திருமதி.Bhooma Kumari அவர்கள் நம் பிரதமர் மோடி அவர்கள் பிரதம வேட்பாளர் ஆகும் போது நம் கட்சியில் இணைந்து ஐந்து ஆண்டு ஆகியிருந்தன.அதன் பின்னர்
பாஜக கட்சி சார்பான 'ஒரே நாடு' பத்திரிக்கையில் சில காலம் பணி செய்தார்.தேசிய நலன் சார்ந்த சிந்தனைவாதி.பல முறை பேசி உள்ளேன்.தற்போதுதான் திருமதி Uma Anandan அவர்கள் இல்லத்தில்தான் நேரில் சந்தித்தேன்.அவரின் எழுச்சியான சிந்தனை குறித்து பல தகவல்கள் அறிந்தேன்.நல்ல சிந்தனை,செயல்கள் கொண்ட பெண்கள் தமிழக அரசியலுக்கு அதிகமாக தேவை...
இதோ 2014 ஆம் ஆண்டில் திருமதி. Bhooma Kumari அவர்கள் நம் பிரதமர் மோடி அவர்களிடம் கேட்ட கேள்வியும்,அதற்கு நம் பிரதமர் தந்த பதிலின் சாராம்சம் பற்றியும் விவரிக்கிறார் இவர்.
நம் பிரதமர் மோடி அவர்களிடம் ஒருவர் கேள்வி கேட்டு அந்த கேள்வியே நம் பிரதமரையே சலனப் படுத்தியது என்றால் நம் இயக்கத்தை சேர்ந்த அந்த பெண் பூமா குமாரி அவர்களை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா??.
இதோ...
2014 ஜனவரி 11 புது டில்லியில் சரியான குளிர்,சாயங்காலம்,நாங்கள் அகில இந்திய பாரதிய ஜனதா அலுவலகத்தில் பிரதான அறையில் மோடி அவர்களுக்காக காத்து இருக்கிறோம்.
பாஜகவின் பிரதம வேட்பாளர் அல்லவா?!.
சம்பிரதாய அறிமுகம்.வரவேற்புக்கு பின் ஸ்ரீமதி ஸ்மிருதி ராணி திடீரென மைக்கில் இப்போது ஸ்ரீமதி.பூமா ஜி முதல் கேள்வியை கேட்பார் என சொல்லி விட்டு என்னைப் பார்த்து சிரிக்கிறார்.
ஒரு சின்ன அறிமுகமாக, முதல் கேள்வி தனிப்பட்ட கேள்வியாகவே ஆரம்பிக்கலாம் என்று நான் சொன்னதும் அரங்கில் இருந்தவர் கூட ஏதோ சர்ச்சையான கேள்வியாக இருக்குமோ என என்னை உற்று பார்த்தார்கள்.
What are the values that guided little Narendra to become Narendra Bhai Modiji?.
குட்டி நரேந்திரனாக இருந்து நரேந்திரபாய் மோடிஜியாக பரிணாமிக்க வழிகாட்டி மதிப்புகள் யாவை? என நான் கேட்ட போது அரங்கத்தில் பேரமைதி.
கேமராக்களும்,குரல் பதிவுகளும் சப்தமின்றி ஓடிக் கொண்டு இருக்க...
பதிலளிக்கிறார் நம் சிங்கம் சாந்தமாய்.
"சிறு குழந்தையாய் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் என் அம்மா தயாரித்த தேநீரை கெட்டிலில் தூக்கிக் கொண்டு நான் ரயில் பெட்டிகளில் விற்ற காலத்தில் ஏற்பட்ட வறுமையை என்னை செம்மையாக்க நான் கற்றுக் கொண்டேன்.
பின்னர் ஸ்வயம் சேவக்.
பிரச்சாரகராக சுகாதாரம் பற்றி எடுத்துச் சொல்வதே என் பணி.
அப்பகுதி மக்கள் கொடிய வறுமையில் வாடினர்.ஒரு நாள் எனக்கும் கடுமையான பசி.இரண்டு நாட்களாக எதுவும் உண்ணவில்லை.என் ஏழை தாய் காய்ந்த ரொட்டியை(பக்ரி)யும்,
ஒரு தம்ளர் பாலையும் என் முன் வைத்தார்.
நான் உணவு அருந்த தொடங்கும் போது வீட்டில் இருந்த சிறு குழந்தை அந்த பாலையே பார்ப்பதை கண்டு நான் பாலை அருந்தாமல் குழந்தையிடமே கொடுக்க முனைந்தேன்.என் தாயோ தடுக்கிறார்.
ஏழையான வீட்டில் வேறு பால் இருக்கவும் வாய்ப்பு இல்லை.
எங்களுக்காக எத்தனை கஷ்டப் படுகிறாய்?.
மிக களைத்து போய் பசியில் இருக்கிறார்.நீதான் சாப்பிட வேண்டும். குழந்தையின் பசியை நாங்கள் ஆற்றிக் கொள்வோம் என்றார் என் தாய் உறுதியாக.இதைச் சொல்லும் போது என் தாயின் கண் சிவந்தது.கைகள் நடுங்கியது.கண்ணீர் உருண்டது.
இதை சொல்லும் போதே மோடிஜியின் குரல் கம்மியது.தண்ணீர் அருந்தி தன்னை ஆசுவாசப் படுத்தினார்.
தன்னலமற்ற அந்த தாயின் பரிவும்,வேதனையும் என்னை வழி நடத்துகிறது போலும்.
இதுபோன்ற எண்ணற்றவர்களின் அன்பும்,தியாகமும்,பரிவும் நம் பாரத புண்ணிய பூமியில் இயல்பாய் எத்தனையோ சிந்திக் கிடக்கிறதே என்று எனக்கு பதில் தந்து முடித்தார் நரேந்திரபாய் மோடிஜி.
என் சாதாரண கேள்விக்கு கடைக்கோடி மனிதனையும் தேடிப் போய் உலுக்கும்படியான நிகழ்வினைச் சொன்ன போது இதோ...பாரதத்தை சரியாக வழி நடத்த ஒரு மாவீரன் வந்து விட்டான் என அன்றும் மகிழ்ந்தேன் என்று திருமதி.பூமா குமாரி அவர்கள் சொன்ன போது என் கண்களும் கலங்கியது.
மோடி அவர்கள் பணக்காரர்களை மட்டும்தான் பார்ப்பார் என எத்தனையோ பேர் கதை கட்டுகின்றனர்.சுற்றி உள்ள எத்தனையோ நெருக்கடிகளை நம் மோடி அவர்கள் தாண்டி சாகசம் புரிகிறார்.இதில் நம்மவர்களின் சூழ்ச்சிகளும் உண்டு்.
பசியால் கண்ணீர் வாழ்வை அறிந்த மோடி அவர்கள் நிச்சயம் மாற்றுவார் என்பதே நிஜம்.
கேள்வி கேட்கும் பல பூமா குமாரிகள் நம் இயக்கத்திற்கு இன்னும் அவசியம்.
நம் கேள்விகளே பல உண்மைகளை வெளிக் கொண்டு வரும் மகா சக்தி.
வாழ்த்துக்கள் திருமதி.பூமா குமாரி அவர்களே.
No comments:
Post a Comment