Sunday, 21 December 2014

தாய்லாந்தில் திருமணம் செய்யும் இந்தியர்களுக்கு இனி யோகம் தான்

பாங்காக்: தங்கள் நாட்டில் திருமணம் செய்ய விரும்பும் இந்தியர்களுக்கு, விமானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரத் தயாராக உள்ளதாக, தாய்லாந்து பிரதமர் பிரயூத் சனோச்சா கூறியுள்ளார்.

தாய்லாந்து பிரதமர் பிரயூத் சனோச்சா கூறியதாவது: ஏராளமான இந்தியர்கள், தாய்லாந்தில் உள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் திருமணம் செய்வதை விரும்புகின்றனர். இந்த முக்கியமான நிகழ்வை வாழ்நாள் முழுவதும் நினைத்து பார்ப்பதற்காக, தாய்லாந்தில் அவர்கள் திருமணம் செய்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை ஊக்குவிக்க, தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. இனி, தாய்லாந்தில் திருமணம் செய்ய விரும்பும் இந்திய மணமக்களை, இந்தியாவிலிருந்து தாய்லாந்துக்கு அழைத்து செல்வதற்கு விமான வசதி செய்து தரப்படும்.வாழ்நாளில் மறக்க முடியாத, மிகவும் ரம்மியமான இடத்தில் அவர்கள் திருமணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும். தாய்லாந்தும், இந்தியாவும், ஒரே மாதிரியான கலாசாரம் உடைய நாடுகள். சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள, அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing