Monday, 12 June 2017

சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்

ஓர் முதியவர் தனது பேரனிடம்.:
பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.
பேரன்:
அது எப்படி தாத்தா?
முதியவர்:
சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்
மது அருந்த பணம் வேண்டும்
சிகரெட் புகைக்க பணம் வேண்டும்
கூடாத இசை கேட்க பணம் வேண்டும்.
பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,
ஆனால் மகனே!
அன்பு காட்ட பணம்
தேவையில்லை
கடவுளை வணங்க பணம்

தேவையில்லை
சேவை செய்ய பணம் தேவையில்லை
விரதம் இருக்க பணம் தேவையில்லை
பாவமன்னிப்பு கோர பணம் தேவையில்லை
பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை
நம் உரிமையை நிலைநாட்ட
பணம் தேவையில்லை
இத்தனைக்கும் மேலாக இறைவன் "நாமம்"சொல்ல வேறெதுவுமே தேவையில்லை*
மகனே!
நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?
இலவசமான சொர்க்கத்தை நேசிக்கிறாயா?
முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.
இந்த பகிர்வும்  இலவசம்.
இதனை ஏனையோருடமும் பகிரவும்
இலவசமாக.
தினம் தவறாமல் நிச்சயம் இறைவன் நாமம் சொல்வோம்...
பேராசை இன்றி வாழ்வோம்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing