Sunday 16 September 2018

முடிந்தவரை முழுமையாகப் படித்து பின்னர் ஷேர் செய்யவும்

♥♥அனைவருக்கும் ஒரு கோரிக்கை. பெரிய பதிவு. கடந்து செல்லாமல் இதை முடிந்தவரை முழுமையாகப் படித்து பின்னர் ஷேர் செய்யவும்..!♥♥
இந்தியாவில் இதுவரை நடந்த மிகப் பெரிய ஊழல் எது என்று பார்த்தால் அது காமன்வெல்த் ஊழல் இல்லை (Rs 50,000 கோடிகள்), 2G ஊழல் இல்லை (Rs 1,76,000 கோடிகள்) நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் கிடையாது (Rs 1,86,000 கோடிகள்) - ஆனால்... முறையாக பொதுத்துறை வங்கிகளில்
உருவாக்கப்பட்ட NPA (Non Performing Assets) ஊழல் மட்டுமே. இது நடந்த காலம் 2008 - 2014.
♥இது எப்படி விரிவடைந்தது என்று பார்ப்போம்..!
1947 முதல் 2007 வரை உள்ள காலகட்டத்தில் இந்த பொதுத்துறை வங்கிகள் கொடுத்த கடனின் அளவு 18,00,000 கோடிகள். (18 lakh crore) ஆனால்.. மொத்தமாக அடுத்த 6 ஆண்டுகளில் அதாவது 2008-2014 காலகட்டத்தில் இந்திய அரசாங்கம் கொடுத்த கடனின் அளவு 52,00,000 கோடிகள் (52 லட்சம் கோடிகள்) இது UPA 2 அரசு தன்னுடைய அயோக்ய அடிமைகளுக்கு ஒதுக்கிய கடன் பணம். இந்த அடிமைகள் அனைவருமே இதுவரை தங்களின் கடனில் பெரும்பகுதிகளை அடைக்காத, திமிர் பிடித்த, கொழுப்பு பிடித்த குந்தாணிகள். (wilful defaulters)
♥என்ன நடந்தது..?
வங்கிகள் “அந்த குடும்பத்திற்கு” வேண்டப்பட்ட சில பல தொழிலதிபர்களுக்கு கடன் கொடுத்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார்கள். இந்த வங்கிகளுக்கு 10 ஜன்பத்திலிருந்து ஒரே ஒரு போன் கால் வரும். அதன் பிறகு இந்த தொழிலதிபர்களின் தேவைப்படும் அளவுக்கு கடன் அளிக்கப்பட்டது.
கடன் உதவி அளித்த பின்னர்.. அந்த தொழிலதிபர்களால் அந்த கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.. ஏற்படுத்தப்படும். அதன் பின்னர்... இதே வங்கிகளை மீண்டும் அதே அதிபருக்கு, அதே அளவு கடன் வழங்குமாறு  நிர்பந்தப்படுத்தப்பட்டனர். இந்த பணத்தைக் கொண்டு பழைய கடனின் ஒரு பகுதியை மட்டும் அடைத்து அதற்கு பிரதியாக மேலும் கடன் பெற்றார்கள் அந்த தொழிலதிபர்கள். இப்படியாக கடன் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போனது.
உதாரணத்திற்காக.. X என்கிற ஒரு தொழிலதிபருக்கு 1000 கோடி கடன் கொடுக்கப்படுகிறது. அவரால் அந்த கடனை செலுத்த முடியவில்லை என்றதும் அவர் ராஜ வம்ஸத்தை அணுகுவார். இருவருக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்து, நல்ல முறையில் டீலிங் முடிந்ததும் வங்கிகளுக்கு ஒரு போன் கால் போகும். உடனே அதே வங்கி... அதே X ற்கு மீண்டும் மற்றொரு 1000 கோடிகளை கடனாக அளிப்பார். இப்போது திரு X அவர்கள் தன் முதல் கடனில் ஒரு சின்ன பகுதியை திரும்பச் செலுத்துவார். இப்படியாக கடன் பணம் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே போகும்.
♥இது இத்துடன் முடிகிறதா..?
இல்லை. இத்துடன் இது முடியாது. இந்த UPA2 அரசாங்கம் தொடர்ந்து இந்த திருட்டு அடிமை தொழிலதிபர்களுக்கு மேலும் மேலும் கடன் வழங்க.. வங்கிகளை உத்தரவிட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களில் காங்கிரஸ் ராஜ்யசபை உறுப்பினரான தொழிலதிபர் விஜய் மல்லையா ஒரு முக்கிய புள்ளி. இவன் வாங்கித் திருப்பிச் செலுத்தாத மொத்த கடனையும் அளித்த ஆட்சி UPA2.
இப்படியாக UPA2 வெட்கமில்லாமல், தொடர்ந்து கடனை வழங்கிக் கொண்டே இருக்க... இந்த வாராக்கடன் மேலும் மேலும் வருடா வருடம் சேர்ந்து கொண்டே போனது. ஒரு காலகட்டத்தில் இந்த வாராக் கடன் 10,00,000 கோடிகளாக (பத்து லட்சம் கோடி) குவிந்தது. இவை அனைத்தும் வாராக்கடன் கணக்கில் சேர்ந்து எப்போதுமே வாராக் கடனாக இருந்து வந்தது. இந்த பணம் முழுவதும் நம் ஒவ்வொருவரும் செலுத்திய வரிப்பணமாகும்.
♥இந்த ஊழலில் இன்னும் என்ன இருக்கிறது..?
இந்த ஊழல் இத்துடன் முடிந்து விடவில்லை. UPA2 அரசாங்கம் இந்த  வாராக் கடனின் (NPA - Non Performing Assets) உண்மைத் தன்மையை வெளியே சொல்லாமல் அதாவது.. 10,00,000 கோடிகள் (பத்து லட்சம் கோடிகள்) என சொல்லாமல் பொய்யாக 2,00,000 கோடி (2 லட்சம் கோடி) என்று அறிவித்தனர். இது எதற்காகவென்றால் அப்போதுதான் இந்த தொழிலதிபர்களிடமிருந்து தாங்கள் ஆதாயமடைய முடியும் என்பதற்காக. இந்த UPA2 வில்தான் படு பயங்கரமான பொருளாதார மேதைகளான ப.சிதம்பரம், மன்மோகன் சிங் போன்றவர்கள் இருந்தார்கள். அவர்கள்தான் மக்களை முழு மடையர்களாக்கி அவர்களின் வரிப் பணத்தை திருடர்களுக்கு.. மறைமுகமாகத் தங்களுக்கு வாரி வழங்கிக் கொண்டார்கள்.
♥இந்த உண்மை எப்படி வெளியே வந்தது..?
மோதி ஜி தன் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டவுடன் நம்முடைய ஒட்டு மொத்த அரசியலமைப்பும் எந்த நேரமும் வெடித்துச் சிதறுவதற்குத் தயாராக இருந்த இந்த எரிமலையில் கீழே தள்ளாடிக் கொண்டிருந்தது. மோதி ஜி முதன்முதலில் பதவி ஏற்றதும் எல்லா வங்கிகளையும் தங்கள் வாராக் கடன் என்னும் நாசத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்று ஆணையிட்டார். அதோடு அப்படி வராது என்கிற கடனை பொதுவில் அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி எல்லா வங்கிகளும் தங்களின் வாராக் கடனை அறிவிக்கத் தொடங்கியதும்.. அந்தப் பணம் 10,00,000 கோடிகள் (10 லட்சம் கோடிகள்) என்பது தெரியவந்தது. அதன் பிறகு ம
ோதி ஜி இந்த வங்கிகளை ஒரு நடைமுறைக்குக் கொண்டு வந்து, பிரச்சனைகளைத் தீர்க்க ஏற்பாடு செய்து, வங்கிகளின் அமைப்பையே வலுப்படுத்துவதற்கான அத்தனை முயற்சிகளையும் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றார்.
♥ஆனாலும் இன்னமும் இந்த வாராக் கடன்கள் ஏன் அதிகரித்துக் கொண்டே போகிறது..?
ஒவ்வொரு வங்கிகளாக தங்கள் வாராக்கடனை அறிவிக்க அறிவிக்க... வாராக்கடனின் அளவு அதிகரித்துக் கொண்டே போனது. அதனால்தான் 2008 இல் 2 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன் 2017 இல் 11 லட்சம் கோடியாக வளர்ந்தது. உண்மையில் வாராக்கடன்கள் அதிகரிக்கவில்லை. இது பொது மக்களுக்கு முழுமையாக தற்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வாராக்கடன் 2013 இல் 10 லட்சம் கோடியாகத்தான் இருந்தது. ஆனால் சோனியா காந்தி தலைமையிலாக UPA2 அரசாங்கள் அதை 2 லட்சம் கோடி என்று பொய் சொல்லி மறைத்திருந்தது.
வருடங்கள் ஏற ஏற இந்த கடனுக்கான வட்டியும் முதலுடன் சேர்ந்து அதனால் வாராக் கடனின் தொகையும் இன்று வரை ஏறிக் கொண்டே போகிறது. (வங்கிகள் வாராக்கடனின் வட்டியை அது வாராக்கடன் என்று ஆன பின்னரும் கணக்கிடுவது என்பது நடைமுறை). இந்த கடன்கள் அனைத்துமே UPA2 அரசு தங்கள் காலங்களில் கொடுத்தது. இவை அனைத்தும் தற்போது மோதி ஜியின் ஆணைப்படி பொதுவில் வந்துள்ளது. அவ்வளவுதான்.
♥இதற்காக மோதிஜி அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது..?
திவால் சட்டத்தின்படியும், பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்படியும் யாரெல்லாம் வாங்கிய கடனை அடைக்க முடிந்தும் அடைக்காமல் (Wilful Defaulters) ஓடத் தயாரான குந்தாணிகளோ அவர்களிடமிருந்து பணத்தை திருப்பி வாங்குவதற்கான எல்லா முயற்சியும் எடுக்கப்படுகிறது. அத்தனை கடன்களும் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெரிய கடன் வழங்குவதற்கு முன்னரும் கடன் வாங்குபவரின் ஒட்டு மொத்த தனிப்பட்ட செய்திகளையும் சேகரித்து... அப்படி அவர்கள் திரும்பச் செலுத்தவில்லை என்றால் நாட்டை விட்டு ஓடுவது என்பதும் தடுக்கப்பட்டுள்ளது.
♥இதை ஏன் இந்த மோதிஜி அரசாங்கம் 2014 - 15 இன் போதே இதை அறிவிக்கவில்லை..?
ஒருவேளை இந்த செய்தியை அப்போதே அதாவது 2014 - 15 இலேயே மோதிஜி பொது மக்களுக்கு அறிவித்திருந்தால்.. BJP அரசியலுக்கு அது மிகப் பெரிய லாபத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால்... அது நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையே நாசமாக்கியிருக்கும். பொது மக்கள் பேங்கிங் சிஸ்டத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை செல்லரித்து, அத்தனை பொருளாதார நடவடிக்கைகளும் முழுமையாக ஸ்தம்பித்திருக்கும். ஒட்டு மொத்த பொருளாதாரமும் சுழன்றடித்துக் கொண்டு பாதாளத்தில் வீழ்ந்து... அத்தனை பேங்கிங் சிஸ்டங்களும் மொத்தமாக தகர்ந்து போயிருக்கும்.
எல்லா தவறுகளையும் சரிசெய்து, பொருளாதாரத்தை பலப்படுத்திய பின்னரே.. இந்த அரசாங்கம் இந்த உண்மைகளை பொது மக்களின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறது. இதற்காக பல பல பழிகளை ஏற்றுக் கொண்ட போதிலும் எங்குமே மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டாமல், மக்களின் நம்பிக்கையை தகர்க்காமல் இதுநாள் வரை அமைதி காத்ததன் காரணம் இதுதான்  || 
வெளிநாட்டில் கடன் வாங்கியாவது பெட்ரோல் விலையை குறை ... நான் ஜாலியாக காரில் போகிறேன் ... இது என்ன மாதிரியான மனபோக்கு.. பெட்ரோல் பேரல் விலை அதிகரித்தால் பெட்ரோல் விலை ஏற தானே செய்யும்... இதற்கு காங்கிரஸ் பாஜக என நான் பிரித்து அரசியல் செய்ய விரும்பவில்லை...
பெட்ரோல் பேரல் விலை சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் போதும் எனக்கு பெட்ரோல் 30ரூபாய்க்கு கிடைக்க வேண்டும்.. நான் கருவேப்பிலை வாங்க என் காரை எடுத்து கொண்டு தான் போவேன் எனறால் அதற்கு பெயர் நாட்டு நலமில்லா சுயநலம்...
பெட்ரோல் விலை அதிகரிப்பு பொது போக்குவரத்த்தை மக்கள் உபயோகிக்க வழி செய்யட்டும்... மெட்ரோ வில் பயணம் செய்தால் காரில் செல்வதைவிட சீக்கிரமாகவும் பாதுகாப்பாகவும் செல்லமுடியும் என்பதை மக்கள் உணரவேண்டும்... வளர்த்த நாடாகிய ஜப்பானில் மக்கள் பொது போக்குவரத்த்தையே அதிகம் நம்புகிறார்கள் இதனால் பெட்ரோல் விரயம் டிராபிக் தவிர்க்க படுகிறது... அத்தியாவசிய தேவையின்றி கார் பைக் போன்ற வாகனங்களின் உபயோகிக்காமல் பொது போக்குவரத்த்தை உபயோகிக்க வேண்டும்...

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing