கேட்டதை கேட்டபடியே வாரி கொடுக்கும் மிக அபூர்வமான சந்திர கிரகணம் 31:1:2018 அன்று புதன் கிழமை என்ன செய்ய வேண்டும். 150 வருடத்திற்க்கு ஒரு முறை வரும் அதிசயமான சந்திர கிரகணம்.
வறுமையைய் விரட்டி அதிர்ஷ்டத்தை வீட்டுக்கு அழைக்கும் அதிர்ஷ்டமான சந்திர கிரகணம்.கிரகண ஆரம்பம் ஆகும் பொழுது விளக்கேற்றி ஜபம் செய்பவர்களுக்கு நிச்சயம் பல கோடி மடங்குகள் பலன் கிடைக்கும்..அன்று சுத்தமான 5 நெய் தீபம் ஏற்றி அருகில் அமர்ந்து மந்திரங்களை சொன்னால் பலன்கள் அபரிவிதமான பலன்கள் கிடைக்கும்.இந்த கிரகண நேரத்தில் மந்திர உபாசனை தொடங்குவது சித்தியடையும் என்பது சித்தர்கள் வாக்கு நம் முன்னோர் தேவையில்லாத ஒன்றை அறிமுகம் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை நம்மிடம் ஏற்பட வேண்டும். அதற்கு ஆண்டவன் அருள் புரிய வேண்டும். ஆதவனிடமிருந்து சூடான கதிர்களைப் பெற்று, அதைக் குளிரச் செய்து நம்மைக் குளிர வைக்கிறான் சந்திரன். சூரிய கிரணங்களின் வெப்பத்தால் நீர் நிலைகளை குடிப்பதற்கும், குளிப்பதற்கும் உகந்த வகையில் தனது கதிர்க ளால் மாசற்றதாக மாற்றி அமைப்பவன் சந்திரன். செடி- கொடிகளில் தனது கிரணங்க ளால் மருத்துவ குணத்தைத் தோற்றி வைப்பவன் என்ற தகவலை தலை அசைத்து விஞ்ஞானமும் வரவேற்கும். உலகத்தின் தலைவன் சந்திரன். அவனுக்கு ஒன்று என்றால் நாம் செயல்பட வேண்டாமா?ஆகையால், சந்திர கிரகணத்தன்று அவனது உயர்வுக்காகவும் நமது நன்மைக்காகவும், தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரையைப் பின்பற்றுவோம்!
கோடி மடங்கு பலன் தரும் சந்திர கிரகண மந்திர ஜபம்
கிரகண நேரத்தில் நீங்கள் செய்யும் மந்திர ஜபத்திற்கு கோடி மடங்கு பலன் அதிகம். இந்த நேரத்தை , பெரிய பெரிய சித்தர்களும், ரிஷிகளும் – தவறாமல் பயன்படுத்துவர். அவர்களை பின்பற்றி , நாமும் இறையருளை வேண்டுவோம்..நமது நியாயமான கோரிக்கைகளை அந்த பரபொருள் கண்டிப்பாக நிறைவேற்றும்… !
இந்த பூமி , ஒரு குறிப்பிட்ட அச்சில் , வேகமாக சுற்றுகிறது… அந்த சுற்றும் விசையில் , வேகத்தில் வெளிவரும் சப்தமே – பிரணவ மந்திரமாகிய ‘ ஓம் ” , உலகில் உள்ள அத்துணை மதங்களிலும் – ஒலிக்கப்படும் மந்திரங்கள் அனைத்தும் இந்த பிரணவ மந்திர அதிர்வை ஒட்டியே இருக்கும்.
நமது மந்திர அதிர்வுகள் இந்த மந்திரத்தை ஒட்டி இருக்கும்போது , அபரிமிதமான பலன்கள் நமது ஆன்மாவுக்கு கிடைக்கிறது. ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர்ந்து நல்ல இசை கிடைப்பது போல ,அந்த இசையை நம் காத்து கேட்பதுபோலே , மனம் ஒன்றுவது போல – மந்திர அதிர்வுகளின் இசையில் இறைவன் உங்களை கவனிக்க ஆரம்பிக்கிறார் .
