Tuesday, 21 March 2017

மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெற‌ மனநல நிபுணர்கள் கூறும் வழிமுறைகள்

மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெற‌ மனநல நிபுணர்கள் கூறும் வழிமுறைகள்

சுவாசம்:

கீழை நாடுகள், மேலை நாடுகள்இரண்டுமே ஒப்பு க்கொள்கிற உத்தி இது. ஆழ்ந்த சுவாசத்தின்மூல ம் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவு அதிகரிப்பதா ல் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மன
ம் இயல்புநிலை அடைகின்றது. அடி வயிற்றில்கையை லேசாக அழுத்தி க்கொண்டு ஆழமாக சுவாசிப் பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளை யும், உடலும் மனமும் தளர்வுநிலை அடைவதையும் கண்கூடாக உணர லாம்.

மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்:

உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை.

புன்னகையின் சக்தி:

மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வள வு உண்மையோ, புன்னகைக்கும் போ தெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொ டங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலு ள்ள தசைகளை அசைத்து, பாதுகாப் பான உணர்வை மூளைக்கும் கொண் டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போது ம் நிகழ்கிறது என்கிறார் டாக்டர் கூப்பர். புன்னகையி ன் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாரு ங்களேன்.

கடைவாய் – ஒரு ரகசியம்:

மனதில் உருவாகும் அழுத் தம் வந்து படிகிற இடங்க ளில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடு வதும், அழுத்தத்தின் சுவடுக ளை உடலில் தங்காமல் வெ ளியேற்ற மேலைநாட்டு ஆய் வாளர்கள் கண்டு பிடித்திருக் கின்ற வழி.

மனம் சொல்லும் மந்திரம்:

நம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங் களை மனதுக்குள் உருவாக்கி க்கொள்வது மேலை நாட்டின் பாணி. நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது. “எல்லா ம் செய்யக் கூடும்”, “நடப்பதெ ல்லாம் நன்மைக்கே” என்று எத்தனையோ வாசகங்க ள், மனதுக்கு சக்திதரும். மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றை ப் பத்து பதினைந்து முறை கள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.

அடுத்தது என்ன…..?

மனஅழுத்தத்திற்கு ஆளாகிற பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க் க முடியாமல் தவிக்கிறார்கள். “ எனக்கேன் இது நிகழ்ந்தது? மற்ற வர்களுக்கு இப்படி இல்லையே” என்கிற எண்ணங்கள் எழும்போ து தன்னிரக்கம் நம் செயல் திறனை மேலும் பாதிக்கிற து. மாறாக, அடுத்தது என்ன?” என்ற அணுகுமுறையைக் கைக்கொள்கிறபோது, செ யல்படவேண்டும் என்ற தூ ண்டுதல் வேகம் பெறுகிறது.

மூன்று முக்கிய இடங்கள்:

பெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின் இய க்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத் தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.

1. புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல்.

2. பின் கழுத்தில் அழுத்தம் தருதல்.

3. கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டை க்கும் மத்தியில் அழுத்தம் தருதல்.

அழுத்தத்தின் கனத்தை உணரும் அளவு அழுத்தலாம். அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மனஅழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்து சக்தியை மூளைக்கு வழங்கும்.

நடைப்பயிற்சி நலம் தரும்:

நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கி விட்
டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திரு க்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது.

வஜ்ராசனத்தின் வல்லமை:

மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர் கள் மட்டுமல்ல. நியூயார்க்கி ல் உள்ள எக்யூனாக்ஸ் ஃபிட் னஸ் சென்டரின் இயக்குநர் மோலி ஃபாக்ஸ் கூடத்தான்.

குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின் மீது சிறிது நேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம்.      மெல்லக் குனிந்து முன் நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள்.(இதை இஸ்லாமியர்கள் தங்களின் ஒவ்வொரு தொழுகைகளிலும் க‌டை ப்பிடிக்கிறார்கள்)

பிரார்த்தனை:

மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை                        விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை.

நிமிர்ந்து அமருங்கள்:

சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். முதுகுத் தண் டை நிமிர்த்தி நேராக, ஜோராக உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ் ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing