Thursday, 30 November 2017

தமிழகத்தில் *அக்ரஹாரங்கள்* பலவீனமாக என்ன காரணம்?

தனி அமைதியும், பக்தி ஒழுக்கமும் நிறைந்து இருந்த அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக வெளியேறி வெளி மாநிலங்கள் மற்றும் மேலை நாடுகளில் தஞ்சம் புகுந்து இருக்கிறார்கள்!  பல *அக்ரஹாரங்கள்* சுயம் இழந்து விட்டது ! அவர்கள் தங்களின் முகவரியை,வாழ்க்கை முறையை பறிகொடுத்த காலம் என்பது ஈ.வே.ராமசாமியின் திராவிடர் கழகம் தொடங்கிய காலகட்டத்தில் இந்த அவலநிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது! பக்தியும்,அறமும் வெளியேற்றப்பட்டு அசிங்கமும்,அவலமும் நிலைகொண்டு இருக்கிறது! *அக்ரஹார* மக்கள்  தங்களை பாதுகாத்து கொள்ள நடவடிக்கைகளில் இறங்கவில்லை! அது அவர்கள் செய்த பெருந் தவறு!  இனிமேலாவது தங்களை பாதுகாத்துக் கொள்ள *அக்ரஹார மக்கள்  ரௌத்திரம் பழக வேண்டும்* நீங்கள் எதிர்கொள்ள போவது அப்புறப்படுத்தப்பட வேண்டிய தீமைகளைத்தான்,நீங்கள் அசிங்கத்தை கலைவதற்குத்தான் *ரௌத்திரம்* கற்க போகிறீர்கள்!
நீங்கள் உங்களது பூர்வீக வாழிடங்களான *அக்ரஹாரங்களை* மீண்டும் புனரமைப்பு செய்வதற்கு *ரௌத்திரம்* பழக வேண்டும்! திராவிடம் எனும் பெயரில் விதைக்கப்பட்ட தீமைக்கு,அரை நூற்றாண்டு அவலத்திற்கு   எதிராக நன்மை விதைக்க *ரௌத்திரம்* பழக வேண்டும்! *அக்ரஹாரங்கள்* புதுமை அடைய வேண்டும்! தீமைகளை விலக்கி நன்மைகளை அடையும் காலத்தை உருவாக்க பாடுபட வேண்டும்! நீங்களும் தமிழகத்தின் அங்க அடையாளங்கள்தான் என்பதை மிக,மிக உறுதியாக நம்ப வேண்டும்! நிலைநிறுத்த தற்காலத்தில் *ரௌத்திரம்* பழகியே ஆக வேண்டும்!
via A.M.K.மணிவண்ணன்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing