Saturday, 11 April 2015

நாடு முழுவதும் – ஒரே மொபைல் எண் சேவை - மே 3, 2015 முதல் அமல்



தற்போது, ஒரே தொலைத்தொடர்பு வட்டத்துக்குள், அதாவது ஒரே மாநிலத்துக்குள்தான், வேறு செல்போன் சேவை நிறுவனத்துக்கு மாறினாலும் அதே செல்போன் எண்ணை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதே சமயத்தில், டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு இடம் மாறிய ஒருவர், வேறு செல்போன் சேவை நிறுவனத்துக்கு மாறினால், டெல்லியில் வாங்கிய சிம்கார்டு எண்ணை தக்க வைத்துக் கொள்ள முடியாது. புதிதாக மாறிய நிறுவனம் அளிக்கும் எண்ணுக்கு மாற வேண்டி இருக்கும்.


இந்நிலையில், நாட்டின் எந்த பகுதிக்கு இடம் மாறினாலும், அதே செல்போன் எண்ணில் பேசும் வசதி, மே 3–ந் தேதி அமலுக்கு வருகிறது. இதற்காக, ‘மொபைல் எண் மாற்றம்’ (எம்.என்.பி.) தொடர்பான உரிம ஒப்பந்தத்தில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் கடந்த நவம்பர் 3–ந் தேதி திருத்தம் செய்தது. இந்த திருத்தம் செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் நாடு முழுவதும் இந்த வசதி அமல்படுத்தப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, மே 3–ந் தேதி இந்த வசதி அமலுக்கு வருகிறது.
இதற்கேற்ப, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானட்ராய்’, தொலைத்தொடர்பு மொபைல் எண் மாற்ற ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்துள்ளது. அத்திருத்தம், மே 3–ந் தேதி அமலுக்கு வருவதாக கூறியுள்ளது.எனவே, நாட்டின் எந்த பகுதிக்கு இடம் மாறிய பிறகும், செல்போன் சேவை நிறுவனத்தை மாற்றும்போது அதே எண்ணில் பேசும் வசதியை, மே 3–ந் தேதியில் இருந்து பெறலாம்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing