PTC தளங்களில் இருந்து பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு பெறுவதற்கு முதலில் நீங்கள் PayPal கணக்கு துவங்க வேண்டும். அது சம்பந்தமான விவரங்களை இங்கு காண்போம்.
PayPal என்றால் என்ன?
PayPal ஆன்லைனில் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணம் அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் பயன்படும் உலகின் முதன்மையான பணபரிமாற்றதளம்.பழைய காசோலைகளுக்கும் வரைவோலைகளுக்கும், பணவிடைகளுக்கும் மாற்றாக DIGITAL முறையில் பணப்பட்டுவாடா செய்ய உதவும் E-COMMERCE நிறுவனமே PayPal. PayPal நிறுவனத்தின் சர்வதேச தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. நமது இந்திய நாட்டில் சென்னை மற்றும் பெங்களூரிலும் PayPal தலைமையகங்கள் செயல்படுகின்றன.
PayPal சிறப்பம்சங்கள்:
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பேபால் பணபரிமாற்ற சேவையை பயன்படுத்துகிறார்கள்.இந்நிறுவனம் பல்வேறு நாடுகளை சேர்ந்த 190 சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
உலகில் உள்ள 25 நாடுகளின் நாணய மதிபபுகளில் உடனடியாக பணம் அனுப்பவும் பெறவும் முடியும் என்பதே PayPal பணபரிமாற்ற தளத்தின் தனி சிறப்பு ஆகும்.
பாதுகாப்பான பணபரிமாற்ற சேவைக்காக இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
PayPal-ல் உறுப்பினர் கணக்கு துவங்குவது எப்படி?
குறிப்பு : நமது இந்திய நாட்டில் PayPal-ல் உறுப்பினர் கணக்கு துவங்க உங்களிடம் கட்டாயம் பான் கார்டு (Pan Card ) இருக்க வேண்டும்.
வழிமுறை ஒன்று:
இந்தப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
வழிமுறை இரண்டு :
PayPal-ல் உறுப்பினர் கணக்கு துவங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:
PayPal-ல் உங்களின் ஈமெயில் முகவரியே உறுப்பினர் கணக்கு எண்ணாக செயல்படுகிறது.எனவே உங்கள் இ.மெயில் முகவரி இங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.(இந்த இ.மெயில் முகவரியைத்தான் நீங்கள் பணம் சம்பாதிக்கும் இணையதளங்களில் PayPal Account ID or Number –ஆக கொடுக்கவேண்டும்)
அடுத்து பாஸ்வேர்டை மிக கவனமாக தேர்வு செய்து கொடுக்கவும்.மறவாமல் அதை குறித்து வைத்துக்கொள்ளவும்.
PayPal-ல் 2 & 3 ஆகிய நம்பர் கொடுத்துள்ள இடம் மிக முக்கியம். வெளிநாட்டினர் என்றால் First Name, Middle Name, Last Name என பெயரை மூன்றாகப் பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால், நாம் பெயர் & அப்பா இனிசியல் ஆகிய இரண்டைத்தான் பெயராக பயன்படுத்துகிறோம், ஆகையால் 2- குறிப்பிட்டுள்ள First Name-ல் உங்களின் முழுப் பெயர் , அடுத்து வரும் Middle name என்ற கட்டத்தில் எதுவும் கொடுக்க வேண்டாம். 3 குறிப்பிட்டுள்ள கட்டத்தில், அதாவது Last name-ல் உங்களது இனிசியலைக் கொடுக்கவும்..
இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் நீங்கள் உறுப்பினர் கணக்கு துவங்கும் பெயரில் உங்களுக்கு நமது நாட்டில் ஒர் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் உங்கள் வீட்டில் யாருடைய பெயரில் வங்கிக் கணக்கு இருக்கிறதோ! அவர்களது பெயரில் கணக்கினைத் தொடங்குங்கள். உங்களது தந்தைக்குத்தான் வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது என்றால் அவரது பெயரிலேயே தொடங்குங்கள். ஏனெனில் பின்னர், உங்களது வங்கி அக்கவுண்டை PayPal-உடன் இணைக்கும் பொழுது, PayPal-ல் கொடுத்துள்ள பெயரும் - நம்மூர் வங்கியில் இருக்கும் பெயரும் சரியாக ஒன்றவில்லை என்றால், நிச்சயமாக பணத்தினைப் பெற முடியாது.
அடுத்து யார் பெயரைக் கொடுத்தீர்களோ அவரது பிறந்த தினத்தினைக் கொடுங்கள்.
4 உங்களின் PAN கார்டு நம்பரை உள்ளீடு செய்யவும் அதுவும், யார் பெயரில் அக்கவுன்ட் உருவாக்குக்கிறீர்களோ, அவரது பெயரில் பான் கார்டு இருக்க வேண்டும்.
அடுத்து உங்களது முகவரி மற்றும் மொபைல் எண்ணைச் சரியாகக் கொடுத்துவிட்டு Agree & create a account என்று உள்ளப் பட்டனைக் கிளிக் செய்யவும்
உங்களின் இ.மெயில் முகவரியை உறுதி செய்து கொள்ள ஒரு VERIFICATION LINK அனுப்பப்படும் அந்த லிங்கில் கிளிக் செய்து உங்களது PayPal உறுப்பினர் கணக்கில் லாகின் செய்யவும்.
PayPal-இல் VERIFIED செய்யப்பட்ட உறுப்பினர் கணக்கு இருந்தால்தான் இந்திய வங்கிகளுக்கு பணம் பெற முடியும். அதற்கு கட்டாயம் இரண்டு செயல்களை செய்ய வேண்டும்.
.1. Purpose Code ( நோக்க குறியீட்டு எண் )
2. Bank Account Details ( வங்கி உறுப்பினர் விவரங்கள் )
PTC இணையதளங்களில் பணம் சம்பாதிப்பவர் எனில் நீங்கள் (Advertising and market research) என்ற Purpose Code ஐ தேர்வு செய்யவும்.
STEP 5
PayPal பணபரிமாற்ற தளத்தில் இந்திய வங்கி கணக்கை இணைப்பது எப்படி
உங்களது பேபால் உறுப்பினர் கணக்கை verified செய்துகொள்ள select
profile and then Add Bank Account என்பதை தேர்வு செய்யவும்
STEP 6
Name On Account: உங்களின் PayPal கணக்கில் இருக்கும் பெயரும், வங்கிக் கணக்கில் இருக்கும் பெயரும் ஒரே பெயராக இருக்க வேண்டும்.
Bank Name: உங்கள் வங்கியின் பெயர் (State Bank of India/Indian Bank/Canara Bank)
NEFT IFSC Code: இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் அல்லது உங்கள் வங்கியில் கேட்டோ அல்லது இணயத்திலோ தெரிந்து கொள்ளலாம்.
STEP 8
PayPal நிறுவனம் உங்களின் வங்கி கணக்கிற்கு 2 சிறிய தொகைகளை பரிமாற்றம் செய்யும். அந்தப் பரிமாற்றங்களின் பண மதிப்பு என்ன என்பதை 2-3 நாட்கள் கழித்து உங்களின் வங்கிக் கணக்கில் பார்க்கவும். அந்த மதிப்பை நீங்கள் உங்களின் Paypal கணக்கில் உள்ள “Confirm Bank” எனும் பகுதியில் சென்று கொடுத்தால் உங்களின் PayPal உறுப்பினர் கணக்கு சரிபார்க்கப்பட்டு விடும்.
PayPal பணபரிமாற்ற தளத்திலிருந்து இந்திய வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி?
நீங்கள் ஆன்லைன் மூலம் சம்பாதிக்கும் பணம் உங்களின் PayPal உறுப்பினர் கணக்கிற்கு மாற்றப்பட்டவுடன் உங்கள் இமெயில் முகவரிக்கு தகவல் தெரிவிக்கப்படும்.உங்களின் பேபால் கணக்கு Verified செய்யப்பட்டதாக இருந்தால் அதில் உள்ள உங்கள் பணம் உங்கள் இந்திய வங்கி கணக்கிற்கு PayPal நிறுவனமே அன்றைய தேதியில் டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பில் Convert செய்து பணம் அனுப்பி விடுவார்கள். இது நமது நாட்டின் ரிசர்வ் வங்கி PayPal பண பரிமாற்ற தளத்திற்கு இட்ட கட்டளையும் கூட .நமது இந்திய நாட்டு வங்கிகளுக்கு பணம் வந்து சேர குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் முதல் அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை ஆகும்.
இந்த லிங்கை கிளிக் செய்து உங்கள் PayPal கணக்கை துவக்குங்கள்.
https://www.paypal.com/in/webapps/mpp/home
No comments:
Post a Comment