Thursday, 12 July 2018

குழந்தைகள் கெட்ட வார்தைகள் பேசுவதில்லை கேட்ட வார்தைகளையே பேசுகிறார்கள்

பையன் அப்பாவிடம் சொன்னான் ' 

அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் '

' எதுக்குடா என்னை வரச்சொல்றாங்க ?"

"கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க..

9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு 63 ந்னு சொன்னேன் ..

அப்றம் 7 அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க ..அதே எழவுதானே வரும்னு சொன்னேன் ..உன்ன வந்து பார்க்க சொல்லிட்டாங்க "

" ஆமா அதே எழவ்வுதானே வரும்...சரி ,சரி நாளைக்கு வரேன் " 
..
அடுத்த நாள் பையன் அப்பாவிடம் கேட்டான்.


" அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரை பார்த்தியா ?"
" இல்லடா நாளைக்கு வரேன் "

" சரி நாளைக்கு கணக்கு டீச்சர பார்த்துட்டு அப்டியே பிடி டீச்சரையும் பார்த்துடு "

" எதுக்குடா ?

" drill இருந்தது ..முதல்ல வலது கைய தூக்க சொன்னாரு செஞ்சேன் ..
அப்றம் இடது கைய தூக்க சொன்னார் செஞ்சேன்..ரெண்டு கையயும் தூக்கிட்டே வலது கால தூக்க சொன்னாரு தூக்கினேன்..
அப்றம் இடது கால தூக்குன்னு சொன்னாரு .ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்டி நிக்க முடியும் லூசு-ன்னு சொன்னேன்..

உங்கப்பாவை கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாரு ..

" அதானே சரியான லூசு .சரி சரி நாளைக்கு வந்து பார்க்கிறேன் "
..
அடுத்த நாள் பையன் அப்பாவிடம் கேட்டான்


" இன்னிக்கு ஸ்கூலுக்கு போனியாபா "
" இல்லடா நாளைக்கு வரேன் "
" நீ போக வேணாம் பா "
" ஏண்டா?"
" என்னை ஸ்கூலேர்ந்து டிஸ்மிஸ் பண்டாங்க "

" என்னாச்சுடா?"

" ப்ரின்சிபல் ரூமுக்கு வரச்சொன்னார் ..

அங்க கணக்கு டீச்சர் ,பிடி டீச்சர் சயிண்ஸ் டீச்சர் மூணு பேரும் இருந்தாங்க "

" சயின்ஸ் டீச்சரா ..!! அந்த நாய் ஏண்டா அங்க இருந்தான் ?"
..
" அதேதான் பா நானும் கேட்டேன் .

டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க "

~~~
நீதி: குழந்தைகள் கெட்ட வார்தைகள் பேசுவதில்லை கேட்ட வார்தைகளையே பேசுகிறார்கள்..

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing