Wednesday, 29 June 2016

என்எஸ்ஜியில் இந்தியா நுழைய சீனா எதிர்ப்பு ஏன்?

உலகளவில் இந்தியாவின் எதிரி சீனாதான்.ஆசிய பிராந்தியத்தில் நிலவும் வல்லமை போட்டியில் இந்தியாவுடன் போட்டி போடும் சீனா என்றுமே இந்தியாவிற்கு ஆதரவாக சிறு துரும்பையும் அசைக்காது என்பதில் என்எஸ்ஜி அமைப்பில் சேர இந்தியாவுக்கு கட்டையை கொடுப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த அமைப்பில் மொத்தம் 48 நாடுகள் உறுப்பினராக உள்ளது. இந்த அமைப்பில் உறுப்பு நாடாக சேர வேண் டும் என்றால் 48 நாடுகளும் ஆதரிக்க வேண்டும். அதாவது 48 நாடுகளுக்கும் மறுப்பு ஓட்டு அதிகாரம் உள்ளது. ஒரு நாடு மறுத்து விட்டாலும் உறுப்பினர் ஆக முடியாது என்ற நிலையில் 47 நாடுகளை இந்தியா சரிக்கட்டினாலும் சீனா எதிர்ப்பு தெரிவித்தாலே போதும் இந்தியா என்எஸ்ஜி யில் இணைய முடியாது.

இந்த என்எஸ்ஜி அமைப்பில் இந்தியா உறுப்பினரானால் அடுத்த பத்து ஆண்டுகளில் என்எஸ்ஜி நாடுகளில் உள்ள உறுப்பு நாடுகளில் இந்தியா தான் அதிக அளவில் அணு சக்திக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து விடும்.
ஏனென்றால் இந்தியாவிலும் அணு ஆற்றலுக்கு தேவையான பொருட்கள் கொட்டி கிடைக்கிறது.
ஆச்சரியமாக இருக்கிறதா?..
இப்பொழுது இந்தியாவில் மூன்றாம் கட்ட அணுஉலைகள் நிர்மாணிக்கபட்டு வருகிறது.நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தோரியம் அணுஉலை அமைக்கப்பட்டு விட் டது.
இதற்கு மூலப் பொருள் யுரேனியம் அல்ல..
தோரியம் தான்.
இந்தியாவில் சுமார் 6,50,000 டன்கள் அளவில் தோரியம் இருப்பதாக சொல்லப் படுகிறது.
அதனால் வருங்காலத்தில் தோரியம் சார்ந்த அணு உலைகள் தொழில் நுட்பமே பயன்பாட்டுக்கு வரும்.
அப்பொழுது இந்தியாதான் தோரியம் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும். ஏனென்றால் இந்தியாவில் உலகளவில் உள்ள தோரியத்தில் 25% மேல்உள்ளது.
உலகளவில் தோரியம் உற்பத்தியில் முதலில் உள்ள நாடு எது தெரியுமா?.
அதுவும் நம்ம இந்தியா தாங்க..
அதனால் வருங்காலங்களில் இந்தியா தோரிய அணு உலை களை உலக நாடுகளில் நிறுவி அந்த நாடுகள் இந்தியாவை சார்ந்து நிற்கும் சூழல் உருவாகும்.
இன்று எந்த யுரேனியத்துக்காக நாம் என்எஸ்ஜியில் சேர அனுமதி தர வேண்டி ஒவ்வொரு நாடுகளிடமும் கெஞ்சி கொண்டிருக்கிறோமோ அதே மாதிரி மற்ற நாடுகள் இந்தியாவிடம் தோரியம் கேட்டு மண்டியிட்டு நிற்கும் நிலை வந்தே தீரும்.
நம்முடைய எதிரி நாடான சீனா யுரேனியம் உற்பத்தியில் உலகில் 9 வது இடத்தில் இருந்தாலும் அங்கே மருந்து க்கு கூட தோரியம் கிடையாது.அதனால் உலகம் வெப்பமயமாவதை முன்னிட்டு உலக நாடுகள் தங்களின் மின்சாரத்துக்கு மாற் று வழி தேடி வரும் நிலையில் தோரியத்தினால் இயங்க கூடிய அணு உலைகள் சுற்று சூழலுக்கும் கேடு விளைவிக்காமல் யுரேனியத்தை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கும் அணு உலைகளை விட பாதுகாப்பானது.
அதனால் என்எஸ்ஜி நாடுகள் அமைப்பில் இந்தியா நுழைந்தால் அது உலகளவில் இந்தியாவின் வல்லமைக்கு வலு சேர்க்கும். இந்தியாவின் பொருளா தாரம் அதிகரிக்கும்.
போதாதா!..
சீனா மாதிரி நம் எதிரி நாடுகளுக்கு.
இதனால் தான் என்எஸ்ஜி நாடுகள் அமைப்பில் இந்தியா சேருவதை எதிர்த்து வருகின்றது.
அதனால் கவலை இல்லை.
நம்மிடம் பொக்கிஷம் நம்ம இருக்கு.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing