Saturday 6 May 2017

அனைவருக்கும் வீடு: ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ திட்டத்தில

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலமாக யாருக்கெல்லாம் வீடு கிடைக்கும்..? பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலமாக யாருக்கெல்லாம் வீடு கிடைக்கும்..?  இந்தியாவில் 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும் என்று நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமாகும்.
இந்தத் திட்டம் மூலம், பெண்கள், பொருளாதாரப் பின்தங்கிய வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வீடு கட்ட மானியம் பெற்றுப் பயன்பெறலாம். பயனாளிகள் பிராதன் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் உங்களுக்கு வீடு வேண்டும் என்றால் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினராக இருக்க வேண்டும், குறைந்த அளவு வருமானம் அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் உங்களுக்கு எளிதாக வீடு கிடைக்கும். அதிலும் பெண்கள் பெயரில் வீடு கட்ட கடன் பெறுவது மிகவும் எளிது. பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர் பிராதன் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு முன்னுறிமை அளிக்கபப்டும். பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள் பயணாளிகளாக இருந்தால் இன்னும் எளிதாக வீடு கிடைக்கும். பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர் தான் என்பதை நிருபிக்க முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். யார் எல்லாம் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர்? ஆண்டு வருமானம் 3 லடசத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பில் வருவார்கள். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களையும், குறைந்த வருமானம் உள்ளவர்களையும் அரசு இப்படித் தான் தரம் பிரிக்கின்றது. குறைந்த வருமான உள்ள வகுப்பு குறைந்த வருமான உள்ள பிரிவினர்களும் எளிதாகப் பிராதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து வீடு கட்டுவதற்கான கடனை பெறலாம். குறைந்த வருமான வகுப்பின் வருமான அளவு அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய்க்கு உட்பட்டு இருக்க வேண்டும். 6 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் பெறும் போது 6.5 சதவீதத்தில் வீட்டுக் கடன் பெறலாம். வருமான வரம்பு 1 தனிநபர் ஒருவரின் வருமானம் 12 லட்சம் ரூபாய் வரை இருந்து 9 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் பெறும் போது வட்டியில் இருந்து 4 சதவீதம் விலக்குப் பெறலாம். வருமான வரம்பு 2 தனிநபர் ஒருவரின் வருமானம் 18 லட்சம் ரூபாய் வரை இருந்து 12 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் பெரும்போது வட்டியில் இருந்து 3 சதவீதம் விலக்குப் பெறலாம். சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வாங்க முயலும் போது அதாவது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பிற பின்தங்கிய வகுப்பினர் அதற்கான முறையான சாண்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.   பெண்கள் இந்தத் திட்டத்டின் கீழ் பெண்களுக்கு அதிக முன்னுறிமை உண்டு. இத்திட்டத்தின் கீழ் வீடு வாங்க முயலும் பெண்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பிற பின்தங்கிய வகுப்பினர் என எதுவாக இருந்தாலும் எளிதாக வீடு கட்டுவதற்கான கடனை பெற முடியும். உட்பிரிவுகள் பிராதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்ட முயலும் குடும்பத்திற்குக் குழந்தைகள் இருந்தால் அந்தக் குழந்தைக்குத் திருமணம் ஆகாமல் இருக்க வேண்டும். வீடு கட்ட நினைக்கும் தனிநபரின் வயது 70 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் அவர்கள் வீட்டில் இருக்கும் யாரும் கடன் ஏதும் பெற்று இருக்கக் கூடாது. நன்மைகள் குறைந்தபட்சம் 30 சதுர மீட்டர், குறைந்த வருமான வரம்பில் உள்ளவர்கள் 60 சதுர மீட்டர், வருமான வரம்பு 1-ல் உள்ளவர்கள் 90 சதுர மீட்டர், வருமான வரம்பு 2-ல் 110 சதுர மீட்டர் வீடு கட்டலாம். 1 சதுர மீட்டர் = 10.7639 சதுர அடி    .  அனைவருக்கும் வீடு: ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ திட்டத்தில் ...

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing