Saturday, 29 April 2017

அக்னி நட்சத்திரம

வணக்கம் இன்னும் 5 நாட்கள் தான் உள்ளன இந்த அக்னி நட்சத்திரம் தொடங்க

அக்னி நட்சத்திரம் -ஒரு குறிப்பு

சித்திரை மாதம் 21-ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14-ஆம் தேதி வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை "அக்னி நட்சத்திரம்' என்று சொல்வர்.

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும்,

சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறும்.

இந்த வருடம் 4-5-2013 முதல் 28-5-2013 வரை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.

இந்த காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும். அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும். அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும். அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும்.

அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும். இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள். இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது. அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது.

பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கும் பாதையில், முதல் நான்கு மாதங்கள் பூமிக்கு அருகில் இருந்தவாறு பயணப்படும். இந்த வழியை முதல் பரியாயம் என்பார்கள். இதற்கு ஐராவத வீதி என்ற பெயரும் உண்டு.

அக்னி நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டது கார்த்திகை நட்சத்திரம்.

கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதை அக்னி தேவன்.

நெருப்பைத் தாங்கும் சக்தி படைத்தது கார்த்திகை நட்சத்திரம் என்று வானியல் நூல்கள் கூறுகின்றன.

இந்த அக்னி நட்சத்திரம் குறித்து புராணம் கூறும் தகவலைப் பார்ப்போமா?

யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம்.

இந்தக் காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்துவளர, அவ்வப்போது மழைபெய்யச் செய்தான் மழையின் அதிபதியான இந்திரன். (இந்திரனுக்கு காண்டவவனன்' என்ற பெயரும் உண்டு.)

இயற்கையின் எழிலுடன் மூலிகையின் மணமும் வீசிக்கொண்டிருந்த இதமான சூழ்நிலையில், யமுனை நதியில் கண்ணனும் அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் கரையேறும்போது ஓர் அந்தணர் வந்தார்.

அவர், கண்ணனையும் அர்ச்சுனனையும் பார்த்து,

""உங்களைப் பார்த்தால் கருணை மிக்கவர்களாக தெரிகிறீர்கள். எனக்கு அதிக பசி. என் பசிக்கு உங்களால்தான் உதவமுடியும். இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்'' என்று வேண்டினார்.

அந்த அந்தணரின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே, கண்ணன் அந்த அந்தணரை உற்றுப் பார்த்தார்.

வந்திருப்பது அக்னி தேவன் என கண்டு கொண்டார்

""அக்னிதேவனே! ஏன் இந்த வேடம்? நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே'' என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தைக் கலைத்தார் அக்னிதேவன்.

""உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.

சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார்.

யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன்.

அதனால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது.

அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள அரிய மூலிகைகளை நான் கபளீகரம் செய்தால் என் பிணி தீரும்'' என்றான்.

""அதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள்?'' என்றான் அர்ச்சுனன்.

""நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும்பொழுதெல்லாம், இந்திரன் மழை பெய்ய மேகங்களுக்கு உத்திரவிட்டு, என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியைத் தடுத்துவிடுகிறான்'' என்றான்.

கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்து சிரித்தார்.   (காண்டவ வனத்தை அழித்தே அங்கே இந்திரப் பிரஸ்தம் கட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தனர் பாண்டவர்கள். ஆனால் காண்டவ வனத்தை அழிப்பது எவ்வாறு என்று திகைத்த வேளையில் இது நடந்தது)

கண்ணன் சிரிப்பின் பொருளைப் புரிந்துகொண்ட அர்ச்சுனன்

"அக்னி தேவனே, நாங்கள் உனக்கு உதவுகிறோம் ஆனால் ஒரு நிபந்தனை. இந்த உதவிக்கு உபகாரமாக வில்லும் அம்பாறாத்தூணியும் அம்புகளும் வேண்டும். ஏனென்றால் நாங்கள் இங்கு நீராடத்தான் வந்தோம். எனவே இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு வில்லும் அம்புகளும் தேவை'' என்றான்.

உடனே, அர்ச்சுனனுக்காக சக்திமிக்க
காண்டீப வில், அம்புகள், அம்பறாத்தூணி என எல்லாவற்றையும் தந்தான் அக்னி பகவான்.

அப்பொழுது கண்ணன்

"அக்னிதேவனே, உன் பிணியைத் தீர்த்துக்கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இந்தக் காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அந்தச் சமயத்தில் இந்திரன் மழைபொழியாமல் பார்த்துக்கொள்கிறோம்'' என்றார்.

அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான்.

இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான்.

மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சுனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க "சரக்கூடு' ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித் தடுத்தான்.

அக்னியும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தான்.

அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாகக் கொண்டான்.

அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் கண்ணனிடமும் அர்ச்சுனனிடமும் விடைபெற்று வெளியேறினான்.

இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.

இந்த அக்னி நட்சத்திர நாட்களில் என்ன செய்யலாம்?  எதைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.

இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது; நார் உரிக்கக்கூடாது; விதை விதைக்கக்கூடாது; கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது; நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது; வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது.

இந்த நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்வது நல்ல பலனைத் தரும்.

தான- தர்மங்கள் செய்யலாம்; தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கலாம்;

நோயாளிகளுக்கு இளநீர் தரலாம்; உடல் ஊனமுற்றவர்களுக்கு காலணி, குடைகளை வழங்கலாம்; ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் அளிக்கலாம்;

அந்தணர்களுக்கு விசிறி தானம் அளிக்கலாம்.

அக்னி நட்சத்திரக் கால கட்டத்தில் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கி, அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும் பானகம் வழங்குவதும் நல்ல பலன்களைத் தரும்.

பரணிக்குரிய துர்க்கையையும் ரோகிணிக்குரிய பிரம்மாவையும் சந்தனாபிஷேகம் செய்து வழிபட வாழ்வில் வசந்தம் வீசும்.

அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில் நம் உடல்நிலை பாதிக்காமலிருக்க, காலை வேளையில் பூஜையறையில் சூரியனுக்குரிய மாக்கோலத்தை பூஜைப் பலகையில் போட்டு, சூரிய காயத்திரி மந்திரத்தை 21 முறை ஜெபிக்கலாம்.

பாஸ்கராய வித்மஹே மஹாயுதிஸ்ட்ராய தீமஹி
தன்ன: சூர்ய ப்ரஜோதயாத்:

அஸ்வத்வஜாய வித்மஹே பாஸஹஸ்தாய தீமஹி
தன்ன: சூர்ய ப்ரஜோதயாத்

Tuesday, 11 April 2017

ஊட்டியில் அணை கட்டினால் போதும் கர்நாடகா நம்மிடம் கையேந்தும் தண்ணீருக்காக

ஊட்டியில் அணை கட்டினால் போதும் கர்நாடகா நம்மிடம் கையேந்தும் தண்ணீருக்காக..!
தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களும் இந்திய- பாகிஸ்தான் போல மோதிக்கொள்ளும் ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் விஷயம்தான்.

Monday, 10 April 2017

சீமைகருவேல மரத்திற்கு மாற்ற

அப்பாடா சீமைகருவேல மரத்திற்கு மாற்று கிடைத்து விட்டது

தமிழகத்தின் வறட்சிக்கு காரணம் என்று கூறப்படும் சீமை கருவேல மரத்தை அழிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுக்க சீமை கருவேல மரத்தை அழிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சீமை கருவேல மரங்களை அழித்த இடம் தற்போது கட்டாந்தரையாக மாறி உள்ளது. மேலும் தற்போது கோடை காலம் என்பதால் அந்த இடத்தில் என்ன மரத்தை வைப்பது என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சீமை கருவேல மரம் வறட்சியையும் தாங்க கூடியது.

அதோடு பொதுமக்களுக்கு விறகு, எரிகரி போன்றவற்றுக்கும் பயன்பட கூடியது. சீமை கருவேல மரத்திற்கு மாற்று என்ற பட்டிமன்றமே நடந்து வருகிறது. மேலும் மாற்றாக ஒரு மரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

,சீமைக் கருவேலமரங்களுக்கு இணையாக வறட்சியைத்தாங்கி வளரக்கூடியதும், பல நன்மைகளைக் கொடுக்கக்கூடிய மூலிகைத்தாவரமுமான ” மஞ்சநெத்தி” எனப்படும் நுணா   என்னும் வகை மரத்தை பெரும்பாலானோர் பரிந்துரைக்கின்றனர். இது அடுப்பெரிக்க மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுகிறது.

சீமை கருவேல மரத்தை போலவே மஞ்சநெத்தி மரமும் மனிதர்கள் விதையிட்டு வளர்க்கப்படுவதில்லை. தானாக முளைத்து பசுமையாக இருக்கக்கூடியது.
இம்மரத்தின் இலை, பூ, காய், பழம், மரப்பட்டை அனைத்தும் சிறந்த மருந்தாகும். வேள் நிறுவனம் விற்கும் அகத்தியர் மூட்டுவலி மருந்தின் இரகசியம் இம்மரத்தின் பாகங்கள்தான்.

இன்னும் ஒன்றை கூறினால் ஆச்சரியப்படுவீர்கள். ஒருநேரத்தில் படுவிற்பனையில் இருந்த “நோணி” எனும் மருத்துவ குடிப்பு இம்மரத்தின் பழச்சாறுதான்.  ஆனால் அவை வணிகத்திற்காக செயற்கை முறையில் வளர்த்து,  இராசயனம் மூலம் கெடாமல் பாதுகாக்கபடுவதால் மட்டுமே நோணி மருந்தினை பரிந்துரை செய்ய முடியவில்லை.

இம்மரத்தினைப் பயன்படுத்தி அடுப்பெரித்தால் வெளிப்படும் புகை உங்கள் இல்லத்தில் கிருமிநாசினியாக செயல்படும்.  அதன் இலைகளை ஆடுகள் உண்டால் நோயின்றி வாழும். காற்றைக் குளிர்வித்து மழைவளத்தை பெருக்கும்.

பறவைகள் கூடுகட்டி நிம்மதியாக வாழும்.  பழங்கள் பறவைகள், மனிதர்கள் விரும்பி உண்ணும் சுவையுடையது. மருத்துவக் குணம்வாய்ந்தது.  இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து மூட்டு, முழங்காலில் ஒத்தனம் கொடுத்தால் வலி சரியாகும்.  இதன் வேர்கள் நிலத்தடி நீர்மட்டத்தை தொடும்போது நீரின் தன்மை மருத்துவ குணமுள்ளதாக மாறுகிறது.

சீமைக் கருவேலமரம் ஒரு பாலைவன தாவரம். அதன் இயற்கையான குணங்கள் நம்மண்ணுக்கு ஏற்றதல்ல. விரைவில் சீமைக் கருவேலமரங்களை அழித்துவிட்டு அந்த இடங்களை  5 வருடங்களுக்கு பராமரிப்பது நமது கடமை. சீமைக் கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் மேற்கொண்ட இடங்களில் மீண்டும் முளைக்காமலிருப்பதற்கு காரணம், முறையான பராமரிப்புதான்.

சீமைக் கருவேலமரம் இல்லாவிட்டால் எப்படி அடுப்பெரியும் என்று கூப்பாடு போட்டவர்கள் வரிசையாக வாருங்கள்… நுணா மரத்தை பாதுகாப்போம், நடுவோம், விதையிடுவோம்.

Thursday, 6 April 2017

சர்வபிரச்னைகளுக்கும் நிவாரண

சர்வபிரச்னைகளுக்கும் நிவாரணி: ஓம் சிவசிவ ஓம்

ஓம் சிவசிவ ஒம்

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் “சிவசிவ” என்று போட்டிருப்பார்கள்.இதில் அனேக உட்பிரிவுகள் உண்டு.அவைகள் சிவ தீட்சை பெற்றவர்களுக்குத்தான் தெரியும்.மந்திரங்களில் ஜெபிக்க எளிதானது சிவமந்திரம்தான். நமசிவாய,சிவாயநம,சிவாயசிவ,சிவசிவ :இவைகளை ஒரு பக்குவம் அடைந்தவர்கள் தான்,தகுதி பெற்றவர்கள் தான் ஜெபிக்க வேண்டும்.(நம் குழுவினர் அனைவரையும் தயார்படுத்திவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது)இல்லாவிட்டால்,எதிர்மறை விளைவுகள் உண்டாகும்.மந்திர சக்தியும் வேண்டும்;குடும்பத்திலும் இருக்க வேண்டும்;அனுஷ்டானங்களும் செய்யமுடியாத நிலை இக்கால வேகமான வாழ்க்கை நிலை என்பது அனைவரும் அறிந்ததே!!!

இது சம்பந்தமாக,பல சிவனடியார்களை அணுகி,அடிபணிந்து வேண்டிக்கொண்டதில் ஒரு எளிமையான மந்திரம் கிடைத்தது.அம்மந்திரம் தான் “ஓம் சிவசிவ ஓம்”
இதை ஜாதி மத இனப் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் ஜபிக்கலாம்.ஒரே தகுதி சைவ உணவு பழக்கமும்,எந்த உயிரையும் துன்புறுத்தாத ஜீவகாருண்ய உணர்வும் மட்டுமே இருந்தால் போதும்.
இதற்கு தீட்சை பெற வேண்டியதில்லை;ஓம் என்னும் அட்சரத்தில் ஆரம்பித்து ஓம் என்னும் அட்சரத்தில் முடிவதால், குடும்பஸ்தர்களுக்கு ஏற்றது.அவர்களுக்கு அருளும் பொருளும் ஒருங்கே கிடைக்கும்.எல்லா மந்திரங்களும் இதில் அடக்கம் என்பதால்,வேறு எந்த மந்திரம் ஜெபிக்க வேண்டியதில்லை.

முதலில் குலதெய்வத்தை வணங்கிக் கொள்ள வேண்டும்.(அது தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடவேண்டும்) பிறகு விநாயகரை வழிபட வேண்டும்.பிறகு தினமும் காலை 108 முறையும்,மாலை 108 முறையும் ஓம் சிவசிவ ஓம் என்ற மந்திரத்தை ஜபித்துக்கொண்டே வரவேண்டும்.ஒரு சில நாட்களிலேயே நமது நீண்ட காலப் பிரச்னைகள்,நோய்கள் தீர ஆரம்பிக்கும்.உடனே விட்டுவிடக்கூடாது.
அமைதியான மனநிலையில் தான் இந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும். (நம் குழுவினர்களுக்கு நான் திரும்ப திரும்ப சொல்வது)நம்பிக்கைதான் முதலீடு.ஒரு அமாவாசையன்று இந்த ஓம் சிவசிவ ஓம் மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்கலாம்.
21 வயதிற்கு மேற்பட்ட எவரும் இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரலாம்;பவுர்ணமி,அமாவாசை,சிவராத்திரி, தமிழ் மாதப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு நாட்களில் இந்த மந்திரத்தை ஜபிக்க பலகோடி மடங்கு பலன்கள் கிடைக்கும்.
எந்த மலையில் இருந்தாலும்,எந்த கடலில் இருந்தாலும்,எந்த வனத்தில் இருந்தாலும் இந்த மந்திரம் உங்களைக் காப்பாற்றும்.சூட்சுமமாக இயங்கும் சிவ கணங்கள் வந்து உங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும்.

இனிமேலாவது திருந்தி சத்தான ஆரோக்கிய உணவுகளை குழந்தைகளுக்கு அளிப்போம்

தொப்பை வயிறு ..சப்பை மூளை ...குப்பை உணவு...

சமீபத்தில் நண்பர் ஒருவரின் ஏழு வயதுப் பெண் திடீரென சுகவீனமடைந்தாள். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது சுருண்டு விழுந்தவள் ”வயிறு வலிக்கிறது” என்று அழுதிருக்கிறாள். பதறிப் போன பெற்றோர்கள் உடனடியாக மகளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்கள். பலவிதமான சோதனைகளையும், ஸ்கேன்களையும் செய்து பார்த்த மருத்துவர், ’உடலில் எந்தக் கோளாறும் தெரியவில்லையே!’ என்று குழம்பியிருக்கிறார். இதற்கிடையே நான்கைந்து நாட்கள் ஓடி விட்டது. இந்த நாட்களில் தொடர்ச்சியாக வலி நிவாரணி ஊசி போட்டே சமாளித்திருக்கிறார்கள். வலி நிவாரணியின் தீவிரம் குறையும் போதெல்லாம் அவள் துடிதுடித்துப் போயிருக்கிறாள்.

கடைசியாக எந்தச் சோதனையும் நோயைக் கண்டு சொல்லாததால் குழம்பிப் போன மருத்துவர்கள், எதற்கும் ஒரு முறை வயிற்றைச் சுத்தம் செய்து பார்த்து விடுவோமென்று எனிமா கொடுத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வயிற்றிலிருந்து கட்டி கட்டியாக கறுப்பு நிறக் களிம்பு போன்ற பொருள் கடும் துர்நாற்றத்துடன் வெளியேறியுள்ளது. அதைச் சோதனைக்கனுப்பிப் பார்த்த போது, அவ்வளவும் அந்தச் சிறுமி தினசரி தின்னும் நொறுக்குத் தீனிகளின் கழிவு என்று தெரிய வந்துள்ளது. மகளைச் செல்லமாக வளர்ப்பதாகக் கருதிக் கொண்டு பெற்றோர் அவள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

லேய்ஸ், குர்குர்ரே, சீட்டோஸ், கிண்டர் ஜாய், சீஸ் பால் மற்றும் கடைகளில் பல வண்ணங்களில் சரம் சரமாகத் தொங்கும் அத்தனை நொறுக்குத் தீனிகளும் தான் அவள் வயிற்றை நிறைத்துள்ளது. அது சரியாக செரிமானமாகாமல் இரைப்பையிலும், குடலின் உட்சுவரிலும் ஒரு பிசினைப் போல் படிந்து போயிருக்கின்றது. தொடர்ந்து உள்ளே வரும் உணவுப் பொருள் எதையும் செரிக்க விடாமல் செய்ததோடு, கடுமையான வலியையும் தோற்றுவித்திருக்கின்றது.

குழந்தைகளைக் கவர்வதற்கென்றே தொலைக்காட்சிகளில் காட்டப்படும் விளம்பரங்களில் பெரும்பாலானவை தின்பண்டங்களுக்காகவும், அதனை சாப்பிட்ட பின்  பற்களை எந்த பற்பசையைக் கொண்டு விளக்கலாம் என்பதற்காகவுமே காட்டப்படுகின்றது. சுமார் 50% விளம்பரங்கள் ஜங்க் புட் என்று சொல்லப்படும் குப்பை உணவுகளைக் கடை விரிப்பதாகவும்,  ஒரு வாரத்துக்கு சராசரியாக 45 மணி நேரம் தொலைக்காட்சிகளின் முன் செலவழிக்கும் குழந்தைகள் ஆண்டொன்றுக்கு சுமார் 30,155 விளம்பரங்களைக் காண்பதாகவும், அமெரிக்கச் சிறார்களில் 60% பேர் ஒபசிட்டி எனப்படும்  அதீத உடற்பருமன் நோய்க்கு ஆட்பட்டிருப்பதாகவும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சொல்கின்றது.

