#புத்தன்மௌனத்திற்கான
#காரணம்.
"காமத்தின் வாசனை...
தாயின் மார்ப்பை....
சுவைத்ததில்...
இருந்தே எட்டிர்ப்பார்க்கிறதோ..!!
இல்லை மார்ப்பில்..
இருந்தே தொடங்கும்படி...
சொல்லிக் கொடுத்ததோ..
சமூகம்!!
புரியவில்லை எனக்கு...
இதற்கு நேரெதிரான...
ஆணைச்சுட்டிக் காட்டி..
பெண்ணுக்கும்
இந் நிகழ்வு நிகழ்ந்து..!!?
நிகழ்ந்திருக்குமோ?!!
பெரும்பாலான...
தவறுகளுக்கு...
வக்கரம் கொண்ட சமூக..
மாந்தர்கள் காரணமாக...
இருக்கலாம்.
இருந்தென்ன...
"நீ இழுத்து மூடிக்கிட்டு..
போவேண்டியதானே" என்று சொன்ன
மூதாட்டியும்....
அனுபவப்பட்டுயிருப்பாலோ...
அந்த வார்த்தையின்னூடே...
அந்த வலிகளை யோசிக்கிறேன்.
யோசித்துக்"கொண்டே...
கடந்துச் செல்லும்...
பெண்ணின்
மேடுபள்ளங்களையும் இரசிக்கிறேன்.
ஆம்...
மனிதம் கற்றுக் கொடுத்ததோ..
இயற்கை வழிவந்ததோ...
தெரியவில்லையென....
என் தவறுகளுக்கு...
சமாதனம் சொல்கிறது...
பகுத்தறிவு.
இன்றையத்தேவை...
#ராமனல்ல...
#க்ருஷ்ணனே ...
பலப்பேரின் ஆடைகளை...
எங்கோ ஏதோவொரு..
மூலையில் அல்ல...
பொதுவானயிடத்திலே...
அனைவரும்...
முன்னிலையில்...
அனுபவப்படாத...
ஆறுவயது முதற்..
அனுபவப்பட்ட....
அறுபதும்....
தன் அகத்திற்குள்
ஆடை கலைத்து...
அங்கங்களை ருசிக்கிறது.
கூவி கூவி கூவி...
வலுக்கட்டாயமாக....
புனித வசனங்களையும்...
ஒழுக்கீன விதிகளையும்...
வீதிக்குவந்து...
தினித்து விற்க்கும்.....
கோவில்களையும்....
சர்ச்சுகளையும்...
மசூதுகளையும்.....
கேலியாகப் பார்க்கிறேன்.
சந்தர்ப்ப சூழ்நிலைகள்...
அமையவில்லை....
இருந்தாலும்...
இரவு வருட்டும்....
வேட்டையாடுகிறேன்...
மனதிற்குள் இருக்கும்..
மிருகம் சொன்னது...!!!!
பெண்னோ ஆணோ..
ஊனைச் சிதைக்கும்...
புணர்ச்சி பொழுதுகளில்...
கடவுளும்..
இறைத்தூதனும்...
தீர்க்க தர்சியும்...
செத்துப்போனார்கள்.
புத்தன்....
மௌனமாய்...
கடந்தே போனான்."
−−− மௌனீகன்.
No comments:
Post a Comment