கிரகண நேரத்தை தவறாமல் பயன்படுத்தி –
” ஓம் சிவ சிவ ஓம் ” மந்திர ஜெபம் செய்யுங்கள்.
இதை முறைப்படி ஜெபித்து வர , உங்களுக்கு நீங்கள் செல்லும் பாதை , செல்ல வேண்டிய பாதை தெளிவாக தெரிய வரும்.
கூடிய விரைவில் உங்களுக்கே நீங்கள் தியானம் பண்ண வேண்டிய மந்திரமும், தகுந்த குரு ஒருவர் மூலம் கிட்டும். இறைவனிடம் நீங்கள் என்ன வேண்டுகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் பிறவியின் நோக்கம் என்ன , அதை எப்படி ஈடேற்றுவது என்கிற அத்தனை விஷயங்களும், இந்த மந்திர ஜெபங்களினால் உங்களுக்கு கிட்டும்.
திருமூலர் ஒரு மந்திரத்தை கன்ண்டு பிடிக்க ஓறாண்டு எடுத்து கொண்டார் நாம் அந்த மந்திரங்களை சொல்ல சிரிது நேரமாவது எடுக்க வேண்டாமா இறைவனி ஆசிகள் பெறுவதற்க்கு சொல்வோம்
ஒம் ஜ்ம் க்லீம் சௌ: சக்திதராய
ஓங் நங் மங் சிங் வங் யங் லம்போதராய
ஹரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சுப்ரமண்யாய
சரவணோத் பவாய ஹிரண்யோத் பவாய
க்லீம் சர்வ வச்யாய
தன ஆக்ருஷ்ய தம் பம் ஹம் ஜூம்
ஷம் ஸம் அதிர்ஷ்ட தேவதாய
ஷண்முகாய சர்வதோஷ நிவாரணாய
சர்வ க்ரஹ தோஷ நிவாரணாய
சிவாய சிவதனயாய இஷ்டார்த்த
ப்ரதாய காய கம் கணபதயே க்லௌம்
ஷம் சரஹண பவாய வசி வசி
(ஸ்ரீ சுகப்பிரும்ம மகரிஷி அருளிய கணபதி மாலா சரவண மந்திரம்)
தினம் 9,18,36, முறையும் பௌர்ணமி நாளில் 16 முறையேனும் ஜெபித்தால் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். அல்லது
ஓம் க்க்ருணி சூர்ய அதித்ய ஹ
என்ற சூர்ய மந்திரத்தை 1008 முறையும் தினம் 9, 27, 54, 108 எண்ணிக்கையில் உபாசனை செய்ய முகத்தில் தெய்வீக ஒளி, கண்பார்வை தீர்க்கமாகும்.
தீய சக்திகள் நெருங்காது,
பொண் பொருள் என்றுமே குறையாது
ஆண் வாரிசு இல்லாதவர்களுக்கு ஆண் வாரிசு உண்டாகும்
மூன்று லோகங்கலும் வசியமாகும்
கலியுகத்தில் விரைவில் பலன் தரும் மந்திரம்
சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 18 ஆம் நாள் 31.1.2018 புதன் கிழமை பெளர்ணமி தினத்தன்று பூசம் நட்சத்திரத்தில், ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் கடகம் இராசியில் கன்னியா லக்கினத்தில் சந்திர கிரகணம் ஆரம்பம் ஆகி முடிவடைகிறது.
சந்திர கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் அனுசம் கேட்டை உத்திரட்டாதி ரேவதி.வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி சந்திர கிரகணம் மாலை 5.16 க்கு ஆரம்பமாகி இரவு 8.40 க்கு முடிவடைகிறது.பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரகாரர்கள்’புதன்கிழமை பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.அதே போல புனர்பூசம் பூசம் ஆயில்யம் விசாகம் கேட்டை பூரட்டாதி அனுஷம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.
சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திரகிரகணமும், சூரியன் மறைக்கப்படும்போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.
• பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.
• சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்
கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
• கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ளக் கூடாது.
• கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது.
• ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.
No comments:
Post a Comment