் முயற்சிகளை செய்தல். உதாரணம்: சினிமா பார்க்காடிருத்தல், டி.வி.சீரியல்கள் தவிர்த்தல், ஆபாச நிகழ்ச்சிகள், பாடல்கள், படங்கள் பார்க்காதிருத்தல், பெண்கள் தலைக்கு பூ வைக்காதிருத்தல், குடிப்பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்துதல் ( ஈஸ்டருக்கு பின்பும் அதை கைவிட முயற்சி எடுக்க வேண்டும்)

7. மேலும் ஒறுத்தல் முயற்சிகள் : தேவையற்ற பேச்சு, உறையாடல்களைத் தவிர்த்தல் புரணி பேசுதல், தீய சொற்கள் பேசுதல், நமக்கு அதிகமாக பிடிக்கும் விசயங்களை ஆண்டவர் இயேசுவின் பாடுகளை நினைத்து அவற்றை செய்யாதிருத்தல் மிகப்பெரிய ஒறுத்தல் முயற்ச்சியாகும். அதே நேரம் நமக்கு பிடிக்காத விசயங்கள் நமக்கு நடக்கும்போது அதை அமைந்த மனதுடன் முனுமுனுக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வதும் மிகப்பெரிய ஒறுத்தலே. இந்த இரகசியத்தை கண்டுபிடித்து கடைபிடித்ததால்தான் நிறைய புனிதர்கள் நமக்கு கிடைத்தார்கள்.

8. தவக்காலத்தில் ஒருசந்தி இருக்கும்போது மிச்சமாகும் பணத்தை சேர்த்து வைத்து ஏழைகளுக்கு கொடுத்தல். அவர்கள் பசி போக்குதல்.

9. எப்போதும் ஆண்டவர் இயேசுவின் பாடுகளைத் தியானித்துக்கொண்டே இருத்தல். வேலைகள் செய்யும் போது கூட இடை இடையே அவரை தியானிக்கலாம்.அவருடன் பேசலாம்.

10. ஜெப, தவ, பரித்தியாகங்கள் அதிகமாக செய்தல்.

11. புனிதர்கள் வரலாறுகளை வாங்கிப் படித்தல்

12. அதிகமாக திருப்பலிகளில் பங்கேற்றல், சிலுவைப்பாதைகளை சந்தித்தல்.

13. அன்பியமாக, குழுக்களாக நோயாளிகள், சிறைக்கைதிகளை சந்தித்து அவர்களுக்காக ஜெபித்தல்.

14. நமக்கு வரும் துன்பங்கள் கஷ்ட்டங்களை அமைந்த மனத்தோடு ஏற்று நம்முடைய பாவங்களுக்காகவும், பிறரின் பாவங்களுக்காகவும் அவற்றை கல்வாரி நாயகனின் சிலுவைப்பாடுகளோடு ஒப்புக்கொடுத்தல்.
.
15. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் நாம் இயேசு கிறிஸ்துவாக வாழ முயற்சித்தல்..

( மேலும் சில தவக்கால அறிவுரைகளை சகோதர சகோதரிகள் கொடுங்கள். உங்கள் அனுபவங்களை பகிருங்கள். மேலே சில முக்கியமான நம் திருச்சபை தரும் கடமைகள் (1-5) தவிர மற்றவையெல்லாம் நாம் தவக்காலங்களில் கடைபிடித்து வருபவைகள்தான். இது ஒரு நினைவூட்டல்தான். புதிதாக சொல்லவில்லை.)

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing