நீண்ட ஆயுளை விரும்பினால் கிழக்கு திசை நோக்கி அமர்ந்தும்...
செல்வத்தை விரும்பினால் மேற்கு திசை நோக்கி அமர்ந்தும்...
மோட்சத்தை விரும்பினால் வடக்கு திசை நோக்கி அமர்ந்தும் உணவு அருந்த வேண்டும்.
அதான் வடக்குன்னா சீக்கிரம் மோட்சத்துக்கு போகலாம் என்று சொல்லி விட்டார்களோ!!
உணவு உண்ணும் பொழுது வேறு சிந்தனை செய்யாமல் உணவைப் பற்றியே சிந்திக்க வேண்டும். இந்த உணவு தனக்கு எப்போதும் குறையில்லாமல் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து உண்ண வேண்டும்.
மனக் கலக்கங்கள் இல்லாமல் உண்ண வேண்டும். எப்படி இருந்தாலும் உணவை குறை சொல்லக் கூடாது.
எச்சிலான உணவை யாருக்கும் கொடுக்கக் கூடாது. எச்சில் கையோடு எங்கும் செல்லக் கூடாது. உண்ணும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எதையாவது கொறித்துக் கொண்டிருக்கக் கூடாது.
அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. அளவுக்கதிகமாக உண்டால் ஆயுள் ஆரோக்கியம் கெடும். மேலும், புண்ணிய லோகங்களான சொர்க்கம் மோட்சம் ஆகியவை கிட்டாது.
- மனுநீதி 2:52 – 58
No comments:
Post a Comment