#வினோதஊழல்
#ஏற்றுமதிஊழல்
#ஹவாலாஊழல்
#ஹவாலாஊழல்
#சினிமாஊழல்
#சினிமாமூலம்ஊழல்
#சினிமாமூலம்ஊழல்
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 180 முதல் 360 நாட்ளுக்குள் அந்த நாடுகளில் இருந்து பணம் வர வேண்டும்.
இல்லையென்றால் அந்த ஏற்றுமதியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
அதனால் 60 நாட்களுக்கு பிறகு அவர்களை துரத்த ஆரம்பிப்போம்
ஒரு எக்ஸ்போர்ர்டர் மீது எனக்கு வெகு நாட்களாக சந்தேகம்
ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் வந்துவிடும்
ஒன்றும் செய்ய முடியவில்லை
பிறகு சில நாட்களில் அமலாக்கதுறையில் ( Enforcement Directorate ) பணி
ஒரு நாள் எங்கள் Source இடம் இருந்து தகவல் வந்தது
துறைமுகத்திற்கு சென்றோம்
அங்கு எல்லா கிளியரன்சும் முடிந்து பொருட்கள் கப்பலில் ஏற்றுமதிக்கு தயார்
விலை உயர்ந்த இந்திய தோல் காலணிகள் ( shoe uppers ) என்று பொருட்கள் ஏற்றுமதிக்கு தயாரக பெரிய கண்டெய்னர்கள்
எல்லாவற்றையும் திறந்து சோதனை செய்தால் எல்லாமே கந்தை துணிகள்
பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை
விஷயம் என்னவென்றால் இங்கிருந்து கந்தை துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கிருக்கும் இறக்குமதியாளர்கள் ஷீக்களை பெற்று கொண்டதாக பணம் அனுப்பி விடுவார்
உங்களுக்கு என்ன போச்சு என கேட்கலாம் நீங்கள்
அய்யா பத்து பைசா பெறாத துணிகளுக்கு ஏன் பணம் வரவேண்டும்
இதில் தான் சூட்சமம்
வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்நிய பணம் இப்படி நமது நாட்டிற்குள் வரும்போது வெள்ளையாகி விடும்
நஷ்டம் பத்து ரூபாய் கூட பெறாத கந்தை துணிகள்
பிறகு கடலில் கொட்டி விடுவார்கள்
கிட்டதட்ட ஹவாலா ரூட்
இப்போது எல்லாம் திரைப்படங்கள் வெளியாகும்போது கவனியுங்கள்
உலகெங்கும் 20000 தியேட்டர்கள் முதல் மூன்று நாளில் ஆயிரம் கோடி பத்தாயிரம் கோடி என பீலா
விடுவார்கள்
விடுவார்கள்
என்ன கப்பல்களில் கந்தை துணிகள்
இப்போது Cube போன்ற மென்பொருள்சாதனங்கள் வழியாக குப்பை படங்கள்
இப்போது Cube போன்ற மென்பொருள்சாதனங்கள் வழியாக குப்பை படங்கள்
இது தெரியாமல் நமது ரசிகர்கள்
சரி
இது இப்போது அமலாக்கதுறைக்கு தெரியாதா என கேட்கலாம்
அதெல்லாம் தெரியும் தட்பவெப்ப நிலை மாறும்போது தயாரிப்பாளர்கள் உள்ளே போகலாம்
பட தயாரிப்பு துவங்கும் போதும் வெளியிடும் முன்பும் ஏன் நட்சத்திரங்கள் வெளிநாடு செல்கிறார்கள் இந்த டீசர் பூசர் எல்லாம் எதற்கு என்று இப்போது கொஞ்சம் புரிகிறதா
1 comment:
Very enjoyable to visit this blog and find something exciting and amazing.
visit our website
Post a Comment