தலைப்பு : இளைத்த உடல் பருமனாக
காய் : தேங்காய் + கேரட்
சத்துக்கள்....
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
தீர்வு...
தேங்காய் துருவல் (1 கைப்பிடி)
கேரட் (150 கிராம்)
தேன் (50 மி.லி)
ஏலக்காய் (2)
வெள்ளை மிளகு (10 கிராம்)
கொத்தமல்லித் தழை (ஒரு கைப்பிடி)
செய்முறை
முதலில் தேங்காயை துருவி வைத்துக்கொண்டு பின்னர் கேரட்டை கழுவி சுத்தம் செய்து துருவி கொள்ளவும் இரண்டையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அதனுடன் ஏலக்காய் , வெள்ளை மிளகு , மல்லித்தழை இவை மூன்றையும் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து வடிகட்டி அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளை சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பருமனாகும்.
முட்டைக்கோஸை பொடிப்பொடியாக அரிந்து, தயிர், வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.
No comments:
Post a Comment