உலகளவில் குப்பை உணவுச் சந்தையின் தோராய மதிப்பு சுமார் ரூ. 6521 பில்லியன். அமெரிக்காவில் விளம்பரங்களுக்காக மட்டுமே சுமார் 83.2 பில்லியன் ரூபாயைக் குப்பை உணவு தயாரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலவிடுகின்றன. மேற்கத்திய நாடுகளில் ஒப்பீட்டளவில் ஓரளவுக்கு வலுவுடன் இருக்கும் தரக்கட்டுப்பாட்டுச் சட்டங்களையே கால் தூசுக்கு மதிக்கும் குப்பை உணவு பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா என்பது திறந்த மடம் தான்....ஆகையால் இனிமேலாவது திருந்தி சத்தான ஆரோக்கிய உணவுகளை குழந்தைகளுக்கு அளிப்போம்.

Tuesday, 4 April 2017

அவசியம் அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம

*அவசியம்  அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*
================= ======
*1. சாப்பிட்டவுடன்  தண்ணிரை  வயிறுமுட்ட  குடிக்க  கூடாது.  இதனால்  ஜிரணநீர்  நீர்ந்து  போய்  அஜிரணமாகும்  பல  நோய்கள்வர  இது  முக்கிய  காரணமாக  அமையும்.*

*2. சுமார் 40 நிமிடம் கழித்து  தண்ணீர்தாகம்  எடுக்கும்  அப்போது குடிக்கவேண்டும்.*

*3. சாப்பிட்டதும்  படுத்து விடக்கூடாது. காரணம், குடல்  தனது  செயல்பட மிகவும்  சிரமப்படும். ஜீரணம்  முறையாக  நடக்காது.*

*4. குறைந்தது  ஒரு  மணிநேரம்  கழித்தே  உறங்க  வேண்டும்.  இது  மதியம்  ஓய்வு  எடுப்பவர்களுக்கும்  பொருந்தும்.*

*5. சாப்பிட்டதும்  குளிக்க  கூடாது  குறைந்தது 2 மணிநேரம்  கழித்தே  குளிக்க  வேண்டும்.*

*6. சாப்பிட்டு  முடித்ததும்  எந்த  பழங்களையும் சாப்பிடக்கூடாது.  காரணம்,  உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.* 
*பழங்களின்  நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.*
*இந்த  வித்தியாசத்தால் நாம் சாபிட்ட  பழம்  வாயுவாக  மாற்றம்  பெரும்.  இதில்  ஒரு  பழத்துக்கு  மட்டும்  விதிவிலக்கு  அது  பேரீச்சம்பழம்.*

*7. சாபிட்ட உணவு  ஜீரணமாகாத நிலையில்  வேறு  உணவுகள்  எதையும்  உண்ணக்கூடாது.  காரணம், இவ்வாறு  சாப்பிட்டால்  ஏற்கனவே  சாபிட்ட  உணவு  ஜீரணத்தை கடுமையாக  பாதிக்கும்.  இதனால்  சுகர்  வர  காரணமாக  அமையும்.*

*8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம்,  ஐஸ்வாட்டர்  இவைகளையும்  குடிக்க  கூடாது. காரணம், உணவு  ஜீரணமாக  நமது  குடலில்  வெப்பம் இருக்கவேண்டும். அந்த  வெப்பத்தை  இந்த  குளிர்பானங்கள்  இல்லாமல்  செய்துவிடும்.*

*9. சாப்பிட்டதும்  பரபரப்பாக  இயங்குவதோ  நடப்பதோ  பளுவானவற்றை  தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால்  உணவு  கீழ்நோக்கி  செல்லாமல்  மேல்  நோக்கி  வரும்.  இதனால்  நெஞ்சு  எரிச்சல்,  வாயு தொல்லைகள்  ஏற்படும்.*

*இ்ந்தப் பதிவை படித்து உடனே பகிர்ந்தால் இரண்டு நிமிடம் ஆகும். பகிராவிட்டால் ஒரு நல்ல பதிவுக்கு உண்டான நன்மை கிடைக்காமல் போகும்.* 😁😁😁

Monday, 3 April 2017

இதை அதிகமாக பகிர்ந்து வாட்ஸப் வசதி இல்லாத நமது மக்களுக்கும் தெரியப்படுத்தவும்

ஸ்மார்ட் கார்டு பெறும் வேளையில் பழைய குடும்ப அட்டையை ஒப்படைக்க வேண்டியிருப்பதால் அதனை முழுவதுமாக ஸ்கேன் அல்லது நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.  புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டையில் விபரங்களில் வேறுபாடு இருப்பின் அப்போது இந்த நகல் திருத்தம் செய்ய உதவியாக இருக்கும்.

இதை அதிகமாக பகிர்ந்து வாட்ஸப் வசதி இல்லாத நமது மக்களுக்கும் தெரியப்படுத்தவும்

5 THINGS YOU PROBABLY NEVER KNEW YOUR MOBILE PHONE COULD DO !!!


Very useful 👍👍👍

In grave emergencies, your mobile phone can actually be a life saver or an emergency tool for survival.

1. Emergency Services
🚑🚑🚑

The Emergency No. worldwide for all Mobile Phones is 112.
If you find yourself out of the coverage area of your mobile network and there is an emergency, dial 112 and your mobile will search any existing network in your area to establish the emergency number for you, and interestingly this number 112 can be dialed even if the keypad is locked. This works on all phones worldwide and is free.

2. Locked your keys in the car?
🚙🚙🚗🚕🚗🚕🚙🚗
If you lock your remote keyless car keys in the car and the spare keys are at home, call someone at home on their mobile phone from your cell phone.
Hold your cell phone about a foot from your car door and have the person at your home press the unlock button on the spare key, holding it near the mobile phone on their end. Your car will unlock. Saves someone from having to drive your keys to you.
Distance is no object. You could be thousands of miles away.
Editor's Note: I didn’t believe this when I heard about it! I rang my daughter in Sydney from Perth when we went on holiday. She had the spare car key. We tried it out and it unlocked our car over a mobile phone!

3. Is your mobile phone battery flat ? All handphone have Hidden Battery Power.
📲📱📱📱📱📱📈📈

To activate, press the keys *3370# (remember the asterisk). Do this when the phone is almost dead. Your mobile will restart in a special way with this new reserve and the instrument will show a 50% increase in battery life. This reserve will be recharged when you charge your handphone next time.
This secret is in the fine print in most phone manuals which we skip without realizing.

4. Disabling a STOLEN mobile.
📱❌📱❌📱❌📱
To check your handphone's serial number, key in following digits on your phone:
* # 0 6 #
Ensure you put an asterisk BEFORE the #06# sequence.

A 15 digits code will appear on the screen that is unique to your handset. Write it down and keep it somewhere safe. If your handphone is ever stolen, phone your service provider and give them this code.
They will then be able to block your handset so even if the SIM is changed, your handphone will be totally useless. And even if you don't get your phone back, at least it can't use/resold either. If everybody did this, there would be no point in people stealing mobile phones.
This secret is also in the fine print of most mobile phone manuals. It was created for the very purpose of trying to prevent phones from being stolen.

5. ATM PIN Number Reversal - Good to Know !!!
❌💰💵❌💰💵

If you should ever be forced by a robber to withdraw money from an ATM machine, you can notify the police by entering your PIN # in reverse. For example, if your pin number is 1234, then you would put in 4321. The ATM system recognizes that your PIN number is backwards from the ATM card you placed in the machine. The machine will still give you the money you requested but unknown to the robber, the police will be immediately dispatched to the location. All ATM’s carry this emergency sequencer by law.

This information was recently broadcast by Crime Stoppers. It is, however, seldom used as people just don't know about it.

Please pass this along to everyone.
👍👍👍👍👍👍👍

This is the kind of information people don't mind receiving, so pass it on to your family and friends.
👏👏👏👏👏👏👏👏

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing