Friday, 10 April 2015

முதுகு வலி காரணங்கள்.....முதுகுவலியை தடுக்க

முதுகு வலி என்பது தாங்கிக்கொள்ள
முடியாத வலி என்பது பலரும் அறிந்ததுதான்.
நவீன மையமான, அவசரமான இந்த
உலகத்தில் தற்போது மாணவர்கள் முதல்
முதியவர்கள் வரை அனைவரும் முதுகு வலியால்
பாதிக்கப்படுகின்றனர். இந்த முதுகு வலி நோய்
எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல நீண்ட நேரம் கார்,
இருசக்கர வாகனம் ஓட்டுதல், மணிக்கணக்கில்
கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருத்தல், உடல்
உழைப்பின்மை போன்ற காரணங்களால் சிறு வயது
முதலே ஆண், பெண் இருபாலரும்
முதுகுவலியால் அவதிப்படுகின்றனர். 

இந்த வலி
எவ்வாறு ஏற்ப டுகிறது, இதற்கான
தீர்வுதான் என்ன?

முதுகு பகுதியில் 33 எலும்புகள் ஒன்றன் மீது
ஒன்றாக அடுக்கிய நிலையில் வலுவாக பிணைத்து
வைக்கப்பட்டதுதான் ‘முதுகெலும்புத்
தொடர்‘. இதில் எலும்புகளுக்கு இடையில்
உர £ய்வை தடுக்கும் விதமாக வட்ட வில்லைகள்
(டிஸ்க்) எனப்படும் ஜெல்லி போன்ற
மிருதுவான பாகங்கள் உள்ளன. இது பைக்குகள்
உள்ளிட்ட வாகனங்களில் அதிர்வுகளை
தாங்குவதற்கு பயன்படும் ‘ஷாக் அப்சர்வர்‘
போன்ற அமைப்பு போன்றது.
துளையுடனான முதுகெலும்புகளுக்கு நடுவே
பாதுகாப்பான நிலையில் தண்டுவட நரம்புகள்
உள்ளன. உடல் உறுப்புகள் அனைத்தையும்
கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்தி
செல்லும் முக்கிய பணியை செய்வது இந்த
தண்டுவட நரம்புகள்தான்.

முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க்
நகர்ந்து இந்த நரம்புகள் நசுக்கப்படும்போது முதுகு
வலி ஏற்படுகிறது.

காரணங்கள்:

முதுகெலும்பு கோளாறுகள் இடுப்பு பிடிப்பை
தூண்டும். முதுகெலும்பின் வட்ட வில்லைகள்
தேய்ந்து போய், ஹெர்னியாவால்
பாதிக்கப்படும். அப்போது வட்ட வில்லைகள்
ஸியாடிகா நரம்புகளை அழுத்தும். இதனால்
முதுகுவலி ஏற்படும். வலி இருக்கும்போது அதிக எடை
தூக்குதல், நடப்பது, ஓடுவது, மாடிப்படிகள்
ஏறுவதால் வலி மேலும் அதிகமாகும். ஆஸ்டியோ
ஆர்த்தரைடிஸால் எலும்புகளில் பிதுக்கம் ஏற்படும்.
இந்த ஏறு மாறான பிதுக்கங்களால் இடுப்பு
பிடிப்பை உண்டாக்கலாம். சுளுக்கால் ஏற்படும்
தசைநார்களில் வீக்கமும்
காரணமாகலாம். சர்க்கரை வியாதியில்
ஏற்படும் நரம்பு சேதத்தாலும் முதுகுவலி ஏற்படும்.
ரத்த கட்டிகள், வீக்கங்கள், அதிக உடல்
பருமன், அழற்சி இவைகளையும் காரணமாக
சொல்லலாம்.

முதுகுவலியை தடுக்க:

அதிக உயரமில்லாத காலணிகளை
அணியலாம். பெட்டி, கைபைகள் போன்றவற்றை
தூக்கிக் கொண்டு செல்லும்போது
பெட்டியை ஒரு கையிலிருந்து இன்னொரு
கைக்கு மாற்றிக்கெண்டு நடக்கலாம்.
நிற்கும் போது நிமிர்ந்து நிற்கவும். ஒரு காலிலேயே
நிற்காமல், கால் மாற்றி நிற்கவும். அதிக
நேரம் நின்று கொண்டிருக்க வேண்டாம்.
உட்காரும்போது, முதுகை தாங்கி
கொள்ளுபடியாக சாய்ந்து
உட்காரவும். கால்கள் தரையை
தொடுமாறு உள்ள நாற்காலியில்
அமர்வது நல்லது. கால் மேல் கால் போட்டு
உட்கார வேண்டாம்.
அதிக நேரம் உட்கார நேர்ந்தால், அடிக்கடி எழுந்து
நடக்கவும். கார் ஓட்டும்போது நடுமுதுகை தாங்கிக்
கொள்ள சிறிய தலையணைகளை
உபயோகிக்கலாம்.
தூங்கும்போது, குப்புற படுக்க வேண்டாம்.
பக்கவாட்டில் திரும்பிப்படுப்பது நல்லது.
மல்லாந்து படுக்க வேண்டியிருந்தால்
முழங்காலில் தலையணை வைத்துக்
கொள்ளவும். படுக்கை அதிக மிருதுவாக
இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும்.
சிகிச்சை முறைகள்:

* முதுகுவலி ஏற்பட்டால் விளக்கெண்ணையை
சூடுபடுத்தி கால் பாதங்களில் தடவலாம். இதை
தொடர்ந்து செய்தால் பலன்
கிடைக்கும்.
* பூண்டு 5 பற்களை எடுத்து 50 மி.லி.
நல்லெண்ணையில் இட்டு, நன்கு காய்ச்சி
ஆற வைத்து, இளம் சூட்டில், வலியுள்ள இடங்களில்
தடவலாம்.
* புளி சாறெடுத்து, உப்பு போட்டு
கொதிக்கவிட்டு, களிம்பு போல்
தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.
* சூடான நல்லெண்ணெய்யுடன் உப்பு
கலந்து மசாஜ் செய்தால் வலி குறையும்.
மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக
செய்ய வேண்டும்.
* ஆடாதொடா வேரை கஷாயம் வைத்து
குடித்தால் உடல் வலி சம்பந்தப்பட்ட
பிரச்னைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
* ஆல மொட்டுகளை பொடி
செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி
குணமாகும்.
* உப்பை வறுத்து ஒரு துணியில் கட்டி மிதமான
சூட்டில் வலியுள்ள இடத்தில் ஒத்தடம்
கொடுத்தால் வலி குறையும்.
* முருங்கை வேரில் இருந்து சாறு எடுத்து அதில் சம
அளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உள்
உறுப்புகளில் உள்ள வீக்கம், முதுகு வலி
குணமாகும்.

புரூட்டி மில்க் ஷேக்:

ஒரு கப் பாலுடன் ஒரு பச்சை வாழை பழத்தை சேர்த்து
மிக்சியில் அரைத்து அதில் மாதுளையை உரித்துப் போட்டு
வெல்லம் சேர்த்து அரைக்க வேண்டும். இதில்
மாதுளை லேசாக மட்டுமே உடைந்திருக்க வேண்டும்.
இந்த கிரஞ்சி மில்க் ஷேக் எலும்புகளின்
ஆரோக்கியத்துக்கு உகந்தது.

பீட்ஸ் உருண்டை:

கேழ்வரகு மாவு ஒரு கப் எடுத்துக்
கொள்ளவும். வாணலியில் சிறிதளவு
நெய் சேர்த்து மாவை பதமாக வறுத்துக்
கொள்ளவும். அதில் பாதாம், முந்திரி
மற்றும் உலர்ந்த திராட்சை சேர் க்கவும். அத்துடன்
வெல்லத்தை பொடித்து சேர்க்க
வேண்டும். இவற்றுடன் பால் சேர்த்து ஒன்றாக
பிசைந்து பீட்ஸ் உருண்டை தயாரித்து சாப்பிட்டு
வந்தால் முதுகு வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பை
உறுதியாக்கும்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing