அந்தியூரை அடுத்த பர்கூர் ஊசி மலை சென்று இருந்தேன். 20000 மக்களுக்கு மேற்பட்ட மக்கள் 36 கிராமங்களில் வசிக்கும் பர்கூர் ஒரு பெரிய பஞ்சாயத்து.
லிங்காயத் மக்கள் ஒவ்வொருவரும் கழுத்தில் கனமான லிங்கத்தை அணிந்து உள்ளனர். யாரும் மாமிசம் சாப்பிடுவதே இல்லை என்பது சிறப்புச் செய்தி.
லிங்காயத் மக்களை காணக் காண அவ்வளவு ஆனந்தம் கொண்டோம்.இவர்களுக்கு தான் உண்டு,தன் வேலை உண்டு என்கிற எண்ணமே உள்ளது.
கடுமையான உழைப்பாளிகள்.
வெளியூர் சென்றல் யார் வீட்டிலும் உணவு சாப்பிட மாட்டார்கள்.வெளியூர் சென்றாலும் வெறும் இயற்கையான பழங்கள் மட்டுமே இவர்களின் உணவு.
வேறு யாராவது இவர்ர்களின் வீட்டுக்குள் வந்து விட்டால் வீட்டில் உள்ள பொருட்களை வெளியே எடுத்து வைத்து விட்டு வீட்டையே கழுவி சுத்தம் செய்வது இவர்களின் வழக்கத்தில் ஒன்று.
பொய்,புரட்டு இவர்களின் மனதில் கூட இல்லை.
இவர்கள் அசைவம் சாப்பிடாததால் கோழிகள் ஊருக்குள் இல்லை.காடுகளில் ஏராளமான காட்டுக் கோழிகள் அலைவதே இதற்கு சாட்சி.இந்த ஊரில் கோழியாக பிறந்து இருந்தால் கூட நம்ம ஊர் மக்கள் உயிருக்கு பயம் இல்லாமல் வாழ்ந்து இருக்கலாம் போல.
ஒரு லிட்டர் பால் மட்டுமே கறக்கும் பர்கூர் மாட்டு இனத்தை செல்லம் போல போற்றுகின்றனர். தேவை இன்றி பால் கூட பால் கூட கறப்பது இல்லை.
தன் தேவைக்கே கறக்கிறார்கள்.
கண்ணப்ப நாயனார் வம்சம் என்று பெருமையாக சொல்லிக் கொள்கின்றனர்.
20000 பேர் கொண்ட 36 கிராமங்களில் 10 பேருக்கு கூட நீரிழிவு நோய் கிடையாது என்பதை கேட்டதும் நம் பாரம்பரிய மகத்தான மருத்துவத்தை மனம் பரிதாப ஏக்கத்துடன் நினைவு படுத்தியது..
நம் நகரம் நம் மக்களை எப்படி அழித்து விட்டது என்பதை இங்கு வாழ்பவர்களை கண்டால் மட்டுமே நம் கண்ணீர் வேதனைகளை உணர இயலும்.
இயற்கையான பசுமை நகரம் மட்டுமே இனி நமது தேவை.
No comments:
Post a Comment