Tuesday, 11 April 2017

ஊட்டியில் அணை கட்டினால் போதும் கர்நாடகா நம்மிடம் கையேந்தும் தண்ணீருக்காக

ஊட்டியில் அணை கட்டினால் போதும் கர்நாடகா நம்மிடம் கையேந்தும் தண்ணீருக்காக..!
தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களும் இந்திய- பாகிஸ்தான் போல மோதிக்கொள்ளும் ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் விஷயம்தான்.

இந்த காவிரி பிரச்சனையை வைத்து தான் இரு மாநில அரசியல்வாதிகளுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனையானது தீர்த்து வைக்கப்பட்டு விட்டால் அரசியல்வாதிகளுக்கு வேலையே இருக்காது.
ஆனால் இன்று வரை கர்நாடகாவிடம் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறோம்.
அவர்களும் கெத்தாக முடியாவே முடியாது என்று மார்தட்டி கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கர்நாடகாவுக்கே நாம்தான் தண்ணீர் தந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?
நமது தமிழ்நாட்டின் ஊட்டியில் மோயார் என்றொரு ஆறு பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த மோயார் ஆற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிலும் பாய்கிறது.
கர்நாடகாவில் பாயும் தண்ணீர் கபினி அணையிலும், நூகு அணையிலும் கலக்கிறது. பின்னர் இரண்டும் இணைந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்குள் பாய்கிறது. ஆனால் நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்து கொண்டுள்ளது.
ஆனால் நாம் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து அணையை கட்டினாலே போதும். கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது.  தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இதுதான். இதுபோலவே தமிழகம் முழுக்க உள்ள நீர்வளங்களை பாதுகாத்தாலே தமிழகம் செழிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. தேர்தலில் ஓட்டிற்கு பணம் வாங்குவதற்கு பதில் தயவுசெய்து இதை கேளுங்கள்...

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing