Thursday 9 March 2017

மோடிஜி நிகழ்த்திய அதிசயம்!


========================
(அநேகமாக பலரும் ஷேர் செய்யக்கூடும். தமிழ் பேசும் முகநூல் உலகிற்கு இந்த முக்கியமான சம்பவத்தை முதலில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி- இல கருப்பசாமி)

"மார்ச்-3, இரவு 11 மணி. என்னுடைய மூத்த நண்பரான ஒரு டாக்டரிடம் இருந்து அவசர அழைப்பு வந்தது.

அவருடைய பிறந்த எட்டு நாள் குழந்தை வெண்டிலேட்டரில். செயற்கை சுவாசம். உடனே டெல்லி சர் கங்காராம் மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும்.

விமானப் பயணம் ஆறு மணிநேரம். குழந்தை இருப்பது அஸ்ஸாம் மாநில திப்ருகர்.  டெல்லி வர வேண்டும்.

ஆனால் வெண்டிலேட்டர் உதவி ஏழு மணிநேரத்திற்கு தான் கிடைக்கும்.

எல்லாம் தயார். ஆனால், டெல்லியின் டிராபிக். திருமணங்கள் நிகழும் காலம். மிகவும் முக்கியமான நிமிடங்களை தாமதம் செய்யலாம்.

எனது மூத்த நண்பர் டெல்லியில் உள்ள செல்வாக்கான மையங்களை அணுக கோரினார். விமான நிலையத்திலிருந்து மருத்துவமனை செல்லும் டிராபிக் நிறுத்தினால் காப்பாற்றலாம் குழந்தையை..

என்னால் அவ்வளவு எளிதாக செய்ய முடியாத காரியம்.

மார்ச் 4 முடிந்தது.  காலையிலும் தெரிந்த பலரையும் தொடர்பு கொண்டேன்.

உதவக்கூடிய ஒருவர் வெளிநாட்டில் பிஸி. மற்றவர்களுக்கு முடியாத காரியமானது.

இதற்கிடையில் குழந்தை ஆதித்யா மருத்துவமனையிலிருந்து திப்ருகர், அஸ்ஸாம் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மதியம் ஒரு மணி, எந்தவித உறுதியான உத்திரவாதமும் இல்லாமல் குழந்தையின் விமானப் பயணம் துவங்கியது.

மதியம் இரண்டு மணிக்கு கௌஷிக் தேகா- இந்தியா டுடேயை தொடர்பு கொண்டேன். அவரும் முயற்சி செய்தார். சாதகமான பதில் இல்லை.

வேறு வழியில்லை.

இறுதியாக, சாத்தியமில்லாத ஒன்றை சாதிக்க எண்ணினால், உச்சபட்ச கதவை தட்டுவது தான் வழியென நினைத்தோம்.

பிரதமர் மோடிஜி.

ஆனால் பிரதமரும் அவரது குழுவும் வாரணாசி சாலைவழி மக்கள் சந்திப்பில் பிஸியாக இருந்தனர். தொடர்பு கொள்ள வாயப்பு மிகக்குறைவாக இருந்தது.

ஆனாலும் எங்களுக்கு பிரதமரின் தனிப்பட்ட மெயில் முகவரி கிடைத்தது.

மெயிலை தனது தனிப்பட்ட மொபைலில் அவரே பார்ப்பார்.

நாங்கள் மெயிலை அனுப்பிவிட்டோம். 'நம்பிக்கை'க்கு மேல் நம்பிக்கையை வைத்து சாதகமான பதிலுக்காக காத்திருந்தோம்.

பதில் வரவில்லை.

ஆறு மணிக்கு லக்னோவில் எரிபொருள் நிரப்ப விமானம் தரையிறங்கியது.

சாதகமான பதிலுக்கான எந்தவித அறிகுறியும் இல்லை.

பின்னர் தான் தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன.

காவல்துறை ஆணையர், போக்குவரத்து ஆணையரிடமிருந்து அழைப்புகள்.
எவ்வாறாக வந்து கொண்டிருக்கிறோம்?
எந்த இடத்திற்கு செல்ல வேண்டும்?
எவ்வளவு நேரம் தேவை?
போன்ற கேள்விகள்.

மோடிஜி எங்கள் மெயிலுக்கு பதில் தரவில்லை. வேறுவழியில், வேறுவிதமாக பதிலை எதிர்பாராத விதமாக தந்து விட்டார்.

7-10 மாலை விமானம் தரையிறங்கியது.

ஆம்புலன்ஸ் தயார் நிலையில்.

வெண்டிலேட்டர் இன்னும் இருபது நிமிடங்களுக்கு தான் பயன்படும்.

டெல்லியின் நெரிசலான போக்குவரத்து உச்சமாக இருக்கும் நேரம்.

காவல்துறை துணை ஆணையர் உடன் உறுதியளித்துக் கொண்டே வந்தார். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றுவிடலாம் என்று.

நடக்க சாத்தியமல்லாது என கருதியது நடந்து விட்டது.

விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது.

வி.வி.ஐ.பி.களுக்கு ஏற்படுத்தப்படும் க்ரீன் கேரிடர் ரூட் ஆக இந்த வழித்தடம் மாறியிருந்தது.

டெல்லி போக்குவரத்து இந்த ஒன்பது நாள் வயதான அஸ்ஸாமிய குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் சிகிசைக்காக காத்து நின்றது.

குழந்தை மருத்துவமனையை அடைந்தபோது வெண்டிலேட்டர் உதவி நின்றுபோக ஆறு நிமிடங்கள் தான் இருந்தது.

மோடிஜி ஒரு அதிசயத்தை நிகழ்த்தினார். அதுவும் அவரது உச்சகட்ட தேர்தல் பிரச்சாரத்தின் நடுவே இதை செய்தார் என்பதே ஆச்சர்யமானது.

பாரதத்தின் மூன்று வெவ்வேறு பகுதியை சேர்ந்த மூன்று வெவ்வேறான நபர்கள் இணைந்து மற்றொரு மூலையில் உள்ள அஸ்ஸாமிய குழந்தையை காப்பாற்றி விட்டனர்.

(ரேணுகா ஜெயின் என்ற ஆடிட்டரின் ட்விட்டர் செய்தியிலிருந்து சொந்த மொழிபெயர்ப்பு- இல கருப்பசாமி)
உள்ளூர் பத்திரிக்கை செய்தி கமெண்ட்டில்.

மோடி எங்களுடைய கடவுள் என குழந்தையின் தந்தை கூறியுள்ளது பத்திரிக்கை செய்தி.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing