Monday, 22 December 2014

வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய


 

நமச்சிவாய வாழ்க
மரணம் அடைந்தவரின் ஆன்மா எங்கே செல்வதென்று அலையும்போது, அந்த ஆன்மாவுக்கு வழிகாட்டுபவன் யார் தெரியுமா?????
துக்கவீட்டில் "சங்கு" ஊதுபவன்தான்.
வீட்டினை சுத்தம் செய்ய உதவும் துடைப்பம், ஒட்டடைகம்பு, நம் பாதத்தை காக்கும் செருப்பு ஆகியவற்றை வீட்டின் முலையில் வைப்பதுபோலத்தான், நம் ஆன்மாவுக்கு ஈசனடி செல்ல வழிகாட்டும் சங்கு ஊதுபவனையும் ஒதுக்கி ஓரமாக வைத்திருக்கிறோம்.
பணம் இல்லாத நேரத்தில், பணம் கிடைத்தால்தான் சந்தோசம்.
பொருள் இல்லாத நேரத்தில், பொருள் கிடைத்தால்தான் சந்தோசம்.
பசிக்கும் நேரத்தில், சோறு கிடைத்தால்தான் சந்தோசம்.
அதே போல், உடலைவிட்டு பிறிந்த உயிருக்கு சிவபெருமானை சென்றடையும் வழிதெரிந்தால்தான் அந்த ஆன்மாவுக்கு சந்தோசம்.
அந்த வழி எப்படி ஒரு ஆன்மாவுக்கு தெரியுமென்றால், சங்குநாதம்தான் அந்த வழியை அறியச்செய்யும்.
சங்கொலி கேட்குமிடமெல்லாம் சிவபெருமான் வாழுமிடம். சங்கு முழக்கம் கேட்கும்போது, நம் மனம் எதையும் அச்சமையம் சிந்திக்காமல் ஒருநிலைபடும். அந்த ஒருநிலைதான் சிவநிலை.

சங்கொலி கேட்டு பழகிய ஒருவனின் ஆன்மாவுக்குத்தான், இறந்தபின்னர் சங்கொலி கேட்கையில் சிவசிந்தனை எழும். அவ்வாறு சிவசிந்தனை எழுகையில் ஆன்மாவானது அங்குமிங்கும் அலையாமல் ஒருநிலைபடும். ஒருநிலை என்னும் சிவநிலைக்கு சென்ற ஆன்மாவை, சிவபெருமான் தாமாகவே முன்வந்து அவரோடு சேர்த்துக்கொள்வார்.

சங்குநாதம் ஒவ்வொரு இல்லத்திலும் கேட்கவேண்டிய நாதம். வீட்டிலுள்ளவர்கள் அனுதினமும் சங்கொலியை கேட்டு பழகவேண்டும்.
சிரியவர்முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிவநிலையில் ஆழ்த்தவல்ல சங்கினை வாங்கி அனைவரும் வீட்டில் தினமும் முழங்குங்கள்.

என்னிடம் சங்கு இல்லை. ஆனால் வாங்கிவிடுவேன். எம் குடும்த்தார் அனைவரின் மனதையும் ஒருநிலை படுத்துவேன். எம்மோடு சேர்ந்த அனைவரையும் சிவசிந்தனையில் ஆழ்த்துவேன். இறந்தபின்னர் ஒவ்வொருவரையும் சிவனடி சேரச்செய்வேன்.

இந்த பாக்கியத்தை சிவபெருமான் நிச்சயம் எமக்கு செய்தருள்வார் என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறேன். இத்தகைய வாழ்வும் வழிபாடுதான்.

வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing