ஞானக்கதை:🧘♂🧘♂
சுரோணா என்ற அழகான இளவரசன் மிகவும் ஆடம்பரமாக 😇வாழ்பவன். சிறந்த சித்தார் கலைஞன்.🎸
பகலெல்லாம் உறக்கம். 😴இரவெல்லாம் குடியும் 🕺🥂கும்மாளம்தான.
புத்தரை 🧘♂கண்டு அவர் மொழிகளை கேட்டதால், தீட்சை வழங்குமாறு வேண்டிக்கொண்டான். யாருக்கும் தயங்காமல் தீட்சை தருபவர், இப்போது சற்று தயங்கினார் 🤔சுரோணா,, உன்னை பற்றி எல்லாம் தெரியும். நன்கு யோசித்து 🤔சொல் என்றார். ஆனால் இவன்,, நான் முடிவு செய்து விட்டேன் இப்போதே தாருங்கள் என்றான்.
நீ ஆடம்பரமாக வாழ்ந்தவன். 💃மாளிகையை விட்டு, பூங்காவை விட்டு வெளியே வராதவன். நாளுக்கு இருவேலை சாப்பாடு கூட கிடைக்காது. தீட்சை பெற்று விட்டால் உலகவாழ்கையில் திரும்புவது அவமானமானது. மரியாதை மரியாதை குறைவானது.
யோசித்து சொல் என்றார் நான் பலமுறை யோசித்து விட்டேன் என்றான்.
புத்தர் தீட்சை கொடுத்தார்.
இரண்டாவது நாளே விவகாரம் ஆரம்பித்து விட்டது.
புத்தருக்கு மட்டும் தெரியும்.
சன்யாசிகளிடம் மூன்று ஆடைகள் மட்டுமே இருப்பது. ஆனால் சுரோணா நிர்வாணமாக இருக்கஆரம்பித்தான். சன்யாசிகள் சாலையில் நடந்தால் இவன் சாலையோர கல்லிலும முல்லிலும் நடந்தான். மற்றவர்கள் நிழலில் ஓய்வு எடுத்தால் வெய்யிலில் நின்றான் உச்சிவேளையிலும் கூட,,,,
ஓரு எல்லையிலிருந்து மறு எல்லைக்கு போய்விட்டான். ஆறுமாத காலத்தில் கருத்துபோய்அடையாளம் தெரியாமல் மாறிப்போனான்.
ஓரிரவில் புத்தார் அவனை எழுப்பினார். நீ சித்தார் கலைஞன் தானே என்று கேட்டார். அதற்கு ஆம் என்றான்.
புத்தார் சித்தாரின நரம்புகள் இருக்கமாக இருந்தால் அதில் இசை பிறக்குமா?என்றார்,, பிறக்காது கம்பிகள் அறுந்து போகும் என்றான்.அவன், அவை மிகவும் தளர்வாக இருந்தால் இசை எழுமா?
இசைபிறக்காது .விரைப்பும் தளர்வு இல்லாமல் நடுநிலையில் இருந்தால் மட்டுமே வாசிக்க முடியும் என்றான்.
நான் சொல்லவந்தது அதுதான் வாழ்க்கை 💃ஓரு இசைகருவி மிகவும் இறுக்கமாக மிகவும் தளர்வாக இருந்தால் இசை பிறக்காது,,,,,,நீ ஓரு எல்லையிலிருந்து மற்றொர் எல்லைக்கு பாயாதே,, ஆனந்தத்திலிருந்து சுய சித்திரவதைக்கு எட்டி குதிக்காதே நடுவில் நடுநிலையாக நில் என்றார் புத்தார்.
உங்கள் வாழ்வின் எல்லா செயல்களிலும் நடுவில் நில்லுங்கள், அப்போது தான் தியானம் கைகூடும். 🧘♂🧘♂💐விடுதலை மார்க்கம் புலப்படும்.😇💐🙏
No comments:
Post a Comment