Friday 14 September 2018

#பசும்பொன்_முத்துராமலிங்கத்_தேவர்

ஒரு உண்மைச் சம்பவம்..!
தனது ஒன்பதாவது வயதில்
தன்னுடன் படித்த நண்பர்களோடு அந்தச் சிறுவன்
தனது திருநகர் வீட்டிலிருந்து தினந்தோறும் திருப்பரங்குன்றம் சென்று முருகனை வழிபடுவது வழக்கம்.
அன்றும் அவன் வீதியில் சென்று கொண்டிருந்த பொழுது
,
கிருத்துவ பாதிரியார் ஒருவர்
மெகாபோனை வைத்துக் கொண்டு மதப்பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்.
அந்தப் பிரசங்கத்தில்
இந்து மதக்கடவுள் வழிபாட்டைக் குறை சொல்வதற்காக
"ஏ.,.மானிடர்களே,
நீங்கள் நடக்கின்ற சாலைகளிலே போடப்பட்டிருப்பது கல்,
உங்கள் வீட்டு வாயிற்படியில் போடப்பட்டிருப்பதும் கல், குளக்கரையில் துணி துவைக்க பயன்படுவதும் கல்,
நீங்கள் வணங்கும் கடவுள்
அதுவும் கல்,"
"ஒரு காலத்தில் உங்கள் கால் பட்ட கல்லைத்தான் இப்பொழுது கோவிலில் வைத்துக் கடவுள் என்று சொல்கிறார்கள் ".
அதற்கு சக்தியுமில்லை, வணங்குகிற உங்களுக்குப் புத்தியும் இல்லை.
என்று பாதிரியார் பேசிக் கொண்டே போகிறார்.
இடையில் புகுந்த அச்சிறுவன் அவரது பேச்சைத் தடுத்து நிறுத்தி
"எனக்கொரு சந்தேகம்,
கொஞ்சம் விளக்க முடியுமா?"
என்று கேட்க,
அந்தச் சிறுவனை ஏற இறங்க பார்த்து, கூடியிருந்த கூட்டத்தை நோக்கி "மகாகனம் மிக்க மக்களே, இதோ இச்சிறுவன் என்னிடம் கேள்வி கேட்கப் போகிறான்,
நான் இப்பொழுது அவன் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப் போகிறேன். உங்கள் கவனத்தை என்பால் திருப்புங்கள்" என்றார்.
சிறுவன் கேட்டான்,
நமக்குப் பின்னால் பிறந்த ஒரு பெண்ணை என்னவென்று சொல்வோம்..?
"தங்கை என்போம்,
தமக்கை என்போம்,
சகோதரி என்போம்
என்றார் பாதிரியார்.
"நம்மைப் பெற்றவளை எப்படிச் சொல்வோம்..?
"தாய் என்போம்,
அன்னை என்போம்,
அம்மா என்போம்".
"நாம் மணந்து கொள்ளும் ஒரு பெண்ணை..?"
"மனைவி என்போம்,
துணைவி என்போம்,
இல்லாள் என்போம்".
இந்த மூன்று உறவும்
உங்களுக்கு இருக்கிறதா..?
"தெரிந்துதான் கேட்கிறாயா..? சிறுவனே..!
தாயில்லாமல் யாரும் பிறக்க முடியாது.
எனக்குத் தாயும் இருக்கிறார், மனைவியும் இருக்கிறார்,
மகளும் இருக்கிறாள் என்று ஏளனமாக பாதிரியார் பதிலளித்தார்.
"உடலால், உணர்வால், உறுப்புகளால் மூவரும் ஒரே தன்மை கொண்டவர்கள் தான் இல்லையா..?" என்று
அந்தச் சிறுவன் கேட்டான்.
பாதிரியார் "ஆமாம்" என்றதும்,
"உங்கள் மனைவியிடம் நீங்கள் நடந்து கொள்ளும் முறைக்கும், உங்கள் தாய், தங்கையிடமும் நடந்து கொள்ளும் முறைக்கும் வேறுபாடுகளும், வித்தியாசமும் இருக்கிறதா..?
இல்லை மூவரையும் ஒரே நோக்கோடுதான் பார்க்கிறீர்களா..?" என்றதும்
மெகாபோன் கீழே விழுகிறது,
பாதிரியாரின் வாய் வார்த்தையின்றி திறந்தபடியே இருக்கிறது.
கூடியிருந்த கூட்டத்தார் பிரமிப்பும் பெருமிதமும் கொண்டு
அந்தச் சிறுவனின் தோற்றத்தையும், வயதை மீறிய அறிவையும் போற்றிப் பாராட்டினர்.
பாதிரியார் தான் செய்த தவறுக்காக தன்னை
குறுக்கிக் கொண்டு
அந்தச் சிறுவன் முன் வந்து
"தம்பி, இப்போது என் முதுகு மட்டும் உன் முன்னால் வளைந்திருக்கவில்லை,
என் அறிவும் ஆணவமும் வளைந்து தான் இருக்கிறது".
"எங்கள் மதத்தின் பால் கொண்ட ஈடுபாட்டால் சொல்லின்
ஆழம் புரியாமல் பேசிவிட்டேன், மன்னித்து விடப்பா" என்று சொல்ல ...
"பிற மதத்தைக் குறைசொல்லி உங்கள் மதத்தை
வளர்க்கப் பார்க்காதீர்கள்".
உங்கள் மதத்தின் மேன்மையைப் பிறருக்குப் புரிய வையுங்கள்.
பிடித்திருந்தால் அவர்கள் உங்களைத் தொடரட்டும்..!
அதற்குத் தடையாக இங்கே எவரும் இருக்க மாட்டார்கள்.
மேலும், எல்லா மதத்திலும்
மையப் பொருளாக இறைவன் தான் இருக்கிறான் என்பதையும் மறந்து விடாதீர்கள் என்றான் அந்தச் சிறுவன்.
ஒன்பது வயதில் இந்து மதத்தின் காவலராக நின்று பேசும் சாமர்த்தியம் எந்தப் பாடத்தில்
அவர் படித்தது..?
இயற்கையின் வெளிப்பாடுகள் எப்படி கற்றுக்கொள்ளாமல் நடைபெறுகிறதோ, அப்படித்தான் அதுவும்.
அந்த ஞானச் சிறுவன் வேறு யாருமல்ல....
#பசும்பொன்_முத்துராமலிங்கத்_தேவர் தான்.
.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing