Saturday, 11 April 2020

#இந்திய #பொருளாதாரம் ஒரு சிறந்த முறையில் மீண்டும் வீறுகொண்டெழம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை #இரத்தன்_டாடா

TATA குழுமத்தின் முன்னாள் தலைவரும், கொடைவள்ளலும் ஆன_  *திரு.இரத்தன் டாடா அவர்களின்   கருத்துப்பதிவு* :

 "கொரனாவின் விளைவாக பொருளாதாரம் பெரும்  வீழ்ச்சி அடையும் என  நிபுணர்கள் கணிக்கிறார்கள்.  
எனக்கு  இ‌ந்த நிபுணர்களைப் பற்றி  அதிகம் தெரியாது.

ஆனால், மனித  உந்துதல்  மற்றும் மனஉறுதியான   முயற்சிகளின்  மதிப்பு பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதை நான் நன்கு அறிவேன்.


 *துறை வல்லுநர்களின் கணிப்புகளை நம்பியே ஆகவேண்டும் எனில்...*

இர‌ண்டாம் உலகப்போரு‌க்கு பின் முற்றிலும் அழிந்த ஜப்பானிற்கு  எதிர்காலமே கிடையாது.  ஆனால் அதே ஜப்பான் முப்பது  ஆண்டுகளில், அதற்கு காரணமான அமெரிக்காவையே ச‌ந்தை‌யி‌ல் கதறச் செய்தது.

அரேபியர்களால் உலக வரைபடத்திலிருந்தே காணாம‌ல் போயிருக்கவேண்டிய    இஸ்ரேலின் தற்போதைய நிலைமையே வேறு.

காற்றியக்கவியல் விதிகளின்படி பம்பல் வண்டுகளால் பறக்கவியலாது. ஆனால் இயற்பியல் பற்றி ஏதும் அறியாத அவ்வண்டுகள் பறக்கத்தானே செய்கிறது.

  அப்போதைய அணித்திறமைகளின் அடிப்படையில்,  
வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற
 கடைசி இடத்திற்கு கணிக்கப்பட்ட   நம் இந்திய அணி, 1983ல் உலக கோப்பையை வென்றது  சரித்திரம்.

உடல் பலவீனத்தினால், ஊன்றுகோல் இன்றி நடப்பதே கடினம் என கருதப்பட்ட வில்மா ருடால்ப்,  தடகளப்போட்டிகளில் நான்கு முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற முதல் அமெரிக்க பெண் சாதனையாளர்.


 கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு சாதாரண வாழ்க்கையே வாழ்வது கடினமென கருதப்பட்ட அருணிமா சின்ஹாதான் எவரெஸ்ட் சிகரம் ஏறினார்.


 இவற்றையெல்லாம் நோக்குகையில், 
கொரோனா நெருக்கடியும் வேறுபட்டதல்ல. *கொரோனாவின் கைகளை நாம் வீழ்த்துவோம்.  இந்திய பொருளாதாரம் ஒரு சிறந்த முறையில் மீண்டும்  வீறுகொண்டெழம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை*.

இரத்தன் டாடா.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing