+1 மாணவர்களுக்கு மிக மிக குறைந்த மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளன..
எனக்கு தெரிந்த அளவிற்கு மிக நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட 600 மார்க்குக்கு 450லிருந்து 500 மார்க் தான் வாங்கியுள்ளார்கள்
தமிழகத்தின் மொத்த மாணவர்களில் 7% மட்டுமே 500 மார்க்குக்கு மேல எடுத்து இருக்கிறார்கள்.
அடுத்த வருடம் +2வில் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு 550 எடுத்தால் கூட அவர்களின் கூட்டல் மதிப்பெண் 1000 எனும் நிலையினை தாண்டாது என்பதே நிஜம்...
பரீட்சை எழுதிய அத்தனை மாணவர்களும் மன உளைச்சலில் தான் உள்ளார்கள். பெற்றோர்கள் அடுத்த வருடம் கல்லூரியில் எப்படி சேர்ப்பது எவ்வளவு பணம் சேர்ப்பது என கவலையில் உள்ளனர்...
எக்ஸாம் பேப்பர்களை எப்படி திருத்தினார்கள் என்றே தெரியவில்லை.. கணிதத்தில் பல குழந்தைகள் வெறும் 35 தான் எடுத்துள்ளார்கள் அத்தனை கேள்விகளுக்கும் ஒரளவு நன்றாக விடை எழுதியுள்ளனர்..
சென்னை மாணவர்களுக்கே இந்த நிலை என்றால் கிராமத்து மாணவர்களின் நிலை என்னவென்பேன்..
இன் ஜினியரிங் படிக்க கூட கட் அப் மார்க்குக்கு எங்கே செல்வோம் என்ன செய்ய போகிறோம்.. 10 மாதங்கள் கஷ்டப்பட்டு படித்து இன்று மார்க் கம்மியாக வந்திருக்கும் நிலையில் மாணவர்களை தேற்ற வழியே தெரியவில்லை..
நீட் தேர்வுக்கு எதிராக பொங்கிய ஊடகங்களும் போராளிகளும் கொஞ்சம் வாங்களேன் இந்த நிலையினை எதிர்த்து போராடுவோம்...
கவுண்டர் அய்யா ஏன்யா இப்படி குழந்தைங்க வாழ்வில் விளையாடறிங்க..
இதற்கு தமிழக அரசு பொறுப்பா அல்லது தமிழக அரசின் மேல் மக்களுக்கு கோபம் வரவேண்டுமென யாரோ செய்யும் சதி வேலைகளில் இதுவும் ஒன்றா எதுவானாலும் உடனடி தீர்வு தேவை...
மிடியலய்யா
No comments:
Post a Comment