Monday, 14 August 2017

#தேசிய_கொடி ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பது ஏன்?

நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி
வீசி பறப்பதற்கு முன் அதில் வைக்க பட்டுள்ள மலர்கள்
கீழே வந்து விழுவதை பார்த்து கை தட்டுகிறோம்.
ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக
சம்பவம் அடங்கி கிடக்கிறது அது என்ன
தெரியுமா?

இந்த கொடி மேலே ஏற அதாவது நாம்
சுதந்திரம் பெற எண்ணற்ற தாய் மார்களின்
கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது
என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது
மலர்கள் கீழே விழுந்து அதனை ஞாபக படுத்துகிறது.

இனி ஒவ்வொரு முறையும்
கொடியேற்றத்தைக் காணும்போதும் இதை
மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

அன்று அந்த நல்ல உள்ளங்கள் தங்கள்
கணவர்களை சுதந்திர போராட்டத்திற்கு அனுப்பாமல்
இருந்திருந்தால், நாம் இன்னும் எங்கேயாவது
செக்கு இழுத்துக் கொண்டுதான்
இருந்திருப்போம்!

அன்று......
கொடி ஏற்றியவர்கள் எல்லாம் சிறை சென்றனர்....
இன்று.....
சிறை செல்லவேண்டியவர் எல்லாம் கொடி ஏற்றுகிறார்கள்....
என்ன கொடுமை!

வாழ்க  பாரதம்!   ஜெய் ஹிந்த்!!!
🙏🏻🙏🏻

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing