Tuesday, 29 November 2016

நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ?


இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது

நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ?
இந்தப் பழக்கம்
ஏன் வழக்கமானது ?

ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.

மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர்.

மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி..

அப்போதெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது . . . கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள்கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும் .

அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.

இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக ?
வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது .

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் உரிமை கொண்டாடுகின்றனர். பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!

இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!

நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing