அவசர அவசரமா தப்பு பண்ணிட்டு நிதானமா அதை பற்றி வருத்தப்படும் வாலிப சங்க மெம்பரா நீங்க – உங்களுக்கு ஒரு இனிப்பு செய்தி – அதாவது மெஸேஜ் / சாட் / இன்பபாக்ஸின் உரையாடல்கள் பெரும்பாலானவை உணர்ச்சி கொந்தளிப்பு தான்……….இதில் பலர் தப்பு செய்வது ஏதாவது ஒரு மூட்ல கொஞ்சவோ / கெஞ்சவோ அல்லது கோபமாக பேசிட்டு ஐயோ தப்பு செஞ்சிட்டேனே என்று உணரும் தருணம் இனிமேல் இருக்காது என்றால் மகிழ்ச்சிதானே ?
இதற்காகவே சிர்க்கெட் என்னும் ஒரு கம்பெனி ஒரு ஆப்ஸை உருவாக்கியுள்ளது – இது இப்போது ஆன்ட்ராயிட் அலைப்பரைகளுக்கு மட்டும் தான். இதில் மூன்று முக்கிய வசதிகள் உள்ளன?
1. டைமர் (Timer) – சேட் / கான்வர்சேஷன் / கவிதை என்ன கருமத்தையும் டக்கென்று டைப் செய்துவிட்டு சென்ட் பட்டன் தட்டிய பிறகும் தான் இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கலாமே என்றோ அல்லது அவங்க ரிப்ளை வேற மாதிரி இருந்தா ஐயோ இப்படி பொசுக்குன்னு பேசி மாட்டிக்கிட்டோமே என்று வருந்தாமல் இருக்க டைமர் முறையில் ஒன்னுக்கு நிறைய வாட்டி யோசிச்சு அனுப்பலாம் – அதாங்க கேமரா டைமர் போல………………அதே தான்.
2, எடிட்(Edit) – டைமர் வச்சு அனுப்ப நான் என்ன டம்மி பீஸா – நாங்கெல்லாம் அந்த காலத்தில அந்த மாதிரினு மார் தட்டும் மாவீரர்களே – யாருக்காவது I LOVE YOU அனுப்பிட்டு எதிர் தரப்பு பார்ட்டி உங்களை நான் எண்ணத்தில பழகலைனு சொல்லிட்டா நம்ம கெத்து என்னாவறது உடனே இங்கிட்டு இருந்தா மாதிரியே நீங்க அனுப்பிய மெசேஜை டக்கென்று I LIKE YOU மாத்திரலாம் அவங்களே ஷாக்காயிடுவாங்க என்னடா இது ஒரு வேளை நம்ம கண்ணுல தான் கோளாறான்னு?
3. டெலீட்(Delete) – டைமர் டமாரும் – எடிட் உதாரும் வொர்க் அவுட் ஆகலை நீ எப்படி I LIKE YOU கூட அனுப்பலாம் இரு உன் மானத்தை ஒன் பை 5வா கிழிக்கிறேன்னு சபதம் உட்டா கலங்காதே குமாரு…….இங்கிட்டு இருந்த மாதிரியே அங்கிட்டு அனுப்பின மொத்த சேட்டின் ஸ்கிரிப்ட்டையும் அழிச்சு அவங்களை டம்மி பீஸு ஆக்கிறலாம்……இன்னும் நிறைய உபயோகமான மேட்டர் எல்லாம் கீது நைனா ட்ரை பண்ணுங்க…………..
எப்பூடி இருக்கு ராசா / ராசாத்திகளா? இனிமே வருவீங்க ஸ்க்ரீன் ஷாட் / சிக்கின ஆடுன்னு? ஆனா அப்பிள் அன்பர்கள் பொறுமை காக்கவும் இல்லைனா ஒரு சின்ன வீட்டை வச்சிக்கவும் (ஆன்ட்ராயிட்ஃபோனைத்தான் சொன்னேன்)….
No comments:
Post a Comment