**
பதில் படியுங்கள் கீழே:
தமிழ்நாட்டில் கடவுளுக்கு தந்த காசில் எம்.எல்.ஏ.,க்களுக்கு பிரசாதம்
நேற்று (13/6/2018) சட்டசபையில், அறநிலையத் துறை மானியக் கோரிக்கையை முன்னிட்டு, எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு, பிரசாதம் வழங்க, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.
சட்டசபையில் மானிய கோரிக்கையின்போது, சம்பந்தப்பட்ட துறைகள் சார்பில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், கட்சி பிரமுகர்களுக்கு, 'சூட்கேஸ், மிக்சி, வாஸ்து மீன், டிராவல் பேக்' என, விதவிதமாக பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
எம்.எல்.ஏ.,க்கள், அனைத்து துறை செயலர்கள், அவர்களின் அலுவலக ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் என, 3,000க்கும் மேற்பட்டோருக்கு, காலை உணவு, மதியம் பிரியாணி வழங்கப்படுகிறது.
இதற்கு துறை சார்பில், நிதி எதுவும் ஒதுக்கப்படுவதில்லை. துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில், ஏதேனும் கணக்கு எழுதி, பணம் எடுக்கின்றனர்.
நேற்று, அறநிலையத் துறை மானிய கோரிக்கை நடந்தது. அதையொட்டி, அறநிலையத் துறை சார்பில், 4,000 பிரசாத பைகள் தயார் செய்யப்பட்டன.
இந்தப் பையில் பழநி பஞ்சாமிர்தம், மதுரை முறுக்கு, ராமேஸ்வரம் அதிரசம், சென்னை, அடையாறு அனந்தபத்மநாப சுவாமி கோவில் லட்டு. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி புகைப்படம், குங்குமம், மஞ்சள், விபூதி, கந்த சஷ்டி கவசம் புத்தகம், அபிராமி அந்தாதி புத்தகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
பை தயார் செய்யும் பணியில், நான்கு மாவட்ட, அறநிலையத் துறை ஊழியர்கள், இரண்டு நாட்களாக ஈடுபடுத்தப்பட்டனர். இது தவிர, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்க, 2,000 ரூபாய் மதிப்புள்ள, 450 'ஹாட் பாக்ஸ்' வாங்கப்பட்டுள்ளன. இதற்காக, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.இத்தொகை, கோவில் நிதியிலிருந்து செலவிப்பட்டதாக கூறப்படுகிறது.
இது பக்தர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, பக்தர்கள் கூறுகையில், 'சட்டசபை மானிய கோரிக்கையின்போது, ஒவ்வொரு துறை சார்பிலும், பரிசுப் பொருட்கள் வழங்க வேண்டும் என, எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை.
ஆனால், பரிசுப் பொருட்களுக்கு, பொய் கணக்கெழுதி, ஒவ்வொரு துறை சார்பிலும், லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்' என்றனர்.
Source:தினமலர்
இதை படித்த பின் தமிழ்நாட்டு கோவில் உண்டியலில் ஏன் பணம்,நகை போடலாமா அல்லது போடக் கூடாதா என்பதை உங்கள் முடிவிற்கு விட்டு விடுகின்றேன்.
என்றும் அன்புடன்
ஆண்டாள் P சொக்கலிங்கம்
#உண்டியலில்_ஏன்_பணம்_போட_கூடாது
#ஆண்டாள்
No comments:
Post a Comment