Thursday, 21 June 2018

நடைபெற்று கொண்டிருக்கும் பல போராட்டங்களுக்கான காரணங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற, நடைபெற்று  கொண்டிருக்கும் பல போராட்டங்களுக்கான காரணங்கள் இதற்கு முன்னரே இல்லையா?

1. ஜல்லிக்கட்டு 2009ல் இருந்து 2016 வரை  ஜல்லிக்கட்டுக் காளைகள் பிரச்சனைகளைத் தாண்டிதான் ஓடிக்கொண்டு இருந்தது.

2. இயற்கை எரிவாயு (மீத்தேன்), நியூட்ரினோ போன்றவையும் 2009 ல் இருந்து இருக்கிறது

3. ஸ்டெர்லைட் ஆலை 25 ஆண்டுகளாக இருக்கிறது.

4. காவிரி பிரச்சனை பல தலைமுறைகளாக இருக்கிறது.

5. நீட் 2014 க்கு முன்பே கொண்டுவரப்பட்டது.

6. தமிழகத்தில் தொடர்ந்து பல தேசிய நெடுஞ்சாலைகள், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

7. பலமுறை தமிழகத்தில் புயல் அடித்து, பொதுமக்களும், கடலுக்கு சென்ற மீனவர்களும் இறந்து போய் / காணாமல் போய் இருக்கிறார்கள்.

இப்படி பிரச்சனை என்று சொல்லும் எதை எடுத்துக்கொண்டாலும் அவையெல்லாம் பல ஆண்டுகாலம் இருந்து வந்துள்ளது. ஆனால் 2016ல் இருந்து ஏன் எல்லோரும் இவ்வளவு ஆவேசப்படுகிறார்கள். போராட்டம் போராட்டம் என்று கொந்தளிக்கிறார்கள்.

தமிழா சிறிது சிந்தித்துப்பார். இந்த போராட்டங்களுக்குப் பின்னணியில் அரசியல் கட்சிகள் இல்லை. இவையெல்லாம் அவர்கள் தூண்டிவிட்டு நடத்தப்படும் போராட்டம் இல்லை . அரசியல் கட்சிகளுக்கு இப்படித் தூண்டி விடுபவர்கள் யார் என்ற உண்மை தெரிந்தும் இந்தப் போராட்டங்களினால் தங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்காதா என்று தங்களை அங்கே பதிவு செய்துகொண்டு இருக்கிறார்கள்.

உண்மையான காரணம் என்ன?

பணநீக்க நடவடிக்கைக்குப் பிறகு இரண்டு மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
1. லட்சக்கணக்கில் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு மூடப்பட்டது.

2. பல NGO க்களின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டு மீதம் இருக்கும் NGO க்களையும் அவர்களது வெளிநாட்டில் இருந்து வரும் நிதி மத்திய அரசின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டது. பொதுமக்களாகிய நமக்கு இதனால் எந்த நேரடி பாதிப்பும் இல்லாததால் இதைப் பற்றி நாம் பெரியதாகத் தெரிந்து கொள்ள முயலவில்லை. 

முதல் நடவடிக்கை - வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கை.

ஆனால் எதற்க்காக NGO க்கள் அதாவது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நிதி ஆதாரங்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும்?

இப்பொழுதுள்ள காலகட்டத்தில் ஒரு ஜனநாயக நாட்டின் மீது நேரடியாக போர் தொடுப்பது இயலாத காரணம். அதனால் மறைமுக தாக்குதல் நடத்த இந்த வித NGO க்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலும் இந்த NGO க்கள் கிருஸ்துவ மிஷினரிகளாலும் நக்சல் மாவோயிஸ்ட் சித்தாந்தத்தில் பிடிப்பு உள்ளவர்களாலுமே நடத்தப்படுகிறது. மக்களுக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில், இயற்கையை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், விலங்குகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், மனித உரிமைகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் இதுபோன்ற பல நிறுவனங்கள்    செயல்பட்டு கொண்டு இருக்கிறது.  வெளிநாட்டில் இருந்து  வரும் பல கோடி ரூபாய்களை நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்கும், நாட்டிற்கு அவ பெயர் ஏற்படுத்துவதற்கும், நமது கலாச்சார பண்பாட்டை சீர்குலைக்கவும்    பயன்படுத்துகின்றன இந்த NGO க்கள். மக்களிடையே ஒரு பதற்றத்தையும், நிர்வாகத்தின் மீது நம்பகத்தன்மையையும், இன, மத கலவரங்களையும் தூண்டிவிடும் வேலையே செய்வதும் இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணி    

மேலே சொன்ன பிரச்சனைகள் இவ்வளவு ஆண்டுகளாக இருந்தாலும் இப்பொழுது ஏன் அவர்கள் களத்தில் இறங்கவேண்டும்?

தமிழகத்தில் நடைபெற்ற கூடங்குளம் அணு உலை போராட்டம் இந்த வகைதான். அன்று இருந்த மத்திய அரசு கட்டுப்படுத்த தடுக்க தவறிவிட்டது. அதனால் அவர்களுக்கு வரவேண்டிய நிதி வந்துகொண்டு இருந்தது. அதனால் போராடவில்லை.  இப்பொழுது  அவர்களது நிதி ஆதாரம் தடைபட்டு விட்டது. அதனால் வேறு வழி இல்லாமல் தங்களது உண்மையான முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். பல கிருஸ்துவ சர்ச்சுகளும், நக்சல் போராட்ட குழுக்களும் இந்த வகை போராட்டத்தில் இருப்பதை நீ கண்கூடாக  பார்த்திருப்பாயே தமிழா... பல மாநிலத்து சர்ச்சுகளும் இந்த மத்திய அரசிற்கு எதிரான கருத்துகள் கூறுவதை படித்திருப்பாயே நீ .. இவை எல்லாமே நமது நாட்டிற்கு எதிராக வேலை செய்ய அவர்களுக்கு வந்துகொண்டிருந்த நிதி தடைபட்டு போனதால் எழுந்த கோபம்.

நாட்டின் வளர்ச்சியில் தான் உன்னுடைய, என்னுடைய எதிர்காலமே இருக்கிறது.

நேரடியாக நடைபெறும் யுத்தம் என்றால் நமது ராணுவம் அவர்களை எதிர்கொண்டு ஓட ஓட விரட்டியடித்து நம்மை காப்பாற்றும். நாட்டிற்குள்   நமக்கெதிரான சக்திகள் நேரடியாக மோதினால் போலீஸ் நம்மை பாதுகாக்கும்.

ஆனால் இது மறைமுகத் தாக்குதல். மக்களாகிய நாம் தான் இதைப் புரிந்துகொண்டு அந்த வித சக்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவர்கள் நம்மை வசியப்படுத்தும் மூளைச் சலவை செய்யும்படி பேசும் பேச்சுக்களைப் புறம் தள்ளி நாட்டையும் நம்மையும் காத்துக் கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உள்ள ஜனநாயகக் கடமை. .   

வா தமிழா விழித்தெழுந்து புத்துணர்ச்சியோடு வா. எது உண்மை எது பொய் என்று நீ ஆராய்ந்து பார்த்து முடிவெடு. ஒரே நிலைக் கருத்து இல்லாமல் பல்வேறு கருத்துகளைக் கேட்டு எது சரி எது தவறு என்று முடிவெடு.  ஒன்றாகச் சேர்ந்து இந்த மறைமுகத் தாக்குதலை எதிர்கொண்டு எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடவைத்து வெற்றி கொள்வோம். நம்மை பிரிக்கும் சக்திகளை மண்ணோடு மண்ணாக்குவோம். 

நாட்டின் வளர்ச்சியில் நமது பங்களிப்பையும் தருவோம்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing