Sunday, 9 December 2018

ஐக்கிய அரபு அமீரகத்துடன் வர்த்தகம் இனி ரூபாயில்தான், டாலரில் இல்லை – வரலாறு படைக்கும் #மோடி_சர்க்கார்

ஐக்கிய அரபு அமீரகத்துடன் வர்த்தகம் இனி ரூபாயில்தான், டாலரில் இல்லை – வரலாறு படைக்கும் மோடி சர்க்கார்p!
உலகம் வர்த்தகங்கள் பெரும்பாலும் அமெரிக்க டாலர் மதிப்பையே மையப்படுத்தி வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றன. இதனால், விலைவாசி ஏற்ற இரக்கம், அதனால் ஏற்படும் மாறுபாடு, வர்த்தகம் செய்யும் நாடுகளின் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

இந்த சூழலில் சொந்த நாணயத்தில் பரிவர்த்தனை செய்யும் முயற்சியை இந்தியா கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா அதற்கான தொகையை இந்திய ரூபாயில் செலுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக அதிக ஏற்றுமதி வாய்ப்பு உள்ள நாடுகளுடன் இந்தியா, ரூபாயில் பரிவர்த்தனை செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது.
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் முக்கியமானது, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே வர்த்கத்தின்போது, சொந்த நாட்டு பணத்தில் பரிவர்த்தனை செய்து கொள்ளும் ஒப்பந்தம்.
இந்த நாணய மாற்று ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் தங்கள் சொந்த நாட்டு நாணயத்தின் மூலமே வர்த்தகம் செய்து கொள்ளலாம். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சொந்த நாட்டு நாணயங்கள் மூலம் பணம் செலுத்தலாம். இதற்காக மூன்றாவது நாட்டு நாணயமாக அமெரிக்க டாலரை தேட வேண்டிய அவசியமில்லை.
இந்திய வர்த்தகர்களும் இந்திய ரூபாய் மதிப்பில் இந்திய சந்தைகளை கணக்கீட்டு ஐக்கிய அரபு அமீரகத்துடன் வர்த்தகம் செய்ய இயலும். இதுபோலவே தங்கள் சொந்த நாட்டு நாணயத்தை கணக்கில் கொண்டு இந்தியாவிடம் இருந்து பொருட்களை வாங்கவோ, விற்கவோ அந்நாட்டால் முடியும்.
இந்த ஒப்பந்தத்தில் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் செய்யத் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.
உலக அரங்கில் இது மத்திய மோடி சர்க்காரின் வெளிநாட்டு கொள்கைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுவது மட்டுமின்றி, இந்தியா தவிர்க்க முடியாத உலக சக்தியாக உருவாகி வருவதை இது மேலும் உறுதி படுத்துகிறது.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing