Wednesday 11 July 2018

கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகம் வருவதால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து உண்மையா ?

கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகம் வருவதால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து உண்மையா ???. பார்ப்போம் விரிவாக.....

குமரி மாவட்டத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுகம் வருவதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற கருத்து பரப்ப்படுகிறது.


துறைமுகத்திற்கு வரும் கப்பல்களால்   மீனவர்கள் மீன் பிடிக்க இடைஞ்சலாக இருக்கும் , மீன் வளம் பாதிக்கும், கப்பலில் சிக்கி வலைகள் அறு படும், படகுகளை கப்பல் மோதும்  என பல கருத்துக்கள் பரப்பி விடப்படுகிறது......

சரி முதலில் துறைமுகம் வருவதால் வீடுகள் பாதிகப்படுமா என்று பார்ப்போம்....

துறைமுகத்திற்கு கையகப்படுத்த போகும் நிலங்கள் பெரும்பாலானவை வீடுகளே இல்லாத பகுதியாகும்......

சரி இனி மீனவர்கள் பாதிகப்படுவார்களா என்று பார்ப்போம்.......
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது கன்னியாகுமரி....
தெற்கே இந்திய பெருங்கடல் கிழக்கே வங்காள விரிகுடா மேற்கே அரபிக்கடல் என மூன்று கடல்களும் உள்ள மாவட்டம்....
இந்த மூன்று கடல்களிலும் மீன் பிடிக்கின்றனர் மீனவர்கள்......
கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள் குமரி மாவட்டத்தில் மீன்பிடிப்பது மட்டுமல்லாமல் கேரளா மற்றும் கர்நாடகா கடற்கரைகளில் இருந்ததும் மீன் பிடிக்க செல்கிறார்கள்.....

கேரளாவில் ஆழ்கடல் மீன்பிடி செய்வதில் பெரும்பாலானவர்கள் குமரி மாவட்ட மீனவர்களே......
சரி அடுத்ததாக இவர்கள் மீன் பிடிக்கும் அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல்  எத்தகையது என்று பார்ப்போம்......
வளைகுடா நாடுகளானில் இருந்து தான் சீனா , ஜப்பான், தென்கொரியா, தைவான், இந்தோனேசியா மற்றும் இதர தெற்காசிய பசிபிக் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது........

சீனாவில் உற்பத்தி ஆகும்  பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு அதாவது வளைகுடா, ஐரோப்பிய மற்றும்  வட அமெரிக்கா நாடுகளுக்கு கொண்டு  செல்லப்படுகிறது.......
இவை அனைத்தும் எவ்வழியாக  செல்கிறது என்று பார்ப்போம்.......
இரண்டு பகுதிகள் இங்கே முக்கியம்......
ஏடன் வளைகுடா (Gulf of Aden) மற்றும்  மலாக்கா நீரிணை/ஜலசந்தி (Strait of Malacca).
இந்திய பெருங்கடலின் எல்லையில் அமைந்திருக்கும் இடங்கள் என்றே சொல்லலாம்....
ஏடன் வளைகுடா என்பது அரபு நாடான யேமன்(Yemen) நாட்டிற்கும் ஆப்ரிக்க நாடுகளான சோமாலியா மற்றும் டிஜிபோட்டி(Digibouti) நாடுகளுக்கு இடைய உள்ள வளைகுடா கடல் பகுதி....
மலாக்கா நீரினை(Strait of Malacca) என்பது இந்தோனேசியாவிற்கும் மலேசியாவிற்கும் இடைய உள்ள கடற்பகுதி.......
உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் வளைகுடா  நாடுகள் தான் பெரும் பங்கு வகிக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று....
உலகின் கொண்டு செல்லப்பட்டும் கச்சா எண்ணெயில் மூன்றில் ஒரு பங்கு இந்திய  பெருங்கடல்  வழியாக தான் கொண்டு செல்லப்படுகிறது.....
ஏனென்றால் உலகின் அதிக கச்சா எண்ணெய்  இறக்குமதி செய்யும் நாடான சீனாவிற்கு கொண்டு  செல்லப்பட்டும் கச்சா எண்ணெயில் 80%  ஏடன் வளைகுடாவில் ( வளைகுடா நாடுகளில் இருந்து) இருந்துஇந்திய பெருங்கடல் வழியாக அதாவது கன்னியாகுமரிக்கு தெற்கே உள்ள கடல்வழிபாதை வழியாக மலாக்கா நீரிணை சென்று அது வழியாக தென் சீனக்கடல்  சென்று சீனா  சென்றடைகிறது.........
இது போன்று ஜப்பான், தென்கொரியா, இந்தோனேசியா,தைவான் மற்றும் இதர தெற்காசிய நாடுகளுக்கும் இந்த கடல் வழிப்பாதை வழியாக தான கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது......
சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யும்  பொருட்கள்  தென் சீன கடல் பகுதியிலிருந்து மலாக்கா நீரிணை வழியாக கன்னியாகுமரி க்கு தெற்கே உள்ள கடல் வழிப்பாதை  வழியாக சென்று  ஏடன் வளைகுடாவை அடைந்து பின்னர்  சூயஸ் கால்வாய் வழியாக    வட அமெரிக்கா மற்றும்  ஐரோப்பா நாடுகளுக்கு  கொண்டு செல்லப்படுகிறது.....
இது போன்று தான் ஜப்பான் மற்றும் கொரியாவில் இருந்து செல்லும் பொருட்களும் கொண்டு செல்லப்படுகிறது.....
கன்னியாகுமரி தெற்கே உள்ள கடல்வழிபாதை வழியாக சென்றால் தான் சீனா , ஜப்பான் மற்றும் இதர தெற்காசிய நாடுகள் இருந்து வட அமெரிக்காவின் கிழக்கு பகுதி, ஐரோப்பா , ஆப்பிரிக்க  மற்றும் வளைகுடா  நாடுகளுக்கு எளிதாக சரக்குகளை கொண்டு செல்ல இயலும்......
உலகின் பரப்பபாக இயங்கும்  மற்றும்  நெரிசல் மிகுந்த சர்வதேச  கடல் வழிப்பாதையில் இந்த  கன்னியாகுமரிக்கு தெற்கே உள்ள பாதையும் ஒன்று என்பதை நாம் கேட்கும் போது வியப்பாக தான்  இருக்கும் ஆனால் அது தான் உண்மை......
ஒருவருடம் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும்  அதிகமான கப்பல்கள் இந்த கன்னியாகுமரிக்கு தெற்கே உள்ள கடல்வழிபாதை வழியாக தான் போய்க்கொண்டிருக்கிறது....
அதாவது சராசரியாக ஒரு நாள் 250 கப்பல்களுக்கு  மேல் இந்த வழியாக  செல்கிறது........
சராசரியாக நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 18 முதல் 20 மில்லியன் பீப்பாய் (barrel) கச்சா எண்ணெய் இவ்வழியாக ( ஏடன் வளைகுடா வில் இருந்து கன்னியாகுமரியின் தெற்கே உள்ள கடல் வழிப்பாதை வழியாக மலாக்கா நீரிணை வரை ) கொண்டு செல்லப்படுகிறது..........
உலகில் கொண்டு செல்லப்படும் பொருட்களில் 30% பொருட்கள் இவ்வழியாக தான் செல்கிறது.....
இந்த மாதிரி உள்ள கடல்வழிபாதை உள்ள  கடல் பகுதியில் தான் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள்......
இவ்வளவு கப்பல்கள் செல்லும் கடல்பகுதியில் மீன் பிடிக்கும் போது எந்த பிரச்சினையும் வராத  மீனவர்களுக்கு  இதில் சில கப்பல்கள்  குமரி மாவட்டத்தில் அமைய இருக்கும் துறைமுகத்திற்கு வந்து  செல்லும் போது மட்டும் பிரச்சனை வரும் என்று மக்களிடையே பரப்புவது எவ்வளவு பொய்யான தகவல்கள் என்று நாம் புரிந்துகொள்ள  வேண்டும்.....
இவ்வளவு கப்பல்கள் போவதால் அறுபடாத வலைகள் மற்றும் அழியாத மீன் வளங்கள் சில கப்பல்கள் குமரி மாவட்ட துறைமுகத்திற்கு வந்து செல்லும் போது மட்டும் எப்படி அறுபடும் எப்படி அழியும் என்பது புரியாத புதிராக உள்ளது.....
இவ்வளவு கப்பல்கள் செல்லும் போது படகுகளில் மோதல் இல்லை ஆனால் சில கப்பல்கள் வரும்போது மட்டும் படகுகளில் மோதும் என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய்யாக இருக்கும்......
கேரள  மாநிலம் கொச்சி வல்லார்பாடத்தில்  பெரிய துறைமுகம் உள்ளது... இங்கே  கன்னியாகுமரி மாவட்ட  மீனவர்கள் அதிக அளவு மீன்  பிடிக்கிறார்கள்.... இங்கே எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் குமரி மாவட்டத்தில்  துறைமுகம் வந்தால் பிரச்சினை என்று கிளப்பி விடுவது என்ன நியாயம் என்று தெரியவில்லை.....
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் டிகோ கார்சியா(Diego Garcia) தீவு வரை சென்று மீன் பிடிப்பவர்கள்... அங்கு சென்று மீன் பிடித்து பிரிட்டன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுக்கப்பட்டு..... இனி டிகோ கார்சியா கடற்கரையில் மீன் பிடித்தால் மீன் பிடிக்கும் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற மீனவர்கள் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதால் எல்லாம் வேற கதை......
டிகோ கார்சியா தீவு - கன்னியாகுமரிக்கு நேர் தெற்கே சுமார் 1800 கிலோமீட்டர் தொலைவில்  உள்ள பிரிட்டனுக்கு சொந்தமான தீவு..... பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் ராணுவ மற்றும் கடற்படை  தளம் மட்டுமே உள்ள தீவு.
துறைமுகத்திற்கு எதிராக சிலர் கிளப்பி விடும் கதைகள் அனைத்தும் மக்களை திசை திருப்பும்  பொய்யான தகவல்களே.....
இங்கே யார் துறைமுகம் கொண்டு வருகிறார்கள் என்பது தான் பிரச்சினை என்று நினைக்கிறேன்...  ஒருவேளை துறைமுகம் வந்து மோடிக்கும், நிதின் கட்காரிக்கும், பொன்னாருக்கும் பெயர் கிடைத்து விட்டால் திராவிட அரசியல் செய்ய இயலாது என்ற எண்ணமாக இருக்கலாம்.....
உண்மையை தெரிந்து கொள்வோம் தேசத்தின் முன்னேற்றத்தை ஆதரிப்போம்........
இந்தியா  வல்லரசாக துணை நிற்போம்.....

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing