ஒருவன் தவறு செய்வதற்குக் காரணம் ’தான் யார்’ என்ற போதம் (உணர்வு) இல்லாதது
தான். எனவே தான் ஸனாதன தர்மம் யாரையும் ஒதுக்காமல் அவருக்கு வேண்டிய அறிவு
(ஞானம்) வழங்க வேண்டும் என கூறுகிறது. வேடனான ரத்னாகரனை மகரிஷிகள்
கொள்ளைக்காரன் என்று கூறி ஒதுக்கி இருந்தால் இன்று நமக்கு வால்மீகி மகரிஷி
கிடைத்திருக்க மாட்டார். ஒரு கொள்ளைக்காரன் கூட மகாத்மாவாக மாற முடியும்
என்று ஸனாதன தர்மம் எடுத்துக் காட்டியுள்ளது. ரத்தினக் கல் அல்லது வைரம்
மலத்தில் கிடந்தாலும் யாரும் அதை விட்டு வைக்க மாட்டார்கள். அதில் உள்ள
அழுக்குகளை அகற்றி வைத்துக்கொள்ளவே விரும்புவர். அது போல எல்லோரிடமும்
இறைவனது சைதன்யம் (இறை உணர்வு) நிறைந்து இருப்பதால் ஒருவரையும் நம்மால்
ஒதுக்க இயலாது. குணத்தில் சிறியவர், பெரியவர் என்று வித்தியாசமில்லாமல்
எல்லோரிடமும் இறைவனைத் தரிசிக்க இயல வேண்டும். அதற்காக நம்முடைய மனதை
மறைத்துள்ள அழுக்குகளைத் தான் நாம் முதலில் நீக்க வேண்டும்.--- அம்மா Amma
No comments:
Post a Comment