Monday, 13 March 2017

மோடி ஒரு சாமானியர் ; வாழ்க்கை வரலாற


1950ம் ஆண்டு செப்டம்பர்மாதம் வடக்கு குஜாத்தின், மேஹசனா மாவட்டத்தில் வத்நகர் என்ற குக்கிராமத்தில் பிறந்தார் நரேந்திர மோடி. தாராளமனது , பெருந்தன்மை, சகிப்புத்தன்மை, சமூகசேவையாற்றும் எண்ணம் ஆகிய சூழலின் கீழ் அவர் வளர்ந்தார். இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரின் போது, சிறு வயதில் இருந்த மோடி, படைவீரர்களுக்கு உணவு கொண்டு சென்றுகொடுத்த குழுவில் இடம் பெற்றிருந்தார்.

1967ம் ஆண்டு, குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். சிறந்தநிர்வாக ஒருங்கிணைப்பு திறமையை கொண்டிருந்த மோடி, மனித உணர்வுகளை புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவராகவும் விளங்கினார். அகில பாரத வித்யார்த்திபரிஷத் அமைப்பிலும், பல்வேறு சமூக அரசியல் இயக்கங்களிலும் பங்கெடுத்துள்ளார் மோடி.

சிறுவயது முதலே அவர் பல்வேறு தடைகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்துப்போராடி வென்றுவந்துள்ளார். தன் முன் இருந்த சவால்களை உடைத்து அவற்றை வாய்ப்புகளாக மாற்றிவிடுவார். தனது குணாதிசயத்தின் பலத்தாலும், தைரியத்தாலும் முன்னேறியவர் மோடி. அவர் கல்லூரியிலும், பின்னர் பல்கலைக் கழகத்திலும் சேர்ந்தபோது, அவரது பாதைநெடுகிலும் கடுமையான போராட்டங்களே நிரம்பியிருந்தன. ஆனால் வாழ்க்கை போராட்டத்தில் எப்போதுமே அவர் ஒருபோராளியாகவே திகழ்ந்தார். உண்மையான வீரராக பரிமளித்தார்.

ஒருமுறை அடியெடுத்து வைத்து விட்டால் அவர் திரும்பி பார்ப்பதே இல்லை. தோல்வியை அவர் ஏற்கவேமாட்டார். தோல்வியையே தழுவாதவரும்கூட. ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து முதலில்தனது செயல்பாட்டைத் தொடங்கினார். அப்போது அவர் பலமுக்கியப் பணிகளை ஆற்றியுள்ளார்.

1974ம் ஆண்டு நடந்த நவ்நிர்மான் ஊழல் எதிர்ப்புப்போராட்டம் அதில் ஒன்று. அதேபோல, 1975 முதல் 77 வரையிலான 19 மாதகால அவசர நிலைச் சட்டத்தின் போதும் அவர் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் தீரமுடன் பங்கேற்றார்.இந்தக் காலகட்டம் முழுவதும் அவர் தலைமறைவாக இருந்து போராட்டங்களில் பங்கேற்றார்.

1987ம் ஆண்டு பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் இறங்கினார். அடுத்த ஒரு வருடத்திலேயே அவர் குஜராத்மாநில பொதுச் செயலாளர் பதவிக்கு உயர்ந்தார். அந்த சமயத்தில் அவர் ஒரு சிறந்த ஒருங்கிணைப்பாளராக பெயர்பெற்றிருந்தார். கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டி சரியான பாதையில் செலுத்தும் பணியை அவர் விரும்பி ஏற்றுசெயல்பட்டார்.

1990ம் ஆண்டு மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைய பாடுபட்டார். இந்த நிலையில் குஜராத்தில் 1995ம் ஆண்டு பாஜாக மூன்றில் இரண்டு மடங்கு மெஜாரிட்டியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. அன்று முதல் இன்று வரை பாஜகவே குஜராத்தில் ஆட்சி நடத்தி வருகிறது.

1988 முதல் 95 வரையிலான காலகட்டத்தில் மிகச்சிறந்த திட்டமிடுபவராக செயல்பட்டார் மோடி. குஜராத் பா.ஜ.க.,வை ஆளுங் கட்சியாக்க தேவையான அடிப்படைப்பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தவர் என்ற பெயரையும் பெற்றார். இந்தசமயத்தில் இரண்டு முக்கியமான தேசிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பணியும் அவருக்கு வந்துசேர்ந்தது. அதில் ஒன்று சோம்நாத் முதல் அயோத்தி வரையிலான அத்வானியின் ரதயாத்திரை. அதேபோல கன்னியா குமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான யாத்திரை.

1998ம் ஆண்டு டெல்லியில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்ற இந்த இரண்டு யாத்திரைகளும்தான் முக்கியக்காரணம். இதை திறம்பட நடத்திக் காட்டியவர் மோடி.

1995ம் ஆண்டு பாஜகவின் தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்டார் மோடி. ஐந்து முக்கிய மாநிலங்களின் பொறுப்பாளர் பணி அவருக்குத் தரப்பட்டது 1998ம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக உயர்ந்தார். 2001 அக்டோபர் வரை இப்பொறுப்பை அவர் வகித்தார். அதன் பின்னர் அவர் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

தேசிய அரசியலி்ல அவர் இருந்தபோது, பல்வேறு மாநிலகட்சி நிர்வாகங்களை கவனிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக முக்கியமான ஜம்முகாஷ்மீர் மாநில பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டது. அதேபோல வடகிழக்கு மாநிலங்களின் பாஜக நிர்வாகங்களையும் அவர் கவனித்தார்.

தேசிய அளவில் பணியாற்றிய போது கட்சியின் முக்கியச் செய்தித் தொடர்பாளராகவும் விளங்கினார் மோடி. அப்போது அவர் பலமுக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் கிட்டின.

இந்த காலகட்டத்தில் அவர் உலகம் முழுவதும் பல்வேறு பயணங்களை மேற்கொண்டு முக்கிய உலகத் தலைவர்களை சந்தித்துள்ளார். இந்த அனுபவம், அவருக்கு உலகளாவிய பார்வையைக் கொடுக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும், இந்தியாவுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற வேட்கையையும் ஏற்படுத்தி கொடுத்தது.

2001ம் ஆண்டு அக்டோபர் மாதம், குஜராத்மாநில பாஜக ஆட்சிக்குத் தலைமை தாங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார் மோடி. அக்டோபர் 7ம் தேதி மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற போது, குஜராத் மாநிலம் பொருளாதார சீர்குலைவில் இருந்தது. பல இயற்கைச்சீற்றங்கள், மிகப்பெரிய நிலநடுக்கம் போன்றவற்றால் பெரும்பாதிப்பில் இருந்தது குஜராத். இருப்பினும், மோடி, மிகச்சிறப்பாக செயல்பட்டு, தனது அனுபவத்தால், அத்தனை துயரங்களிலிருந்தும் குஜராத்தை மீட்டெடுக்க ஆரம்பித்தார்.

முதல்வராக அவர் பொறுப்பேற்றபோது அவர் முன் இருந்த மிகப்பெரிய சவால், 2001ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகள்தான். பூஜ் நகரம் தான் மிகப்பெரிய சீரழிவை சந்தித்திருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்கியிருந்தனர். எந்த அடிப்படை வசதியும் அங்கு இல்லை. ஆனால் இன்று பூஜ்நகரத்தை மிகச்சிறந்த நகரமாக மாற்றியுள்ளார் மோடி.

மறுசீரமைப்பும், மறுவாழ்வுப் பணிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், தொலை நோக்குப் பார்வையுடன் மறுபக்கம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார் மோடி. குஜராத் மாநிலம் எப்போதுமே தொழில் வளர்ச்சியை மட்டுமே பார்த்தபடி வளர்ந்து வந்தது. அதை மாற்றி, சமூக பிரிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, சமூக பொருளாதார வளர்ச்சியை சரிவிகித சமானத்தில் கவனிக்க ஆரம்பித்தார் மோடி.

இதன் விளைவாக உதித்ததுதான் பஞ்சம்ருத் யோஜனா. அதாவது ஐந்து முனை வளர்ச்சித் திட்டம் என்பதாகும்.

அவருடைய தலைமையின் கீழ், குஜராத் மிகப் பெரிய மாற்றத்தை பல்வேறு பிரிவுகளில் சந்தித்தது. கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் பல்வேறு பிரிவுகளில் வளர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது. குஜராத் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு செயல்பட ஆரம்பித்தார் மோடி.நிர்வாக கட்டமைப்பை மாற்றியமைத்தார். இப்படி பல்வேறு பணிகள் மூலம் குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் நடை போட வைத்தார் மோடி.

முதல்வராகப் பதவிக்கு வந்த 100 நாட்களிலேயே அவரது தொலைநோக்கும், திறமையும், குறிக்கோள்களும் அனைவராலும் உணரப்பட்டன. இவை அனைத்தும் 2002 டிசம்பரில் குஜராத்தில் நடந்த பொதுத் தேர்தலில் இரட்டிப்புப் பலன்களைக் கொடுத்தன. மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது, பெரிய பலத்துடன். மொத்தம் உள்ள 182 இடங்களில் 128 இடங்களை மோடி அரசு கைப்பற்றியது.

இதே வெற்றி 2007 தேர்தலிலும் எதிரொலித்தது. மீண்டும் ஒரு சாதனை வெற்றியுடன் பாஜக, மோடி தலைமையில் குஜராத்தில் ஆட்சியைப் பிடித்தது. 2012ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதியுடன் 4000 நாட்களை மக்கள் பணியில் நிறைவு செய்தார் மோடி.

தொடர்ந்து மூன்று தேர்தலில் மக்களின் ஆசியுடன் ஆட்சியமைக்கும் அரிய வாய்ப்பையும் மோடி பெற்றார். 2002, 2007 தேர்தல் வெற்றிகளைத் தொடர்ந்து 2012ல் நடந்த பொதுத் தேர்தலிலும் குஜராத் பாஜக, மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. குஜராத் முதல்வராக நான்காவது முறையாக 2012, டிசம்பர் 26ம் தேதி பதவியேற்றுக் கொண்டார் மோடி.

இன்று மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டின் முன்னணி மாநிலமாக குஜராத் திகழ்கிறது. மின் ஆளுமை, முதலீடுகள், வறுமை ஒழிப்பு, மின்சார உற்பத்தி, பொருளாதார மண்டலங்கள், சாலை வசதிகள், நிதி ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குஜராத் முதன்மையான இடத்தில் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் குஜராத் வளரவில்லை. மாறாக, அனைத்து முக்கியத் துறைகளிலும், அதாவது விவசாயம், தொழில் மற்றும் சேவை என்று வளர்ந்துள்ளது. இந்த மாபெரும் வளர்ச்சிக்குப் பின்னால், மோடியின் சப்கா சாத், சப்கா விகாஸ் ஆகியவை உள்ளன. மக்களுக்காக, மக்களுக்கான நல்லாட்சி என்பதே மோடியின் தாரக மந்திரமாக உள்ளது.

அனைத்து அவ நம்பிக்கைளுக்கு எதிராகவும், நர்மதா அணையின் உயரம் 121.9 மீட்டராக உயர்த்தப்பட்டது. இந்த கட்டுமானத்திற்கு எதிராகப் போராடியவர்களை எதிர்த்து மோடியே உண்ணாவிரதம் இருந்தார். நீர்ப் பாதுகாப்புக்கு நர்மதா அணை ஒரு மிகப் பெரிய உதாரணமாகத் திகழ்கிறது.

சோயில் ஹெல்த் கார்ட், ரோமிங் ரேஷன் கார்டு, ரோமிங் ஸ்கூல் கார்டு போன்றவை சாதாரண மக்கள் மீது மோடிக்கு உள்ள அக்கறையைக் காட்டுவதாக உள்ளது.

அதேபோல கிரிஷி மகாத்சோவ், சிரஞ்சீவி யோஜனா, மாத்ரு வந்தனா, பேட்டி பச்சாவ், ஜோதிகிராம் யோஜனா, கர்ம்யோகி அபியான், இமம்தா, இஎம்பவர், ஸ்கோப், ஐகிரியேட் போன்றவை பன்னோக்கு வளர்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. இவையெல்லாம் அடுத்த தலைமுறையையும் சேர்த்து அக்கறைப்படும் மோடியின் திறமையான தலைமைத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

இளமையான சிந்தனைகளுடன் கூடிய தலைவராக மோடி திகழ்கிறார். தனது நோக்கத்தையும் குறிக்கோளையும் குஜராத் மக்களுக்கு அவர் தனது செயல்பாடுகள் மூலம் புரிய வைத்துள்ளார். 6 கோடி குஜராத்திகள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துள்ளார் மோடி. லட்சம் பேர் மத்தியில் பேசினாலும் மக்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் அவரது ஞாபக சக்தி மக்களைக் கவர்ந்த விஷயமாகும். மக்களின் டார்லிங்காக அவர் திகழ்கிறார்.

ஆன்மீகத் தலைவர்கள் மீது அலாதிப் பற்று கொண்டவர் மோடி. இது மதத் தலைவர்கள் மத்தியில் நல்ல பெயரை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. மதப் பாகுபாடுபா பாராமல், அத்தனை மதத்தினரும் நரேந்திர மோடி அன்பும் பற்றும் வைத்துள்ளனர்.

சிறந்த பேச்சாளரான மோடி, பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதிலும் கில்லாடியும் கூட. கிராமப்புற மக்களின் அன்பையும், நகர்ப்புற மக்களின் அன்பையும் ஒரு சேரப் பெற்றவர்.

மோடியின் தலைமையின் கீழ் குஜராத் மாநிலம் பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் உலக அளவில் குவித்துள்ளது. ஐ.நா. சசக்வா விருது அதில் ஒன்று. அதேபோல காமன்வெல்த் பொது நிர்வாக அமைப்பின் விருது, யுனெஸ்கோ விருது, மின் ஆளுமைக்கான சிஎஸ்ஐ விருது ஆகியவை அதில் சில. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் சிறந்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோடி.

குஜராத்தை உலக வரைபடத்தில் இடம் பெறவைத்தவர் மோடி. வைப்ரன்ட் குஜராத் நிகழ்வுகள் மூலம் குஜராத்தை அனைவரும் விரும்பும் முதலீட்டு மையமாக மாற்றியவர். 2013 வைப்ரன்ட் குஜராத் நிகழ்வானது 120 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை ஈர்த்தது. இது மிகப் பெரிய சாதனையாகும்.

கடந்த பல ஆண்டுகளாகவே குஜராத் மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை தொடர்ந்து வருகிறது. மேலும் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. மறுபக்கம் மோடியின் அயராத பயணமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இலக்காக அவர் படிப்படியாக நடை போட்டு வருகிறார்.

அரசியலிலும் கூட அடிமட்ட அளவிலிருந்து உயர் பதவிக்கு வந்தது வரை அவர் சாதித்தவை ஏராளம்.. ஏராளம்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing