Tuesday 29 July 2014

ஆனந்தம் தரும் ஆடிப்பூரம்…ஆடிப்பூரம் மகிமை ஜூலை 30, 2014


சுபமான ஜய வருடம் ஆடிமாதம் 14ம் நாள் புதன் கிழமை சதுர்த்தியுடன் பூரம் நக்ஷத்திரம் சேர்ந்த நாள் திருவாடிப்பூரம் உலக மக்களை துன்பத்தில் இருந்து விடுவிக்க ஆதிபராசக்தி அவதாரம் எடுத்த தினம்..!!




 ஸ்ரீவில்லிப்புத்தூரில் குடிகொண்டிருந்த நாராயணனையே எண்ணி மணம் புரிந்த ஸ்ரீ ஆண்டாள் அவதாரம் செய்த நன்னாள்..ஆடிப்பூரம்.


திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கர்க்கே கன்னி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்கோதை மலர்பதங்கள் வாழியே
சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் பிறந்த வில்லிபுத்தூரில் இன்று தேரோட்டம்.
கோதை என்றால் நல்வாக்கு அருள்பவள் என்று அர்த்தம்
கிணற்றில் விழுந்த குழந்தையை காக்க தாய் தானே கிணற்றில் விழுவதுபோல பூமிப்பிராட்டி பாசம், ஆசை என்னும் கிணற்றுக்குள் தந்தளித்து கொண்டிருக்கும் உயிர்களை காத்து பரந்தாமனிடம் சேர்க்க பூவுலகில் ஆண்டாளாய் அவதாரம் கொண்டாள்.

தமிழை ஆண்டாள் என சொன்னால் அது மிகையாகாது.வட பெருங்கோயில் வாழ் கோதை நாச்சியார் ஒரு நூற்று நாற்பத்து மூன்று பாடல்களில் பரந்தாமனை பற்றுவதெப்படி என்று சொல்கிறாள்.

'அரிமுகன், அச்சுதன் கைமேல் , என் கை வைத்துப் 
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழி நான்'
திருமணம் கைகூட ஆண்டாள் அருளிச்செய்த வாரணம் ஆயிரம் எனத்தொடங்கும் பாசுரங்களை பாட வேண்டும்.

ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும் இந்நாளில் 9 ஏழை சுமங்கலிப்பெண்களுக்கு புடவை,மஞ்சள்,குங்குமம்,வெற்றிலை பாக்கு ,51 ரூபாய் பணம் வைத்து மஞ்சள் தாலி கட்டிக்கொள்ளதீர்க்க சுமங்கலியாய் இருப்பர்.வசதியானவர்களை அழைத்து செய்வதை விட நீங்கள் கொடுக்கும் தட்சிணைக்கு மனதார வாழ்த்தும் உள்ளம் தான் முக்கியம்..ஆடிப்பூரம் அன்று சக்தி ஸ்தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட கேட்கும் வரம் கிடைக்கும்..ஆரோக்யம், செல்வ செழிப்பு உண்டாகும்..அன்று அருகில் இருக்கும் அம்மன் கோயிலில் நெய் தீபம் ஏற்றிவணங்குங்கள்..!

சக்தி என்பது இல்லையேல் சிவம் எனும் நம் உடலும் ஆன்மாவும் இல்லை...நம் உடல் இயங்க சக்திதானே முக்கியம்..? அந்த சக்தி எப்போதும் குறைவின்றி பெற ஆடிப்பூரம் அன்று அருகில் இருக்கும் சக்தி யை வழிபடுங்கள்...முடிந்தவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் நடைபெறும் தேர் உற்சவத்தில் கலந்துகொண்டு தேர் வடம் இழுங்கள் இதனால் திருமணம் ஆகாதவர்களுக்கு உடனே திருமணம் அமையும், கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்...தொழில் சிறக்கும்.பகை விலகும்.. நோய் ஒழியும்..!!

ஆனந்தம் தரும் ஆடிப்பூரம்!
http://bit.ly/1lUK1vw

பெரியாழ்வாருக்கு பால கோபாலனாகத் தெரிந்த பெருமாள், கோதை ஆண்டாளுக்கு வசீகர வேணுகோபாலனாகத் தோன்றினாராம்! கூடவே ஆயர்பாடி பற்றியும், ஆயர்குல கோபியர் தங்கள் மனதுக்கு உகந்த கணவனை அடைய பாவை நோன்பு கடைப்பிடித்ததைப் பற்றியும் செவிவழியாக அறிந்த ஆண்டாள்,... மேலும் காண்க: http://bit.ly/1lUK1vw

ஆண்டாள் திருக்கோயில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் இன்று தேர்.பல கர்மாக்களை அழிக்கும் சக்தி, முன் செய்த பாவங்களை குறைக்கும் சக்தி தேர் வடம் இழுப்பதற்கு உண்டு என மகாபெரியவர் சொல்லி இருக்கிறார்.எங்கு கும்பாபிசேகம் நடந்தாலும்,தேர் திருவிழா நடந்தாலும் அங்கு தவறாமல் கலந்துகொள்ளுங்கள்..முன்னோர் வழி சாபம்,கர்மவினையை போக்கும் சக்தி இதற்கு உண்டு...பல ஆயிரம் பேர் ஒன்றாக கூடி அங்கு ஒருமித்த எண்ணத்துடன் ஒரு காரியத்தில் இறங்கும்போது, பிரபஞ்ச சக்தியில் இருந்து பல மடங்கு நல்ல சக்தி வெள்ளமாக புறப்பட்டு மழை போல பொழிய செய்கிறது. அதன் மூலம் உங்களை சுற்றி இருக்கும் எல்லா நெகடிவ் அலைகளையும் நீக்கி, பாசிடிவ் அலைகளை உண்டாக்கிவிடும். இதன் மூலம் உங்கள் எதிர்பார்ப்புகள்,ஆசைகள்,லட்சியங்கள் எல்லாம் பிரபஞ்ச சக்தியால் நிறைவேறும்..!! தடைபட்ட காரியங்கள் உடனே நிறைவேறும்!!!


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனை பாடி பறைகொண்ட 
நாச்சியார் திருவடிகளே சரணம்..!


Via: https://www.facebook.com/astrologersathishkumar



No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing