Friday, 4 November 2016

கணவன் மனைவி உறவின் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக அனுபவித்து வாழுங்கள்

சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச்
சொல்லியிருந்தால்
உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச்
சொல்வது ....?

சொட்டும் நீர் உறிஞ்சா பாலிஸ்டர்
துணி , இருந்தும் அதில்
தலை துவட்டவே ஆசை...
‪#‎அவளின்‬ முந்தானை.!

ஒரு முத்தமிட்டு மன்னிப்புக் கேட்டேன்,
அன்று முதல் என்னைக்
கோபப்படுத்துவதையே வேலையாய்
கொண்டிருக்கிறாள்..!!!

காதுகள் கூட சுவை உணருமா??...
choo sweet என்று அவள் சொன்னது, காதின்
வழிச்சென்று ரத்தத்தில்
சர்க்கரையை ஏற்றுகிறது.!

அவள் துணி காய போட
வருவதை பார்த்து கொடியை
சற்று உயர்த்திக்
கட்டிவிட்டு அருகிலேயே அமர்ந்திருந்தேன்...
துணிகளை என்னிடம்
கொடுத்துவிட்டு புன்னகையோடு நகர்ந்தாள்..!

அதிகம் பேசிவிட்ட களைப்பில்
ஓய்வெடுக்கிறது அவளின் விழிகள்..
‪#உறக்கம்‬

கணவன் மனைவி உறவின்
ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக
அனுபவித்து வாழுங்கள்....
அன்பு பெருகும்..!!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing