Wednesday 26 September 2018

#டீமானிட்டைசேஷன் திட்டத்தால் க்யூவில் நின்றதை தவிர சாமான்ய மக்களுக்கு என்ன பயன்..?

*#டீமானிட்டைசேஷன் திட்டத்தால் க்யூவில் நின்றதை தவிர சாமான்ய மக்களுக்கு என்ன பயன்..??*
பார்ப்போம். நீங்கள் தான் வீட்டுக்கு #மளிகைபொருட்கள் வாங்குபவரா? இல்லை என்றால் அருகில் அம்மாவை அல்லது உங்கள் மனைவியை உட்கார சொல்லி படிக்க வும்.
து.பருப்பு நான்கு வருடங்களுக்கு
முன்னர் ரூபாய் 170-180 சரியா?
தற்போது ரூபாய் 70-90, சரியா?
(பக்கத்தில் அம்மா அல்லது மனைவியிடம்  கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக் கொள்ளவும்)
----
உ.பருப்பு நான்கு வருடங்களுக்கு முன்னர் ரூபாய் 150-170
தற்போது ரூபாய் 80-90. சரிதானா?
--------
#வெள்ளைப்பூண்டு நான்கு வருடங்களுக்கு முன்னர் ரூபாய் 160-170
தற்போது ரூபாய் 60-70.
இதுபோல அரிசி தவிர வேறு பல பொருட்கள் விலை குறைந்து உள்ளன.
இதற்கு முக்கிய காரணம் பதுக்கல் வெகுவாக குறைந்து இருக்கிறது. இது #demonitisation ன் முக்கிய மான விளைவு. இது நேரடியான பணப்பலன். பலரும் இதை உணர்வது இல்லை. விலைவாசி உயரும் போது உரக்கப் பேசும் நாம் விலைவாசி கட்டுக்குள் இருக்கும் போது அதை உணர்வது இல்லை. ஏன் யோசிப்பதும் இல்லை. பதுக்கல் சந்தையை  பாதுகாத்து வந்தது கருப்பு பணம் தான்.
கருப்பு பணம் இல்லை என்பதால் பதுக்கல் இல்லை.
இதேபோல் தீவிரவாதம், நக்ஸலிசம், மதமாற்ற வியாபாரங்கள் கூட கருப்பு பணம் தடுக்கப் பட்டதால் பாதிக்கப்பட்டு உள்ளன. அவற்றுடன் பெரும்பாலான மக்களுக்கு  நேரடி தொடர்பு இல்லாததால் பொது வாழ்வில் அதன் விளைவு கள் நமக்கு வெளிப்படையாக தெரியவில்லை.
ஆனால் இதன் பலனை நக்ஸலிசத்தால்  பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் பூரணமாக உணர்ந்து உள்ளனர். இது இந்த அரசுக்கு வாக்குகளாக மாறும் என்பதால் தான் மோடி உயிருக்கு நக்ஸல் தீவிரவாதிகளால் ஆபத்து என்று செய்திகள் அடிக்கடி வருகின்றன.
மேலும்  உதாரணமாக மோடி ஆட்சி காலத்தின் போது இஸ்லாமிய தீவிரவாதம் குறைந்து விட்டதா என்று அறிய  இணையத்தில் தேடினால் குண்டு வெடிப்பு விவரங்கள் காணப்பட வில்லை. இந்தியாவில்  கடந்த நான்கு ஆண்டுகள் கால ஆட்சியில் நடந்த இஸ்லாமிய குண்டு வெடிப்புகள்  என்று பார்த்ததால் காஷ்மீரில் யூரியில் நடந்த குண்டு வெடிப்பு தான். (அதற்கும் கூட 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' மூலம் பதிலடியும் கொடுத்து விட்டது).
மேலும் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்க தேசத்தில் அமைதி யான சூழல்  நிலவுவது இன்றியமையாதது. அது இந்த ஆட்சி யில் இருக்கிறது.
இன்னும் இனி வரும் தேர்தல்களில் (கருப்புப்) பணப்புழக்கம் குறைய ஆரம்பிக்கும்.அதன் விளைவு தினகரன் போன்றோரை பாதிக்கலாம்.கருப்பு பண ஒழிப்பு லெட்டர் பேட் கட்சிகள் உருவாவதை தடுக்கவும் வாய்ப்பு உண்டு.
மேலும் விலைவாசி குறியீட்டு எண் கட்டுக்குள் இருப்பதால் மக்களின் வாங்கும் திறன் தேசத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும்.
#ரியல்எஸ்டேட் நிலவரம் நடுத்தர மக்களுக்கு
சாதகமாக மாறி இருக்கிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.
சாதகமான அம்சமாக வீட்டுக்கடன் வட்டி
12-14% லிருந்து 8-9% ஆகி இருக்கிறது.
இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் ரூபாய்/டாலர் மதிப்பை அரசாங்கத்தால் சமாளிக்க முடிகிறது என்றால் அது மேற்சொன்ன கடுமையான நடவடிக்கைகள் தான் காரணம். இதேபோல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒருவேளை நடந்து இருந்தால் அல்லது சோனியா இப்போது ஆட்சியில் ( யோசித்துப் பார்க்கவும் கூட அச்சமாக இருக்கிறது) இருந்திருந்தால் ரூபாய் மதிப்பு, நாட்டின் நிலைமை இன்று என்னவாகி இருக்கும் என யோசித்துப் பார்க்க அச்சமாக இருக்கிறது.
இதெல்லாம் இலவச டிவி போலவோ அல்லது இலவச ஃபேன் போலவோ கண்ணுக்குத் தெரியாத கூடுதல் பலன்கள்.ஆனால் சற்று விஷயம் அறிந்தோர் என்ன நடக்கிறது என்பதை புரிந்து வைத்து இருப்பதால் இந்த அரசு இனி வரும் காலங்களிலும் தொடரும்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing