சூரியனே அஸ்தமிக்காத நாடு என்று பெயர் பெற்ற இங்கிலாந்து தேசத்தை கூட ஏசு பிறப்பதற்கு முன் அன்று ஜுலியஸ் சீசர் தலைமையிலான ரோம தேசம் அடிமைப் படுத்தியது...
இன்று அமெரிக்காவையே மிரட்டிக் கொண்டிருக்கும் சீன தேசத்தை அன்று மங்கோலியா என்கிற தம்மாத்துண்டு தேசம் அடிமைப்படுத்தியது.
எனக்கு World பூரா நண்பர்கள் இருக்காங்க. நான் இங்கிலாந்தில் வாழும், சைனாவில் வாழும் நண்பர்களிடம் Facebook, Whatsapp மூலமாக கேட்டேன்.
ஜுலியஸ் சீசர் அன்று இங்கிலாந்தை அடிமைப் படுத்தி ஆண்டதை பற்றி இன்று இங்கிலாந்தில் உள்ள மாணவ, மாணவிகள் சிலபஸில் படித்து கொண்டிருக்கிறார்களா? என்று. அதற்கு இங்கிலாந்து நண்பர் சொல்கிறார். இல்லை. இங்கிலாந்து மற்ற தேசங்களை அடிமைப் படுத்தி ஆண்ட வரலாறுகளைதான் இங்கே நாங்கள் படித்தோம், படித்து கொண்டிருக்கிறோம்.
நாங்கள் அடிமைப்படுத்தப் பட்ட வரலாறு மருந்தளவில் தான் எங்களுக்கு பாடங்களில் சொல்லப்படுகிறது. இதே கேள்வியை நான் ஒரு சீனரிடம் கேட்டேன். செங்கிஸ்கான் என்னும் பேரரசன் தலைமையில் சின்னஞ்சிறிய மங்கோலிய தேசம் உங்கள் நாட்டை அன்று அடிமைப்படுத்தியதே.
அதை பற்றி சீன மாணவ, மாணவிகள் இன்று பாட புத்தகத்தில் படித்து கொண்டிருக்கிறார்களா? அதற்கு அந்த சீனர் என்னிடம் கேட்டார்.
யார்? அந்த செங்கிஸ்கான்.
அதாவது சீன தேசம் அன்று அடிமைப்படுத்தபட்ட வரலாறு மருந்தளவுக்கு கூட சீனர்களின் பாட புத்தகத்தில் இல்லை.
ராஜேந்திர சோழன் அன்று மலேசியா முதல் ஜப்பான் வரை பல நாடுகளை வென்று அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அவர் அன்று எழுப்பிய வெற்றி ஸ்தூபிகள்... பின்னர் அங்கே வந்த ஆட்சியாளர்களால் தரைமட்டம் ஆக்கப்பட்டது.
அதே சமயம் நமது இந்தியாவில்....????
Qutb-ud-din Aibak என்னும் அடிமை டெல்லியை தந்திரமாக கைப்பற்றி அதை கொண்டாடும் விதமாக... அவன் அன்று எழுப்பிய வெற்றி ஸ்தூபியை இன்றும் நம் அரசு பாதுகாக்கிறது.
நான் டெல்லி டூர் சென்றிருந்த பொழுது Qutb மினாரை பார்த்தேன். It's Realy Beautiful யா என்று பெருமையாக பீத்தி கொள்ளும் நம் தேசத்து அடிமை மக்கள்
த்தூ................
நான் மீண்டும், மீண்டும் சொல்கிறேன். சொந்த வரலாறை இழந்த தேசம் புதிய வரலாறை படைக்க முடியாது. நாம் நமது சுயத்தை இழந்து விட்டோம். பல ஆயிரம் ஆண்டுகள் பல தேசங்கள், பல கண்டங்களை ஆண்ட வரலாறை நாம் இழந்து விட்டோம்.
நாம் இழந்த நமது வரலாற்று பெருமையை மீட்டெடுக்க வேண்டியது தேசபக்தி உள்ள ஒவ்வொரு இந்தியனின் கடமை.
Algeria, Andorra, Armenia, Azerbaijan, Bahrain, Cyprus, Egypt, Georgia, Iran, Iraq, Israel, Jordan, Kazakhstan, Kuwait, Kyrgyzstan, Lebanon, Libya, Morocco, Oman, State of Palestine, Palestinian Authority, Portugal, Qatar, Saudi Arabia, Spain, Syria, Tajikistan, Tunisia, Turkey, Turkmenistan, United Arab Emirates, Uzbekistan, Western Sahara, Yemen ரஷ்யாவின் பல பகுதிகளை முதற்கொண்டு
35 நாடுகளை ஒரே குடையின் கீழ் ஆண்ட, ஒரு கோடியே 50 லட்சம் கிலோ மீட்டர் நிலபரப்பை ஆண்ட ஆனானப்பட்ட Umayyad Caliphate சாம்ராஜ்ய சக்கரவர்த்தி Muhammad Bin Quasm லட்சம் வீரர்களோடு சிரியா தேசத்தில் இருந்து சீறி பாய்ந்து கிபி 715 இல் இந்தியா வந்தான்.
அவன் படையில் உள்ள ஒவ்வொரு வீரனும் 4 காட்டெருமைகளுக்கு சமமான பலம் கொண்டவர்களாம். அப்படியென்றால் அந்த ஒட்டுமொத்த படையையும் வழிநடத்திய Muhammad Bin Quasm மின் ஆற்றல் எத்தகையதாக இருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள்.
அத்தகைய அந்த பலம் மிகுந்த கலிப்பா காட்டுமிராண்டி படையை வெறும் 40 ஆயிரம் வீரர்களை கொண்டு வென்ற உலக மாவீரர்களில் நம்பர் 1 வீரரான பப்பா ராவல் Bappa Rawal பற்றி State Board Syllabus-ல் இல்லை...
CBSE Syllabus-லும் இல்லை. அப்ப CBSE சிலபஸை காட்டிலும் தரமானது என்று சொல்லப்படும் ICSE சிலபஸிலும் இல்லை.
பின்ன அவரின் வரலாறு வேறு எதில்தான் இருக்கு ???
குழந்தைகள் படிக்கும் அமர்சித்திர கதாகாமிக்சில் இருக்கு...
வெட்கக்கேடு அவமானம்....
முகலாயர்கள், பிரான்ஸ்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், இறுதியாக வெள்ளையர்கள் வரை... நாம் அடிமைப்படுத்தப்பட்ட ஆயிரம் ஆண்டு வரலாறுகளை தான் நாம் திரும்ப, திரும்ப, திரும்ப, திரும்ப படிக்கிறோம்...
9 ஆயிரம், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகத்தோடு நாம் வாழ்ந்த வரலாறை படிப்பதில்லை.
Bappa Rawal மட்டும் அன்று கலிப்பா காட்டுமிராண்டிகளை தோற்கடிக்காது இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் தெரியுமா ???
கிபி 715 களிலேயே இந்தியா அரேபியர்களுக்கு அடிமை ஆகி இருக்கும்.
விஜயாலயன் தலைமையில் வீறு கொண்டு சோழ தேசம் எழுந்திருக்காது.
ராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டியிருக்க முடியாது...
ராஜேந்திர சோழன் ஒட்டுமொத்த தெற்காசியாவையும் ஆண்டிருக்க முடியாது.
இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம்.
காரணம் இந்த கலிப்பா சாம்ராஜ்யம் முகல் சாம்ராஜ்யத்தை பல மடங்கு வலிமை வாய்ந்த சாம்ராஜ்யம்.
14 ம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர்...
10 லட்சம் வீரர்களோடு நம் இந்தியா மீது படை எடுத்து வந்து மதுரை, தஞ்சை, ஸ்ரீரங்கம் என பல இடங்களில் ரத்த ஆறை ஓட செய்தானே!.
ஞாபகம் இருக்கிறதா ???
14 ம் நூற்றாண்டில் நடந்த அதே கொடுமை எட்டாம் நூற்றாண்டில் நடந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்??.
சற்றே கற்பனை செய்து பாருங்கள்.
மாமன்னர் Bappa Rawal ராஜஸ்தானில் மேவாட் என்கிற சாம்ராஜ்யத்தை தோற்றுவித்தார்.
அவர் தோற்றுவித்த அந்த சாம்ராஜ்யம் தொடர்ந்து 500 ஆண்டுகள் நீடித்து நின்றது.
Bappa Rawal பயன்படுத்திய வீரவாளின் எடை 264 கிலோ...
நீங்கள் நம்புகிறீர்களா இல்லையோ. அவ்வளவு எடை உள்ள அந்த கத்தியைதான் அவர் ஒற்றை கையில் தாங்கி அதை வைத்து கலிபா படையை சுத்தி, சுத்தி அடித்தார்.
Bappa Rawal, லலிதாதித்ய முக்த பீடர் போன்ற இந்தியாவின் நிஜ ஹீரோக்களை வைத்து இயக்குனர் ராஜமௌலி அவர்கள் திரைப்படமாக எடுத்தால்.
அதன்மூலம் வீரம் மிகு இந்தியாவின் வரலாறை உலகமே பார்க்கும்.
பாகிஸ்தானில் இருக்கும் ராவல் பிண்டி என்கிற பெரிய நகரம். அன்று பப்பா ராவல் Bappa Rawal அவர்கள் தனது போர் வெற்றியை கொண்டாடும் விதமாக உருவாக்கிய நகரம்.
எங்கள் வரலாறு இன்னும் ஏராளம் ஏராளம்...!!!ஏராளமப்பா.
படித்ததில் பிரம்மித்தது.
உணர்ந்தால் பகிருங்கள்.
No comments:
Post a Comment