Sunday 16 September 2018

சீரகம் மருத்துவக் குணங்கள்

*சீரகம் மருத்துவக் குணங்கள்*
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
இதை நாள் முழுவதும் அவ்வப்போது பருகி வர எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது.
நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம்.
பசி ருசியைத் தூண்டும் தன்மையும் இந்தச் சீரக நீரூக்கு
உண்டு.
சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும்.
இதை தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு கோளாறு ஏற்படாது தடுக்கும்.
எனவே வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.
உடலுக்கு குளிர்ச்சியும் தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
எனவே தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடியைச் சேர்த்து பருகினால் ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.
இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
சிறிது சீரகம், மிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing