Tuesday 12 December 2017

ஒரு 🤵🏻தகப்பனின் உணர்வுபூர்வமான எச்சரிக்கை

👉🏼அருமையான சம்பவம் ஒன்று....
  தன் 👩🏻‍⚕மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு 🤵🏻தகப்பனின் உணர்வுபூர்வமான எச்சரிக்கை.....
   தன் 👩🏻‍⚕மகளை கடிந்துகொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள் ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள் என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று...
  அப்பாவுக்கு சற்று கஷ்டமாக உணர்ந்தார் ....எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்.....
  ஒருநாள்
👩🏻‍⚕மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள் அப்பா நான் பட்டம்விட்டு விளையாடபோகிறேன் நீங்களும் வாங்க என அழைத்துக்கொண்டு வீட்டின் மாடியில் சென்றாள்......
  பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்.....
   அப்படி மகிழ்திருக்கும் வேளையில்
🤵🏻அப்பா கேட்டார் பட்டம் மேலே பறக்க பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் ....அதன் விருப்பம்போல பறக்க  முடியவில்லை அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா என கேட்டார்.....
👩🏼‍💼மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று....
🤵🏻அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்....
   பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...
🤵🏻அப்பா சொன்னார் மகளே இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை.....
  நேரான வழியில் இந்த பட்டம் பறந்து... உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது...
   இதேபோலத்தான் மகளே உன் 🤵🏻அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான் ...நீதான் அந்த பட்டம் ...நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்....
  உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கை சீரழிந்துவிடும்....இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை...
  நூலாகிய என்னை அறுத்துவிடாதே...
👩🏼‍💼மகள் தன் தகப்பனை அணைத்துக்கொண்டாள்.....😊😊😊
  ஆம் அன்பான 👫பிள்ளைகளே உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம் ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமாயிருக்கும்...
🤵🏻👰🏻பெற்றோருக்கு கீழ்படிந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்....😊😊😊
👉🏼.....Take Care.....👈🏼

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing