Wednesday 1 February 2017

ЁЯПЫрокроЯ்роЬெроЯ் роЪிро▒рок்рок роЪெроп்родிроХро│்

பட்ஜெட்டின் நோக்கம் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் இளைஞர்களை ஊக்குவிப்பதே.

அந்நிய நேரடி முதலீடு ரூ.1.7 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.1.45ஆயிரம் கோடியாக அதிகரிப்பு.

உலக பொருளாதார வளர்ச்சி 2017ல் 3.4%ஆக இருக்கும் என ஐஎம்எப் கணிப்பு.

கடந்த ஓராண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 3.2% லிருந்து 3.4% உயர்ந்துள்ளது.

உலக வர்த்தக வர்த்தகத்தின் என்ஜினாக இந்தியா விளங்குகிறது.

அரசின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் பெரும் ஆதரவு.

அமெரிக்க பொருளாதாரம், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாக உள்ளன.

கச்சா எண்ணெய் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் இருக்கும் உறுதியற்ற நிலைதான் பெரிய சேலஞ்ச்.

டிஜிட்டல் பொருளாதாரம் வளர்க்கப்படும்.

வரி வசூல் நேர்மையானதாக இருக்கும்.

பட்ஜெட்டை தயார் செய்வதில் கிராமப்புற பகுதிகளுக்கும், கட்டமைப்பு வசதிகளுக்கும், வறுமை ஒழிப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளேன்.

பால் பதப்படுத்தும் உள்கட்டமைப்பு நிதி(NABARD கீழ்) 8000 கோடி ரூபாய்.

ரூபாய் நோட்டு நடவடிக்கையின் விளைவுகள் அடுத்த ஆண்டு தெரியும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்.

விவசாயிகளுக்கு 60 நாள் வட்டி தள்ளுபடி.

மஹாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தில் பெண்களுக்கு 55% முன்னுரிமை வழங்கப்படும்.

சிறுகுறு விவசாயிகள் தடையின்றி எளிதாக கடன் பெற நடவடிக்கை.

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு சாதனை அளவாக ரூ.48000 கோடி ஒதுக்கீடு.

விளைபொருளுக்கு நல்லவிலை கிடைக்க குளிர்பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் கடன்களுக்கான காலம் 15 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்.

நாட்டில் 2019ஆம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்.

கடந்த பட்ஜெட்டை ஒப்பிட்டால், இது 24 சதவீத உயர்வு.

கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 1,17,000 கோடி(கடந்த ஆண்டு ரூ.87,765 கோடி).

2018-ம் ஆண்டு மே மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவீத மின்வசதி.

MNREGA திட்டத்துக்கான நிதி 2017-2018காக 48,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2016-2017ல் 37,000 கோடி ரூபாயாக இருந்தது.

திறந்த வெளியில் மலம் கழிப்பவர்கள் இல்லாத கிராமங்களுக்கு பைப் மூலமாக நீர் சப்ளை கொடுக்க அதிக முக்கியத்துவம் தரப்படும்.

அரசின் நடவடிக்கையால் வீட்டுக் கடன் வட்டி ஏற்கனவே குறைந்து வருகிறது.

உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த தனி அமைப்பு.

சிபிஎஸ்இ நுழைவுத் தேர்வுகளை நடத்தாது.

பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு ரூ. 1,84,000 கோடி(கடந்த ஆண்டு ரூ.1,56,000 கோடி).

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க  ரூ.9000 கோடி ஒதுக்கீடு.

மருத்துவ சேவையை பரவலாக்க கூடுதல் மருத்துவ இடங்கள் ஏற்படுத்தப்படும்.

சிறுகுறு விவசாயிகள் தடையின்றி எளிதாக கடன் பெற நடவடிக்கை.

ஆர்சனிக் மற்றும் ஃபுளோரைடால் பாதிக்கப்பட்ட 28 ஆயிரம் வாழ்விடப் பகுதிகளுக்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் சுத்தமான குடிநீர்.

கிராமப்புற வளர்ச்சிக்கு நால் ஒன்றுக்கு 133 கிலோமீட்டர் விதத்தில் சாலை.

மருத்துவ சாதனங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்.

மே 2018க்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி ஏற்படுத்தி தரப்படும்.

மலிவு விலை வீடு கட்டும் திட்டத்துக்கு கட்டமைப்பு அந்தஸ்து.

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு சாதனை அளவாக ரூ.48000 கோடி ஒதுக்கீடு.

விளைபொருளுக்கு நல்லவிலை கிடைக்க குளிர்பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும்.

பிப்ரவரி 1- ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் அரசுக்கு பல நன்மைகள் கிடைக்கும் .

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் கடன்களுக்கான காலம் 15 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்.

இளைஞர்களின் வருடாந்திர கற்றலை அளவிட புதியமுறையை உருவாக்க திட்டம்.

நாட்டில் 2019ஆம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்.

25 ரயில் நிலையங்கள் 2017 -2018 ல் புதுப்பிக்கப்படும்.

கடந்த பட்ஜெட்டை ஒப்பிட்டால், இது 24 சதவீத உயர்வு.

2018-ம் ஆண்டு மே மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவீத மின்வசதி.

MNREGA திட்டத்துக்கான நிதி 2017-2018காக 48,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2016-2017ல் 37,000 கோடி ரூபாயாக இருந்தது.

திறந்த வெளியில் மலம் கழிப்பவர்கள் இல்லாத கிராமங்களுக்கு பைப் மூலமாக நீர் சப்ளை கொடுக்க அதிக முக்கியத்துவம் தரப்படும்.

பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு ரூ. 1,84,000 கோடி(கடந்த ஆண்டு ரூ.1,56,000 கோடி).

எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கான மேம்பாட்டு திட்டங்களுக்கு 52,393 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

பாரத் நெட் திட்டத்துக்கு 10,000 கோடி ரூபாய்.

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் இனி கிடையாது.

IRCTC மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சேவை கட்டணம் ரத்து.

ஒடிசா, ராஜஸ்தானில் புதிதாக இரண்டு கச்சா சேமிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

1.50  லட்சம் கிராமங்களில் இணையதள சேவை கொண்டு வரப்படும்.

அடுத்த 4 ஆண்டுகளில் பாதுகாப்பான குடிநீர் வழங்கத் திட்டம்.

ரயில் பயணிகளுக்கு உதவியாளர்கள்.

தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்துக்கு ரூ. 64,000 கோடி ஒதுக்கீடு.

டி.பி 2025க்குள் ஒழிக்கப்படும், தொழுநோய் 2018க்குள்ளும், தட்டம்மை 2020க்குள்ளும், யானைக்கால் நோய் மற்றும் கருங்காய்ச்சல் 2017க்குள்ளும்.

வறட்சியை சமாளிக்க நாடு முழுவதும் 5லட்சம் குளங்கள் வெட்டப்படும்.

7,000 ரயில் நிலையங்களில் சூரியசக்தி மின்திட்டம் செயல்படுத்தப்படும்.

போக்குவரத்து துறைக்கு 2.41 லட்சம் கோடி.

ஆதார் அடிப்படையிலான பணப்பரிமாற்ற திட்டம் விரைவில் அறிமுகம்.

கோச் முத்ரா திட்டத்தின் மூலம் ரயில் பெட்டிகள் தொடர்பான புகார்கள் பெறப்படும்.

தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை.

ரயில்வே பாதுகாப்புக்காக 5 ஆண்டுகளுக்கு 1 லட்சம் கோடி.

நாட்டை விட்டு தப்பிய குற்றவாளிகளின்  சொத்துகளை  பறிமுதல் செய்ய புதுசட்டம்.

ஓய்வு பெற்ற படை வீரர்களுக்கு சிரமமின்றி ஓய்வூதியம் ப புதிய திட்டம்.

2020ல் ஆளில்லா லெவல் கிராசிங்குகளே இருக்காது.

ராணுவத்திற்கு ரூ.2,74.11 கோடி  நிதி ஒதுக்கீடு.

மெட்ரோ ரயில் திட்டங்களில் தனியார் மயம்.

நிதிப்பற்றாக்குறை 3.2% ஆக இருக்கும்.

மறுமுதலீடுக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு.

மூத்த குடிமக்களுக்கு ஆதார் கார்டு அடிப்படையில் உடல் நல அட்டை.

இந்தியாவில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

ரூ.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் காட்டும் 76லட்சம் பேரில் 56லட்சம் பேர் மாத ஊதியம் பெறுவோர்.

அறிவியல் அமைச்சகத்துக்கு 37,435 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தரமான கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

100 நாள் வேலைதிட்டத்தை கண்காணிக்க விண்வெளிதொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

பலர் வரி கட்டாமல் இருப்பதால், மொத்த பளுவும் வரி கட்டும் சிலர் மேல் விழுகிறது.

பணப்புழக்கம் அதிகம் இருப்பதாலேயே எளிதாக வரி ஏய்ப்பு செய்ய முடிகிறது.

9 மாநிலங்களுடன் இணைந்து 70 புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

2015-16ல் 3.7 கோடி பேர் வரிக்கணக்கு தாக்கல்  இதில் 24 லட்சம் பேர் மட்டுமே 10 லட்சத்துக்கும் மேல் வருமானம் உள்ளதாக கூறியுள்ளனர்.

முன்கூட்டியே வருமான வரி செலுத்துவோர் 34% உயர்வு.

Demonetisation-ஆல் தனிநபர் வருமான வரி மீது அட்வான்ஸ் டேக்ஸ் 34.8 சதவீதமாக உயர்வு.

2ம் தர நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் தனியாருடன் இணைந்து மேம்படுத்தப்படும்.

2016 நவ.8 முதல் டிச.30 வரை 1.09 கோடி கணக்குகளில் ரூ.2 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை டெபாசிட்.

2015-16ல் வரியால் கிடைத்த மொத்த வருவாய் 17% உயர்வு.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரி விலக்கு.

சிட்பண்ட் மோசடிகளை தடுக்க புதிய சட்டம்.

மலிவுவிலை வீடுகளுக்கான சலுகைகள் பெறுவதில் உள்ள நிபந்தனைகள் தளர்வு.

மொத்த பட்ஜெட் செலவு ரூ.21,47,000 கோடி: நிதித் துறை அமைச்சர்.

ஆண்டுக்கு 50 கோடி ரூபாய்க்குள் டர்ன் - ஓவர் கொண்ட சிறிய நிறுவனங்களுக்கு இனி 25% வருமான வரி - 5% குறைப்பு.

ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்ய முடியாது.

6.94 லட்சம் நிறுவனங்கள் வருமான வரி செலுத்துகின்றன இதில் 96 சதவீத நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள்தான்.

LNGக்கான அடிப்படை சுங்க வரியை 5%ல் இருந்து 2.5% ஆக குறைக்க பரிந்துரைக்கிறேன்.

புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும்.

காஸ் இறக்குமதி வரி 5லிருந்து 2.5 சதவீதமாக குறைப்பு.

இனி ஒரு கட்சி ஒரு நபரிடம் இருந்து அதிகபட்சமாக 2000 ரூபாய் மட்டுமே நிதி பெற முடியும்.

வங்கிகளில் சட்டவிரோத டெபாசிட்களை தடுக்க சட்டம் இயற்றப்படும்.

காசோலை மூலமாக மட்டுமே அரசியல் கட்சிகள் நன்கொடை பெறவேண்டும்.

மூன்று லட்சத்த்துக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்ய தடை செய்யும் வகையிலான சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படலாம்.

எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களுக்கு வரி 5% ல் இருந்து 2% ஆக குறைப்பு.

ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் மேல் இருந்தால் 15% மிகைவரி.

ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையுள்ள வருமானத்திற்கான வரி மீது 10% கூடுதல் வரி.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing