தனி அமைதியும், பக்தி ஒழுக்கமும் நிறைந்து இருந்த அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக வெளியேறி வெளி மாநிலங்கள் மற்றும் மேலை நாடுகளில் தஞ்சம் புகுந்து இருக்கிறார்கள்! பல *அக்ரஹாரங்கள்* சுயம் இழந்து விட்டது ! அவர்கள் தங்களின் முகவரியை,வாழ்க்கை முறையை பறிகொடுத்த காலம் என்பது ஈ.வே.ராமசாமியின் திராவிடர் கழகம் தொடங்கிய காலகட்டத்தில் இந்த அவலநிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது! பக்தியும்,அறமும் வெளியேற்றப்பட்டு அசிங்கமும்,அவலமும் நிலைகொண்டு இருக்கிறது! *அக்ரஹார* மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள நடவடிக்கைகளில் இறங்கவில்லை! அது அவர்கள் செய்த பெருந் தவறு! இனிமேலாவது தங்களை பாதுகாத்துக் கொள்ள *அக்ரஹார மக்கள் ரௌத்திரம் பழக வேண்டும்* நீங்கள் எதிர்கொள்ள போவது அப்புறப்படுத்தப்பட வேண்டிய தீமைகளைத்தான்,நீங்கள் அசிங்கத்தை கலைவதற்குத்தான் *ரௌத்திரம்* கற்க போகிறீர்கள்!
நீங்கள் உங்களது பூர்வீக வாழிடங்களான *அக்ரஹாரங்களை* மீண்டும் புனரமைப்பு செய்வதற்கு *ரௌத்திரம்* பழக வேண்டும்! திராவிடம் எனும் பெயரில் விதைக்கப்பட்ட தீமைக்கு,அரை நூற்றாண்டு அவலத்திற்கு எதிராக நன்மை விதைக்க *ரௌத்திரம்* பழக வேண்டும்! *அக்ரஹாரங்கள்* புதுமை அடைய வேண்டும்! தீமைகளை விலக்கி நன்மைகளை அடையும் காலத்தை உருவாக்க பாடுபட வேண்டும்! நீங்களும் தமிழகத்தின் அங்க அடையாளங்கள்தான் என்பதை மிக,மிக உறுதியாக நம்ப வேண்டும்! நிலைநிறுத்த தற்காலத்தில் *ரௌத்திரம்* பழகியே ஆக வேண்டும்!
via A.M.K.மணிவண்ணன்.
Make Others Comfortable and you will see the nature (god) will take care of your comfortable
Thursday, 30 November 2017
தமிழகத்தில் *அக்ரஹாரங்கள்* பலவீனமாக என்ன காரணம்?
குமரி கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்
குமரி: குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலையோ அல்லது இரவோ புயல் சின்னமாக உருவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் வானிலை ஆய்வு ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். குமரி கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அதற்கு ஓகி (ockhi) என பெயரிடப்படும். இந்த புயல் சின்னம் உருவாகியுள்ளது ரேடாரில் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் ஓகி புயல் நிலப்பரப்பில் வராமல் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் செல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஒட்டிய கடற்கரையில் இந்த புயலானது செல்லும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுவதற்கு அறிகுறியாக குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இது பற்றி பேசிய வருவாய்துறை ஆணையர் பலத்த சூறைக்காற்று காரமணாக குமரி மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளதாக குறிப்பிட்டார். நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் கூடும் என்பதால்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் வருவாய்த்துறை ஆணையர் சத்யகோபால் எச்சரித்துள்ளார். மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Wednesday, 29 November 2017
உங்கள் மனிதநேயம் மிக்க ஷேரிங் ஒருவருக்கு உதவும் நன்றி
அதிகம் பகிரவும்:
பெயர்:B. Vignesh,
JE/SIG/PMK
தவறவிட்ட 10th,12th, BE, ME, UK கல்லூரி சான்றுகள் அனைத்தும் தற்போது என்னிடம் பத்திரமாக உள்ளது.
சான்று Reg no: 14227202
தொடர்புக்கு: M. Selvaraj
Railway,
Manamadurai.
+919626619212
+919698653075
+919566660856
எண்ணுக்கு அழைக்கவும்.
உங்கள் மனிதநேயம் மிக்க ஷேரிங் ஒருவருக்கு உதவும் நன்றி...
Nature 💗 medicines...do maximum share
Shared :Nature 💗 medicine 💕 group
சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் !!!
1. தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும்
2. சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும்
3. வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும்
4. பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும்
5. குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.
6. மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும். உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.
7. சருமப் பிரச்னைகள் தீர அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் அரிப்பு, அக்கி கிருமிகள் நீங்கும்.
8. பருத்தொல்லை நீங்க புதினா இலைச்சாறுடன் ஓட்ஸ் கலந்து பருக்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும், அம்மன் அரிசி பச்சிலையின் சாறை தினமும் பருக்களின் மேல் தடவி வந்தாலும் பருக்கள் மறையும்.
9. கறிவேப்பிலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்குங்கள். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளநரை சீக்கிரமே மறைந்து போகும்.
நெல்லிக்காயை நறுக்கி வெய்யிலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியைச் சேர்த்துப் பருகினால் விட்டமின் சி சத்து கிடைக்கும் இது வயிற்றுக்கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். தயிரில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்றாக வளரும்.
அத்தி இலையுடன் வில்வம் சேர்த்து காய வைத்து பொடி செய்து சாப்பிட கைகால் நடுக்கம் நரம்புதளர்ச்சி குணமாகும்.
தர்பூசணிப் பழம் சாப்பிட்ட பிறகு அதன் அடிப்பகுதியை பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ துருவி தயிர்பச்சடியாகவோ உளுந்துடன் சேர்த்து அரைத்து வடையாகவோ சாப்பிடலாம் சதைப்பகுதியில் மட்டுமல்ல இதிலும் நீர்ச்சத்து உள்ளது.
ஆரோரூட் மாவை வயிற்றுப்போக்கு ஏற்பட்டு களைப்படையும்பொழுது மட்டுமே கஞ்சி வைத்து சாப்பிட்டு குணமடைவோம். இது அனைவரும் அறிந்ததே. அறியாத விஷயம் என்னவென்றால் அதிக கோடையில் வியர்த்து விறுவிறுத்து களைப்பாக இருக்கும்போது ஆரோரூட் மாவு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கஞ்சி வைத்துக் குடித்தால் உடல் குளிர்ந்து வியர்க்காமல் இருக்கும்
மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். ஞாபக சக்தி பெருகும். வாந்தியை நிறுத்தும்.
தேநீர் தயாரிக்கும்போது வெல்லம் சேர்த்து அருந்துவதே நல்லது. சர்க்கரை உடலுக்கு அவ்வளவு உகந்ததில்லை.
கால்சியம் மாத்திரைகளை சாப்பிடுபவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்/ அப்போதுதான் கிட்னியில் கல் உண்டாகாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கீழா நெல்லியை பால் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு மூன்று நாள் தொடர்ந்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் குடலில் தேங்கியிருக்கும் பித்தவாயு வெளியேறிவிடும். இதுமட்டுமல்லாமல் குடல் வீக்கம் வயிற்று மந்தம் சரியாகும்.
காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து இருக்கிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரை ஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் இஞ்சிச்சாறும் தேனும் சேர்த்து சாப்பிடுங்கள் கூடவே கொஞ்சம் வெந்நீர் குடியுங்கள் காலை மாலை என மூன்று நாள் இதேபோல் சாப்பிட்டால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.
பொடுகுத் தொல்லை முடிகொட்டுதல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு வெது வெதுப்பான நீரில் குளித்து வந்தால் ப்லன் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் ஓரிரு மாதங்களில் வித்தியாசம் தெரியும்.
வயிற்று வலியால் அவதிப்படும்போது பத்து புதினா இலைகளை வெறுமனே வதக்கி ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் இறக்கி ஆற வைக்கவும் இதை காலை மதியம் மாலை என கொடுத்து வந்தால் வயிற்று வலி மட்டுமல்லாது வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளும் சரியாகும்.
பிரண்டையின் மேல் பகுதியில் உள்ள நாரை உரித்து எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து பச்சை நிறம் மாறி பொன்னிறமாக ஆகும்வரை வதக்க வேண்டும் அத்துடன் காய்ந்த் மிளகாய் புளி உப்பு உளுந்து தேங்காய் சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் வாயுத்தொல்லை விலகுவதோடு உடம்புக்கு பலமும் தரும்.
அசத்தல் டிப்ஸ்
............................
1. சிறு கீரை கண் எரிச்சல் இருமல் பித்தம் போகும். பசலைக்கீரை மலக்கட்டு உடல் வெப்பம் தணிக்கும். பொன்னாங்கண்ணிக்கீரை உடல் அழகு கூட்டும். புளிச்சக்கீரை ரத்தக் குறைபாடுகள் நீக்கும். புதினா ஜீரணசக்தி உண்டாகும். தூதுவளைக்கீரை காது கேளாமை காசம் சீராகும்
2. நீரிழிவுக்குக் கொண்டைக்கடலை கைகண்ட மருந்து. அதிலும் கறுப்பு கொண்டைக்கடலையில் சுண்ணாம்பு சத்து அதிகம் இந்தச் சுண்டலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
3. ஆறாத புண்ணை ஆற்ற தேங்காய் எண்ணெயில் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு காய்ச்சித் தடவவும். சீதபேதியைக் குணப்படுத்த மாதுளம் தோலை அரைத்து எருமைத்தயிரில் கலந்து மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்கவும் புளி ஏப்பத்தை நிறுத்த துருவிய கேரட்டில் பச்சடி செய்து சாப்பிடலாம்
4. சாதம் வடித்தக் கஞ்சியில் சிறிது மஞ்சள் தூள் போட்டு தெளிந்ததும் உப்பு சீரகத்தூள் கலந்து அருந்த அஜீரணக்கோளாறு நீங்கும்.
5. விட்டமின் பி 2 சத்து அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்ளவும் சருமம் மிருதுவாகவும் சுருக்கங்கள் விழாமலும் இருக்கும். இது பால் வெண்ணெய் மீன் முட்டை தானியங்கள் மற்றும் மணத்தக்காளி கீரையில் அதிகம் உள்ளது.
எதுக்கு எது நிவாரணம்?
மாங்காய் மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் அதற்குப் பால் ஒரு டம்ளர் குடிக்கவும்.
உணவில் அதிக நெய் சேர்த்தால் ஒரு கப் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.
பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் கேக் நிறைய சாப்பிட்டால் அதற்கு ஒரு டம்ளர் வென்னீர் குடிக்கவும்.
கனமான உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டால் சுக்கு வெல்லம் சாப்பிடலாம் அல்லது சுக்கு காப்பி தயாரித்து குடிக்கலாம்.
அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஸ்வீட் சிறிது சாப்பிடலாம்.
தேங்காய் தேங்காயில் செய்த பதார்த்தங்களை அதிக அளவு சாப்பிட்டு விட்டால் அதற்கு கொஞ்சம் அரிசி எடுத்து மென்று சாப்பிடவும்.
குடல் புண் அதிகம் இருந்தால் அடிக்கடி வாழைப்பூ சமைத்துச் சாப்பிடலாம்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை முள்ளங்கி அருமருந்து. அதை சாலட் ஆகவும் தயிர்பச்சடி ஜூஸ் என குடிக்க மஞ்சள் காமாலையிலிருந்து விடுபட்டு உடலும் ஆரோக்கியம் பெறும்,
விலகாத நோய் கூட விளாம்பழ லேகியத்தால் விலகும்.
காய்ச்சலுக்கு தண்ணீர் அதிகம் குடிக்க காய்ச்சலின் வேகம் குறையும். கருந்துளசி நீர் காய்ச்சலைக் குறைக்கும்.
உடல் கொழுப்பிற்கு வாழைத்தண்டை ஜூஸ் அல்லது கறி கூட்டு செய்து சாப்பிடலாம். இதனால் கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும்.
வெட்டை சூடு தணிய வல்லாரை இலை சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.
உடல் உஷ்ணத்திற்கு சீரக நீர் இள நீர் வெந்தயம் ஊறவைத்த நீர் அருந்தக் கொடுக்கலாம்.
வெயிலில் அலைந்துவிட்டு வருபவர்களுக்கு சாத்து குடி ஜூஸ், அல்லது தண்ணீர் வெல்லம் அல்லது பானகம் கொடுக்க சுறுசுறுப்பாக இருக்கும்
Shared :Nature 💗 medicine 💕 group
Tuesday, 28 November 2017
யாருப்பா இது நாம செய்ய வேண்டிய வேலையை தானாகவே செய்றது
உங்களால் சாப்பிட முடிந்தது மூன்று இட்லிதான்...
*ஒரு மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுத்தில் நாலாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அதன் நிர்வாக இயக்குனர் மீது குற்றம்* *சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார் !*
நீதிபதிக்கு அவரது அலங்கோலமான நிலை, உறக்கமின்றி சிவந்த கண்கள், அவமானத்தால் கூனிக்குருகி, நின்றவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது !
*"காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?''*
*"இல்லை*' என்று தலையாட்டினார் இயக்குனர்.
நீதி மன்ற ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார்.
இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப்பட்டது.
"பரவாயில்லை. இங்கேயே அமர்ந்து நிதானமாக சாப்பிடுங்கள்.
அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்து விடுகிறேன் என்றார் நீதிபதி.
இயக்குனரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிடவே முடியவில்லை.
பேந்தப் பேந்த விழித்த படி நின்று கொண்டிருந்தார் இயக்குநர்.
"என்ன ஒரு இட்லியை வைத்து விட்டீர்கள்?
சாப்பிடுங்கள் 'என்றார் நீதிபதி.
"முடியவில்லை ஐயா...
என்னால் சாப்பிட முடியவில்லை.''
என்றார் நிர்வாக இயக்குநர்.
"பார்த்தீர்களா? உங்களால் சாப்பிட முடிந்தது மூன்று இட்லிதான்.
அதற்கு மேல் உங்கள் வயிற்றில் இடமில்லை.
இதற்காகவா நீங்கள்
நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்?.
மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை.
ஆடம்பர தேவைகள்தான் அதிகம்.
*உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது.
அதற்கு நான்கு இட்லியே அதிகம்.*
*உங்கள் ஆடம்பரத் தேவைக்கு நான்காயிரம் கோடி என்ன...
நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது..''*
இயக்குனர் பெரிதாக குலுங்கி அழ ஆரம்பித்தார்.
அவர் மீதம் வைத்த *அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டுமல்ல ,
நமக்கும் தான்*
கொலை, கொள்ளை; லஞ்ச ஊழல்தான் பாவம் என்றில்லை.
வரிசையில் நம்பிக்கையுடன் உணவுக்காகவோ,உத்யோகத்திற்கோ
நிற்பவர்களை புறம் தள்ளி குறுக்கு வழியில் சென்றடைவது,
வசதி வாய்ப்புகள் இல்லாத நெருங்கிய உறவுகளிடம் அவர்களை ஒதுக்கி விட்டு,
உங்கள் வசதிக்கு ஏற்ப வேறு இடத்தில் முடிப்பது,
பசி மற்றும் பண கஷ்டத்தோடு, இருப்பவர்களுக்கு ஆதரவு தருவது போல் ஆசை காட்டி உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கும் போது, ஒன்றும் செய்யாமல்
ஒதுங்கி நிற்பது,
இது போன்ற பல வழிகளில் பாவங்களை செய்து விட்டு,புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று பரிகாரம் என முயற்சிப்பது பெரும்பாவம்.
அது கடப்பாரையை முழுங்கி விட்டு சுக்கு கசாயம் குடிக்கிற மாதிரி.
சந்தோஷத்திலே பெரிய சந்தோஷம்,
நம் அருகில் நம்முடன், நம்மை சுற்றி உள்ளவரை,
சந்தோஷப்படுத்தி பாருங்கள்.
உதவி பெற்றவர்கள் ஆண்டவரிடம்,
ஆண்டவா.....
எங்கள் ஆயுட்காலத்தை குறைத்து,
எங்களுக்கு உதவி புரிந்தவருக்கு நீண்ட ஆயுளைக் கொடு.
ஏனெனில் எங்களை போன்றவர்களுக்கு அவர் நெடுங்காலம் உதவ வேண்டும் என வேண்டுவார்கள்.
பிறகு பாருங்கள்.
ஆரோக்கியம் கூடும், ஆனந்தம் பெருகும்,
ஏன், ஆண்டவனே,
" யாருப்பா இது நாம செய்ய வேண்டிய வேலையை தானாகவே செய்றது " என்று
உங்களை ஆண்டவனே,
ரசிப்பான்.
ரட்சிப்பான்.
நாம் யாரும் 200 ஆண்டுகள் வாழ போவதில்லை.
அடுத்த நொடி நமக்கு சொந்தமில்லை.
உங்கள் தேவைக்கு வைத்துக் கொண்டு மீதியை இல்லாதவர் களுக்கு உதவி செய்யுங்கள்.
உங்கள் இல்லம் ஆலயமாகும்.
நீங்களே இறைவனாவீர்கள்.
சதா சர்வ காலமும் ஆண்டவரிடமும் எதையாவது ஒன்றை பிச்சையாக வேண்டி பெற்று கொள்ள மட்டுமே முயற்சிக்கிறோம்.
ஒரு நாளாவது நம்மிடம் மீதமுள்ள உணவையோ, உடையோ இல்லாதவர்களை தேடி சென்று கொடுத்து பாருங்கள்!
தொடர்ந்து கர்ணனாக ஆவீர்கள்.
அகம் அழகு பெறும்.
முகம் பொலிவு பெறும்.
தர்ம சிந்தனை மேலோங்கும்.
Monday, 27 November 2017
அப்பத்தாவும் ஊறுகாய் பொட்டலமும்
*ஜிஎஸ்டியும் விலைவாசியும் :*
ஒரு பொருளின் விலை ₹.1000 என வைத்து கொள்வோம்...
*வாட் முறை:*
விலை : ₹.1000
Excise Duty@12.5% : ₹.125
மொத்த விலை : ₹.1125
Cental Sales Tax@2% : ₹.22.5
இப்போது மொத்த விலை : ₹.1147.50
Tamilnadu Value Added Tax @ 14.5% : ₹.166.38
பொருளின் மொத்த விலை : ₹.1314
₹.1000 க்கு பொருள் வாங்கினால்
₹.314 வரியாக செலுத்தினோம்...
--> 31.4% வரி வசூலிக்கப்பட்டது....
*ஜிஎஸ்டி முறை*
பொருளின் விலை ₹.1000
அதிகபட்ச ஜிஎஸ்டி @28% : ₹.280
பொருளின் மொத்த விலை : ₹.1280
₹.1000 க்கு பொருள் வாங்கினால்
₹.280 வரியாக செலுத்தினோம்...
முன்பை விட 3.4% வரி குறைவாகவே செலுத்துகின்றோம்
அதாவது ₹.34 விலை குறைந்திருக்கின்றது....
*ஜிஎஸ்டி திருத்தம் செய்த பின்*
(நவம்பர் 15/2017 முதல்)
பொருளின் விலை ₹.1000
அதிகபட்ச ஜிஎஸ்டி @18% : ₹.180
பொருளின் மொத்த விலை : ₹1180
₹.1000 க்கு பொருள் வாங்கினால்
₹.180 வரியாக செலுத்தினால் போதும்...
முன்பை விட 13.4% வரி குறைவாகவே செலுத்துகின்றோம்
அதாவது ₹.134 விலை குறைந்திருக்கின்றது....
*பின்குறிப்பு :*
வியாபாரிகள்,
*வாட்_முறையில்* உள்ள மொத்த விலையான ₹.1314 + 28% ஜிஎஸ்டி என பில் போடுவதால் ₹.368 அதிகரித்து,
₹.1682 என ஆகின்றது...
ஜிஎஸ்டி பற்றி சிறிதும் அறிவில்லாத *திடீர் பொருளாதார நிபுணிகள்*
ஏதோ ஜிஎஸ்டி என்பது புதிதாக கொண்டு வரப்பட்ட வரி என புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர்...
*அப்பத்தாவும் ஊறுகாய் பொட்டலமும் 😊😊😊*
Sunday, 26 November 2017
தமிழ்நாடு முழுக்க முழுக்க #ஆன்மிகபூமி
#இந்துசமயம்_உருவான இடம் #தமிழ்நாடு_தென்னாடு..
இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் :
சைவம் )
சாக்தம் )
வைஷ்ணவம் )
காணாபத்யம் )-#இந்துமதம்
கெளமாரம் )
செளரம் )
ஸ்மார்த்தம் )
#சைவத்தின் முழுமுதற் தெய்வமான சிவ கோவில்களில் 283 இல் 276 தமிழ்நாட்டில் தான் உள்ளது...!
#வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத்தலங்களில் 96 தமிழ்நாட்டில்தான் உள்ளது...!
#கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில் 18 கோவில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளது...!
#கானாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில்தான் உள்ளது..!
#செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்...!
#சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள் அம்மன் கோவில்கள் பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்...!
இந்து சமயத்தின் கிளை இணை துணை சமயங்களான #சமணம் #புத்தம் உருவானதும் தமிழ்நாட்டில்தான்...
மேற்க்கண்ட ஏழுப்பெரும் பிரிவு தெய்வங்களையும் வணங்கும் ஒட்டுமொத்த இந்துக்களான #ஸ்மார்த்தர்கள் இருப்பதும்தமிழ்நாட்டினல்தான்.
#பதினெட்டுசித்தர்கள் தோன்றி வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்தது தமிழ்நாட்டில்தான்...!
#ஆழ்வார்கள்நாயன்மார்கள் தோன்றி வாழ்ந்து மறைந்தது தமிழ்நாட்டில்தான்.
#பஞ்சபூதகோவில்களில் நிலம் நீர் ஆகாயம் நெருப்புக்கான ஸ்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.
#நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது தமிழ்நாட்டில்தான்.
12 #ராசிகள் மற்றும்
27 #நட்சத்திரங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.
#சப்தவிடங்க ஸ்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.
இந்து பண்பாட்டின் #அடையாளமே
தமிழ்நாடு தான் !!!!!
இந்து பண்பாட்டின் #வாழ்வியல்முறையே தமிழ்நாடு தான் !!!!!
இந்து பண்பாட்டின் மருத்துவமான
#இயற்கைசித்தமூலிகை #மருத்துவம் உருவானதே தமிழ்நாடு தான் !!!!
இந்து பண்பாட்டின்
#இயற்கைவேளாண்மை தோன்றி செழித்தோங்கியது தமிழ்நாட்டில்தான் !!!!
இப்பொழுது அனைவரும் புரிந்துணர்வு செய்து கொள்ளவேண்டியது :::
தமிழ்நாடு முழுக்க முழுக்க #ஆன்மிகபூமி !!!!
#தென்னாடுடைய_சிவனே_போற்றி !
#எந்நாட்டவர்க்கும்_இறைவா_போற்றி !
Excuse
Note: Dear Friends….Excuse any mistake in my writing