Friday, 5 October 2018

பிரதமர் மோடி & குழுவிற்கு பாராட்டுகள்

                                                                     பதிவு : பானு கோம்ஸ்சமூக சிந்தனையாளர்

சீனாவை காட்டி அமெரிக்காவை சமாளித்து...அமெரிக்காவை காட்டி ரஷ்யாவை சமாளித்து.. பாகிஸ்தான்- சீனா நெருக்கத்தை காட்டி, அமெரிக்காவை தன் பக்கம் நிற்க வைத்து ..  ஜப்பானுடன் உறவை பேணி சீனாவிற்கு மேலும் செக் வைத்து.. எண்ணெய் வள நாடுகளையும்
பகைத்துக் கொள்ளாமல் தேடிப் போய் உறவை  மேம்படுத்தி .. உச்சமடைந்திருக்கும் சீனா -அமெரிக்க வர்த்தக போரில்.. மிகத் திறமையாக இந்தியாவிற்கு சாதகங்களை ஏற்படுத்திக் கொண்டு..

அதே நேரம்...இந்தியாவில் சில குறிப்பிட்ட  நாடுகளில் இருந்து குறிப்பான நோக்கத்துடன்  நடந்தேறிவந்த குறிப்பிட்ட மக்கள் ஊடுருவலை தடுத்து..கட்டுப்படுத்தி ...வெளியேற்றி..

அனைத்து கேடுகளுக்கும் காரணமாக இருந்த கட்டுப்பாடற்ற அரசியல் சுய லாபத்துக்காக இயங்கிவந்த உள்நாட்டு அரசியலையும் கட்டுப்படுத்தி ..

சுற்றி வளைத்து வரும் அடாவடி வல்லரசு சீனாவின்  பிராந்திய & ராணுவ அடாவடி போக்கை..வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில்..

துரிதமாக செயல்பட்டு.. இன்று , ரஷ்யாவிடம் இருந்து  S400 missile system வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

அரசியலில் சாதாரண சிக்கல்களை சமாளிப்பதே பெரும் கஷ்டம். இதில் சர்வதேச அளவில் / பிராந்திய அளவில் / உள்நாட்டு அளவில்.. பல்வேறு அரசியல்களும் பின்னிப் பிணைந்திருக்கும் பலவருட  இடியாப்ப சிக்கல்களை திறம்பட சமாளித்து.. இந்தியாவிற்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்வது என்பது..சந்தேகமில்லாமல் வியக்கத்தக்க சாமர்த்தியம் !

''இன்றைய உலகின் இன்றைய இந்தியாவிற்கு''.. தேவையான & சரியான திறமையாளர் !

#பிரதமர் #மோடி & குழுவிற்கு பாராட்டுகள்!!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing