Friday, 10 April 2015

உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும் உணவுகள்

உடல் எடை எக்கச்சக்கமாக எகிறியதால் அதைக் குறைக்க முடியாமல் ஜிம், உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு என்று கஷ்டப்பட்டு வருபவர்கள் ஏராளம். அன்றாடம் சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம். அதிக எடை, குறிப்பாக கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள் இதோ…
மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து, அதிக ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும். ரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும்.
ஏலக்காய்: இது ஒரு சிறந்த உணவுப் பொருள். இதை உண்டால் உடலில் உள்ள உடல் செயலியல் மாற்றம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து விடும். மேலும் இது ஒரு சிறந்த செரிமானப் பொருள். ஆகவே எந்த உணவு உண்டாலும், அதே நன்றாக ஜீரணமாகிவிடும். ஆகவே ஏலக்காயை தினமும் உணவுப் பொருட்களில் சேர்த்தால், உடல் எடை குறையும்.
மிளகாய்: உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. மேலும் இதில் உள்ள ‘கேப்சைசின்’, உடல் செயலியல் மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். கேப்சைசின் என்பது வெப்ப ஊட்ட பொருள். அது இருக்கும் உணவுப்பொருளை உண்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும்.
கறிவேப்பிலை: கறிவேப்பிலை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் நச்சுப்பொருட்களை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் நச்சுப்பொருட்களை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், கறிவேப்பிலையை அரைத்து தண்ணீரில் கரைத்துக் குடிக்க வேண்டும்.
பூண்டு: இது ஒரு சிறந்த கொழுப்பை கரைக்கும் பொருள். ஏனெனில் இதில் சல்பர் இருக்கிறது. பூண்டில் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டிபாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து உடலை விரைவில் ‘ஸ்லிம்’ ஆக மாற்றும்.
கடுகு எண்ணெய்: இதில் மற்ற எண்ணெய்களை விட குறைந்த அளவு கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் பேட்டி ஆசிட், இரூசிக் ஆசிட் மற்றும் லினோலிக் ஆசிட் போன்றவை இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் ஆன்டி ஆக்சிடன்ட், தேவையான வைட்டமின்கள் உள்ளதோடு, தேவையற்ற கொழுப்புகளை அகற்றும். அதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
முட்டைக்கோஸ்: இதை சமைத்தும் உண்ணலாம் அல்லது பச்சையாகவே சாப்பிடலாம். அது உடலில் சேரும் கொழுப்புகளை வேறுவிதமாக மாற்றி மற்ற உடலில் நடைபெறும் செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும். இதனால் உடலானது பருமனடையாமல் இருக்கும்.
தேன்: இது உடல் எடையைக் குறைக்க ஒரு சிறந்த வீட்டு மருந்து. இதனை உண்டால் உடலில் சேரும் கொழுப்புகளை சாதாரணமாக உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். ஆகவே தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சூடான தண்ணீரில் கலந்து, விடியற்காலையில் குடிக்க வேண்டும்.
மோர்: பால் பொருளில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மோரில் 2.2 கிராம் கொழுப்பும், 99 கலோரியும் மட்டுமே உள்ளது. ஆகவே இதைப் பருகுவதால் உடலுக்குத் தேவையான அளவு ஊட்டச்சத்துகள் கிடைப்பதோடு, கொழுப்பு மற்றும் கலோரியானது அதிகமாக சேராமல் எடையும் சரியான அளவு இருக்கும்

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing