Sunday 1 January 2017

தங்கம் வைத்திருப்பவர்கள் இனி தப்பிக்கவே முடியாது' - விரைவில் வருகிறது 'கோல்டு பான் கார்டு'

கருப்பு பணத்தை தடுக்கும் முயற்சியாக மத்திய அரசு அடுத்த ஆண்டில் இருந்து மக்கள் தங்கம் வாங்குவதற்காக 'கோல்டு பான் கார்டு' என்ற ஒரு திட்டத்தை கொண்டு வருகிறது.

இதன்படி, தங்கம் வைத்து இருக்கும் தனி நபர் ஒருவர், தங்கம் வாங்கினாலோ அல்லது தங்கத்தை விற்பனை செய்தாலோ, புதிதாக கோல்டு கணக்கு எண் தொடங்க வேண்டும். அந்த 'கோல்டு கணக்கு எண்', வருமான வரித் துறையின் 'பான் எண்' ஆகியவற்றோடு இணைக்கப்படும்.

நாட்டில் கருப்பு பணத்தை கட்டுப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்தியஅரசு, வருமான வரித்துறையோடு இணைந்த இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளது.

இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சங்கள்-

1.தங்கம் வைத்து இருக்கும் தனிநபர், அதை எடைபோட்டு தனது கோல்டு எண் கணக்கில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், இதை பண மதிப்பாக பதிவு செய்யக் கூடாது. கிராம், கிலோவாக பதிவு செய்ய வேண்டும்.

2. தங்கம் வைத்து இருக்கும் ஒருவர் புதிதாக கோல்டு பான் கணக்கு எண் தொடங்கி, அதில் தன்னிடம் உள்ள நகையை தெரிவிக்க வேண்டும். தங்க நகைகள் வாங்கியதற்கான ஆதாரத்தை தெரிவிக்க வேண்டும்.

3. தங்க நகைகள், கட்டிகள் வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் கோல்டு பான் கார்டு கட்டாயமாகும்.

4. மக்கள் தங்கள் குடும்பத்தில் முன்னோர்கள் காலத்தில் இருந்த நகைகள் எவ்வளவு கையிருப்பு இருக்கிறது, அதன் மதிப்பு, எடை ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். அதையும் கணக்கில் பதிவு செய்ய வேண்டும். இந்த முன்னோர்கள் கணக்கில் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய முடியும்.

5. தனி நபர் ஒருவருக்கு பரிசாக தங்கம் கிடைத்தால், அதை கோல்டு கணக்கில் பதிவு செய்ய வேண்டும், அந்த தங்கம் யாரிடம் இருந்து பரிசாக கிடைத்தது, அவர்களின் பான் எண்ணையும் குறிப்பிட வேண்டும்.

6. குழந்தைகள் பெயரில் தங்கத்தை பதிவு செய்ய விரும்பினால், அவர்கள் பெயரில் மைனர் கோல்டு பான் கணக்கு தொடங்க வேண்டும். இதை பெற்றோர், பாதுகாவலர் கோல்டு பான் எண்ணுடன் இணைக்க வேண்டும். குழந்தைகள் பெயரில் இருக்கும் தங்கத்தை தெரிவிக்க வேண்டும், சட்டவிரோதமாக ஏதேனும் தங்கம் பதிவு செய்யப்பட்டாலும் அதற்கு காப்பாளரே பொறுப்பாவார். குழந்தைகல் 18 வயது நிரம்பியதும், அந்த கோல்டு பான் கணக்கை பராமரிக்கும் பொறுப்பு அவர்களிடம் அளிக்கப்படும்.

7. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 60 நாட்களுக்குள் மக்கள் அனைவரும் தங்களின் தங்கம் இருப்பு குறித்து தெரிவிக்க வேண்டும். அதன்பின், தங்கம் இருப்பது அரசு அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டால் அது சட்டவிரோதம் என எடுக்கப்படும். அதிகமாக இருக்கும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

8.கோல்டு பான் கார்டு வைத்து இருப்பவர்களுக்கே அனைத்து நகைக் கடைக்கார்களும் நகைகள் விற்பனை செய்ய வேண்டும், நகைகள் வாங்க வேண்டும். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த பின், தங்கத்தை பணமாக வாங்குவது தடை செய்யப்பட்டு, டிஜிட்டல் பரிமாற்றத்தில் வாங்க கட்டாயப் படுத்தப்படும். இதை தவறாகப் பயன்படுத்தும் நகைக் கடை உரிமையாளர்களின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும்.

9. தங்கத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உன்னிப்பாக கண்காணிக்கப்படும்.

10. தங்க கடத்தல் இனி முடிவுக்கு வரும்.

மோடிஜியை ஏன் எதிர்க்கிறார்கள் என மக்கள் சுலபமாகவே புரிந்து கொள்ளலாம்.

இனியொரு விதி செய்வோம்...

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing