#நன்றி_Gopalakrishna_SanthanamSantham
கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டும்.!
#துரோகம் இழைத்த ரஷ்யா...
#வீருகொண்டு எழுந்த இந்தியா...
#இஸ்ரோவின் இந்திய ராக்கெட் விண்ணில் உயர உயர பறந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த வரலாற்று சாதனைக்கும், சரித்திர வெற்றிக்கு பின் இருக்கும் ஒரு நாட்டின் பச்சை துரோகங்களையும் அதனால் இந்தியா அடைந்த அவமானத்தை துடைத்தெறிந்த இஸ்ரோவின் 25 வருட அயராத உழைப்பையும் நாம் தெரிந்து கொண்டே தான் ஆகவேண்டும்.
#இஸ்ரோவின் இந்திய ராக்கெட் விண்ணில் உயர உயர பறந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த வரலாற்று சாதனைக்கும், சரித்திர வெற்றிக்கு பின் இருக்கும் ஒரு நாட்டின் பச்சை துரோகங்களையும் அதனால் இந்தியா அடைந்த அவமானத்தை துடைத்தெறிந்த இஸ்ரோவின் 25 வருட அயராத உழைப்பையும் நாம் தெரிந்து கொண்டே தான் ஆகவேண்டும்.
cryogenic engine - ராக்கெட்கள் விண்ணில் பயணிக்க காரணமான அதி சக்தி வாய்ந்த என்ஜின், இதெற்கென பிரத்யேகமாக உருவாக்கப்படும் கிரையோஜெனிக் எரிபொருளில் தான் இந்த எஞ்சின் இயங்குகிறது , இந்த எஞ்சினை பயன்படுத்தியே அமெரிக்காவின் அப்போலோ ராக்கட் சந்திரனை அடைந்தது, 1990 களின் துவக்கத்தில் இந்தியா தனது GSLV ராக்கெட்டுகளை செலுத்தும் முயற்சிக்கு ஆயத்தமாகும் போது இவ்வகை எஞ்சின் தயாரிப்புகள் அப்போது இரண்டே இரண்டு நாடுகளிடம் மட்டும் தான் இருந்தன, ஒன்று ரஷ்யா , இன்னொன்று அமெரிக்கா தான்.
இந்தியாவிற்கு இந்த தயாரிப்பை விற்க மனம் வராத அமெரிக்கா, ஏக போக ஈர வெங்காய காரணங்களை காட்டி எஞ்சின்களை தர மறுத்த போது , ரஸ்யா இந்தியாவின் உதவிக்கு வந்தது ,
1991 ஆம் ஆண்டு ஒரு சுபயோக சுபதினத்தில் இஸ்ரோவிற்கும் ரஸ்யா Glavkosmos ஏஜென்சிக்கும் 230 கோடிக்கு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது, ஒப்பந்தத்தின் படி 7 கிரையோஜெனிக் எஞ்சின்கள் மற்றும் எஞ்சின்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் இந்தியாவிற்கு கற்று தர ரஸ்யா ஒப்புக்கொண்டது.
அப்போது மட்டும் இது நிகழ்ந்திருந்தால் விண்வெளி ராஜ்யத்தில் இந்தியா மூன்றாமிடம் பெற்றிருக்கும், இது பொறுக்காத அமெரிக்கா, இந்தியாவிற்கு இந்த தொழில் நுட்பம் தெரியவந்தால் அதை கொண்டு ballistic ஏவுகணைகளை இந்தியா தயாரித்துவிடும், இது உலக அமைதிக்கு ஆபத்து, ஆகவே இந்த ஒப்பந்தத்திற்கு தடை விதித்து MTCR (Missile technology control regime) ன் தலைவனாகிய நான் உத்தரவிடுகிறேன் என்று அமெரிக்கா தன் அம்மாவாசை வேலையை காட்டியது.
ஆனால் இந்த தடைக்கு சற்றும் அசராத ரஸ்யாவின் அதிபர் Boris Yeltsin இந்தியாவிற்கு கண்டிப்பாக எஞ்சின்கள் வழங்கப்படும் என தனது 1993 இந்திய சுற்றுப்பயணத்தில் உறுதி அளித்தார், சொன்னதை போலவே முதல்கட்ட 20% தொழில் நுட்பத்தை இந்தியாவிற்க்கு ரஸ்யா கற்று தந்தது.
இதற்க்கு மேலும் தாமதித்தால் விண்ணில் சீறி கிளம்பி விடுவான் இந்தியா என கொதித்து போனா அமெரிக்கா, உடனடியாக ரஸ்யாவின் கைகளை கட்டிப் போட்டு இந்தியாவின் முதுகில் குத்த ஆயத்தமானது, இந்த துரோகத்தை செய்வதற்காக அடுத்த ஆறுவருடங்களுக்கு அமெரிக்காவின் ராக்கெட்களை ஏவும் 60-70 மில்லியன் ஒப்பந்தத்தை ரஸ்யாவிற்கு தாரை வார்த்தது அமெரிக்கா.
அக்னி ஏவுகணை சோதனையின் வெற்றியை காரணம் காட்டி ஏவுகணைகள் தயாரிக்கத்தான் இந்த தொழில்நுட்பம் இந்தியா கோருகிறது என உலகநாடுகளை நம்ப வைத்தது அமெரிக்கா.
இதைப்பற்றியெல்லாம் ஏதும் தெரியாமல் தொழில்நுட்பத்தை கற்று கொள்ள பேனா பேப்பர் சகிதம் காத்திருந்த இஸ்ரோவின் முதுகில் மனசாட்சியே இல்லாமல் குத்தியது ரஸ்யா.
கையறு நிலையில் செய்வதறியாமல் திகைத்து அதிர்ந்து போய் இஸ்ரோ நின்ற போது அளப்பரிய உழைப்பையும் , காலத்தையும் , மிகப்பெரும் பொருட்செலவையும் உள்ளடக்கிய ஒரு வரலாற்று முடிவை குருதி கொப்பளிக்கும் தன் நெஞ்சை பிளந்து உலகநாடுகளுக்கு உரக்க கூறியது இந்தியா, "We don’t cry, We will build the damn engines here என சொன்னதுடன் நிற்காமல் 300 கோடியில் இதற்கென தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் எஞ்சின் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்தது இந்தியா.
ஆனால் செய்த சத்தியத்தை மீறாமல் அதிலிருக்கும் தொழில்நுட்பத்தை மட்டும் எடுத்துக்கொண்ட இஸ்ரோ இந்தியாவிலேயே கிரையோஜெனிக் எஞ்சின்களை உருவாக்கியது, அப்படி உருவாக்கப்பட்டு ஏப்ரல் 15 2010 அன்று உலகமே எதிர்பார்க்க ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட GSLV –D3 அத்தனை எதிர்ப்பார்புகளையும் உழைப்பையும் சுக்குநூறாக்கி GSAT – 4 செயற்கை கோளுடன் வங்காள கடலில் வெடித்து வீழ்ந்தது,
உலகமே எக்காளமிட்டு சிரித்தாலும் அந்த தோல்வியில் மனம் துவளாத இஸ்ரோ வின் கடின முயற்சியும் அயராத உழைப்பும் தான் இன்று இப்படியோர் சரித்திர வெற்றியை சாத்தியாமாக்கியிருக்கிறது.
640 டன்களை தன் தோளில் சுமந்து, தோல்விகளையெல்லாம் தொடுவானம் தாண்டி எரித்து விண்ணில் வீறு கொண்டு சென்றிருக்கிறான் இந்தியா உருவாக்கிய Indigenous Cryogenic Engine.
இன்று அனைத்து நாடுகளின் ராக்கெட் களையும் இந்தியா தன் தோளில் சுமந்து அவமானங்களை துடைக்கிறது
ஒவ்வொரு இந்திய ராக்கெட் விண்ணில் பாயும் பொழுதெல்லாம் அது வெறும் செயற்கை கோள்களை மட்டும் சுமந்து செல்வதில்லை, நட்பு நாடுகள் நம் உழைப்பின் மீது வைக்கும் நம்பிக்கையையும், உலகநாடுகள் மத்தியில் இந்தியாவின் பெயரை உயர்த்தி பிடித்து கொண்டே தான் இவை உயர உயர செல்கின்றன, அதற்கு என்றும் அணையா எரிபொருளே எதிரி நாடுகள் தந்த துரோகமும் அவமானங்களும் தான், மறக்க மாட்டோம், இவர்கள் பார்க்க பார்க்கவே இன்னும் உயர பறப்போம்,
இந்த இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ள இஸ்ரோவிற்கு ஆயிரம் வாழ்த்துகளும், அளவிலா நன்றிகளும்.
இந்த இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ள இஸ்ரோவிற்கு ஆயிரம் வாழ்த்துகளும், அளவிலா நன்றிகளும்.
ஜெய்ஹிந்த் . . .!
No comments:
Post a Comment