Wednesday 28 August 2019

வாழும் ஒவ்வொரு நொடியையும் வீண் ஆக்காதீர்கள் நண்பர்களே

ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார்...

மகனே! இது உனது பூட்டனாரின் கைக் கடிகாரம்.
200 வருடங்கள் பழைமை வாய்ந்தது.

நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால், நீ கடை வீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் போய் நான் இதனை விற்கப் போகிறேன். எவ்வளவு   விலை மதிப்பீர்கள்  என்று கேட்டுப் பார் என்றார்.

அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம்
இது பழையது என்பதால் 5 டாலர்கள் மாத்திரமே தர முடியும் என்றனர்.

தந்தை பழைய கால பொருட்கள் விற்கும் Antique கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார்.

அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், இதற்கு 5000  டாலர் தர முடியும் என்றனர்.

தந்தை இதனை நூதன சாலைக்கு Museum கொண்டு சென்று விலையை கேட்டுப் பார் என்றார்.

அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்கு உட்படுத்த ஒருவரை வரவழைத்து பரிசோதித்தும் விட்டு என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர் என்றனர்.

தந்தை மகனைப் பார்த்து மகனே... சரியான இடமே உனது அந்தஸ்தை எப்போதும் சரியாக மதிப்பிடும்.

எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்தி விட்டு உன்னை  மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தமே இல்லை. இதை நீயே வைத்துக் கொள்.
விற்பதும் விற்காததும் உன் இஷ்டம் என்று கொடுத்தார்.

உனது அந்தஸ்தை அறிந்தவனே உன்னை கண்ணியப் படுத்துவான்.

உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே.
இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக் கொள் மகனே என்றார் வயதான அப்பா.

தெரிந்த கதைதான்.
இந்த கதையில் பாருங்க.
அவன் விலை கேட்கும் ஒவ்வொரு கட்டமும் அவன் மனதுக்கு அந்தந்த நேரம் சரியாகவே மனதில் பட்டு இருக்கும்.
ஆனால் நிஜம் வேறுதானே!.

நம் வாழ்க்கையும் அப்படிதான்.
இன்று நமக்கு தெளிவு அவசியம்.
நீங்கள் இருக்கும் இடம்,போகும் பாதை அனைத்தும் சரியா என உங்களை நீங்களே மீண்டும் மீண்டும் பரிசோதியுங்கள்.
ஏமாந்த காலம் நமக்கு போதும்.
தீர்க்கமான முடிவு எப்போதும் முக்கியம்.
வாழும் ஒவ்வொரு நொடியையும் வீண் ஆக்காதீர்கள் நண்பர்களே.

உங்களின் நிஜ மதிப்பு உங்களுக்கு தெரியணும்.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

இயன்றால் பகிருங்கள்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing